(Reading time: 8 - 16 minutes)

"மீ???"ஏதோ புத்தகத்தில் ஆழமாகி போன தன் தாயை சீண்டினான் உடையான்.

"மீமீ?"

"ப்ச்...!என்னடா?"

"மீமீமீ??"

"அடி..!என்னடான்னு கேட்கிறேன்ல!என்ன?"

"ஏன்மா கோபப்படுறீங்க?"

"சரி...சொல்லு என்ன விஷயம்?"

"நாம..!எங்கேயாவது ஊர் சுற்றிட்டு வரலாமா?"-அவனது கேள்விக்கு அவனை விசித்ரமாய் ஒரு பார்வை பார்த்தார் தர்மா.

"என்னம்மா?"

"அவனவன் இந்த வயசுல கல்யாணம் பண்ணிட்டோ,இல்லை லவ் பண்ணிட்டோ பொண்ணுங்க கூட வெளியே போறான்.நீ என்னடான்னா இன்னும் அம்மாவை கூப்பிடுற?"

"மீ..!அது வேற!இது வேற!வரீங்களா?"

"சரி...எங்கே போகலாம்?"

"நான் ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு ஃப்ராப்பர்டி வாங்கினேன்ல!அந்த ஊர் செம்மயா இருக்கும்.அப்படியே பச்சை பசேலுன்னு இருக்கும்.உங்களுக்கும் பிடிக்கும்.நீங்க பர்மிஷன் கொடுத்தீங்கன்னா,ஒரு ஒரு மாதம் தங்கிட்டு வரலாம்!"

"ஒரு மாதமா??ம்.???நல்லா இருக்கும்னு வேற சொல்ற?ஆமா..!என்ன திடீர்னு ஐயா வெக்கேஷனுக்கு எல்லாம் ப்ளான் போடுறீங்க?"

"ம்??அ...அது...ஆ..!அங்கே அடுத்த ஆல்பத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்ணலாம்னு தான் மீ!"-தர்மா இதை நம்பவில்லை என்று அவர் பார்வையிலே தெரிந்தது.

"நம்புங்க மீ!"

"சரி...வரேன்!ராம்கிட்டயும் சொல்லிடு!"

"ஐ..!அவன் அங்கே போய் நீங்க வருவதற்கான ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டு இருக்கான்."

"அடப்பாவி!எல்லாம் ப்ளானிங்கா?வரமாட்டேன் போடா!"

"மீ..மீ!ப்ளீஸ் ப்ளீஸ்!"

"சரி..சரி..வரேன்!"

"லவ் யூ மீ!"-அவர் கன்னத்தில் முத்தமிட்டு ஓடினான உடையான்.

"பார்த்திபா!ஊர் பெயர் என்னன்னு சொன்ன?"

"ஆ..??ராஜசிம்மபுரம்!!"அசாதாரணமான பெயரை அதி சாாரணமாய் கூறி சென்றான் அவன்.

"............."-தர்மாவிடம் பதில் இல்லை.அவன் சரித்திரம் தொடங்கிய இடத்திற்கு திரும்புகிறான்.அதுவே நியாயமுமாகும்.அவன் அடையாளத்தை அவன் அறிய வேண்டியது அவசியமாகும்!!மறைக்கப்பட்ட உண்மை வெளியாக வேண்டிய காலம் கனிந்தது.இத்தனை ஆண்டுகள் தவம்!நான் அளித்த வாக்கு உடைப்பட வேண்டிய நேரம் நெருங்கிற்று.உடையான் தான் யாரென்று அறிய வேண்டிய தருணம் நெருங்கியது!!!

தாயிடம் அனுமதி பெற்ற களிப்பில் தனதறைக்கு வந்தவனின் மனம் சிறகடித்தது.அவளை கண்ட தருணம்!மீண்டும் காணப்போகும் தருணம்!மனதை குதூகலிக்க வைத்தது.இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் அவளைக் கண்டேன்.காணும் போதே இதயத்துள் ஆழமாய் தைத்த முகம்!!முதல் சந்திப்பே யுத்தத்தில் தானே தொடங்கியது.மீண்டும் அவளை காணவே செல்கிறேன்.இம்முறை தாயிடத்தில் எவ்வாறேனும் அவளை அறிமுகம் செய்தல் அவசியம்!தாயே விபரீதமாய் ஏதேனும் முடிவு எடுப்பதற்குள்,என் மன எண்ணத்தை அவரிடம் உரைத்தல் அவசியம்."நெகிழ்ந்தான் அவன்.

இவனோ இங்கு ஒருத்திக்காக காத்திருக்கிறான்.இவனுக்காக கண்டம்விட்டு கண்டம் தாண்டி ஒருத்தி காத்திருக்கிறாள்.விசித்ரமான விதி!எவருடன் எவரை பிணைக்க காத்திருக்கிறதோ!அதற்கு மட்டுமே வெளிச்சம்!!

ன்றிரவு....

"எந்த ஊரு?"

"ராஜசிம்மபுரம்!"-உடையானின் மொழிகள் செவிகளில் ரீங்காரமிட்டன.

விழிகளை இறுக மூடினார் தர்மா.

"இவன் வருவான்.திரும்பி வருவான்!செய்த தவறுக்களுக்கான தண்டனையை கொடுக்க என் மகன் மறுபடியும் இந்த ராஜசிம்மபுரத்துல காலடி எடுத்து வைப்பான்.அதுவரைக்கும் என்னுடைய பாதம் இந்த மண்ணுல பதியாது!"பல ஆண்டுகளுக்கு முன் செய்த சபதம் நிறைவேற போகிறது என்று ஆனந்திப்பதா?அல்லது தன் அன்பிற்குரிய ஒருவரின் சிரம் தாழ போகிறது என்று வருந்துவதா??நிகழ்ந்தது எல்லாம் நிகழ்ந்தது என்று உண்மையை உரைத்திருந்தால்,என் புதல்வன் இத்தனை ஆண்டுகள் அந்த வேதனையில் உழன்றிருக்கமாட்டான்.

என்ன நடக்கப் போகிறது??ஒரே பலம் கொண்ட இரு துருவம் மீண்டும் எதிர்க்க இருக்கின்றன.ஆனால்,இதில்,வெற்றி பார்த்திபனுக்கே கிட்ட வேண்டும்.இல்லையெனில்,ஒரு தாயின் வலி,கண்ணீர்,அனைத்தும் பயனற்றுப் போகும்.சிந்தனை செய்யும் போதே கண்ணீர் திரண்டு வழிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.