(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்

ennavale

க் டக் டக்  என்று கதவு தட்டும் ஓசையில் கீதா ரிஷியை விட்டு விலகினாள். அப்பொழுதும், ரிஷியின் கைகள் கீதாவின் கைகளை விடவில்லை.

கீதா, ரிஷியை கெஞ்சுவது போல பார்த்தாள்.

போ..... போய்  யாருனு பாரு? என்று கீதாவின் கைகளை விட  மனமின்றி ரிஷி விடுவித்தான்.

கீதாவிற்கோ, உடம்பு உதறல் எடுக்க ஆரம்பித்தது. வெளியில்  நிற்பது யாரோ? என் அறைக்குள் ரிஷி நிற்பதை பார்த்துவிட்டால் என்ன சொல்லி சமாளிப்பது? திரும்பி, ரிஷியை பார்த்தாள். அவன் இப்போதும், தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை  பார்த்தவளுக்கு தலையில் அடித்து கொள்ளலாம்  போல இருந்தது.

இவனுக்கு சுத்தமாக பயமேயே இல்லையா? எப்படி இவனால் மட்டும்  இவ்வளவு  தைரியமாக நிற்க முடிகிறது . கொஞ்ச நேரத்திற்கு முன்பு இவர்கள் இருந்த நிலைமையை யாரேனும் பார்த்து இருந்தால் என்னவாகி இருக்கும்.

கதவு லேசாக சாத்தி  இருந்தது. நடுங்கும் விரல்களை கொண்டு கதவை திறந்தாள். அங்கேயே ,  பருவதம் அம்மாள் சிரித்த முகத்துடன்  நின்று கொண்டு இருந்தார்.

கீதா, பருவதம் அம்மாவை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நேரம் நானும் ரிஷியும் நின்று இருந்த கோலத்தை பார்த்து இருப்பார்களோ? என்ற எண்ணமெயே கீதாவின் பயத்தை அதிகப்படுத்தியது.

கீதாவின், பயந்த முகத்தை பார்த்த பருவதம் அம்மாள் அவளது நெற்றியில் கை வைத்து பார்த்தார். அவளது உடம்பு முழுதும் ஜிலென்று இருந்தது.

அவளது உடம்பு முழுதும் வியர்த்து ஜிலென்று இருந்தது.

என்னம்மா, எதையாவது பார்த்து பயந்து விட்டாயா? ஏன் எப்படி இருக்கிறாய்? உடம்பு எல்லாம் ஜில்லுனு இருக்கு? என்று கேட்டவரின் குரலில் இருந்த உண்மையான பாசத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவளை அறியாமலையே, அவளது தலையை ஆம் என்பது போல ஆட்டிவிட்டாள்.

எதை பார்த்து பயந்தாய், என்று கேட்ட பருவதம் அம்மாளிடம்  கீதா என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தாள்.

கீதாவிடம் இருந்து பதில்வராததால், பருவதம் அம்மாள்  கதவை திறந்து கொண்டு அறையினுள் நுழைந்தார்

இதை, சற்றும் எதிர்பார்க்காத கீதா பயந்து நடுங்கி விட்டாள். இவ்வளவு நேரம், பருவதம் அம்மாளுக்கு எதுவும் தெரியாது. ஆனால், உள்ளையே ரிஷி இருப்பதை பார்த்துவிட்டால்  கண்டிப்பாக தவறாக நினைப்பார்.

அறையினுள், சென்ற பருவதம் அம்மாள், கீதாவை அழைத்தார். நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது  பாரத்தை போட்டு அறைக்குள் சென்றாள்.

ராஜகுட்டி, என் தங்கம் எழுந்துட்டீங்களா? என்று பருவதம்  அம்மாள் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தார். ஆனால், அங்கேயே ரிஷியாய் காணவில்லை. கீதா அறை முழுவதும் பார்த்தாள்.

பெரிய அறையாக இருந்தாலும் யாரும் மறைந்து  கொள்ளும் அளவிற்கு அங்கு எந்த பொருளும் இல்லை. ஒரு வேலை ரெஸ்ட் ரூம்யில் இருப்பானோ? என்று எட்டி பார்த்தாள். அங்கும் இல்லை. அவன் எங்கு சென்றான்? இருப்பது ஒரு வழி ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தவளை பருவதம் அருகில் அழைத்தார்.

இந்த அறையில் நீ எதை பார்த்து பயந்தாய்? சொல்லும்மா......என்று கீதாவிடம் கேட்டார்?

இல்லை, அது வந்து இங்கு ஒரு பூச்சியை பார்த்தேன் அது குழந்தையை கடித்து விடுமோ என்று பயந்து  விட்டேன்மா வேறொன்றுமில்லை ...

அவ்ளவுதானமா, இங்க எந்த பூச்சியும் இருக்காது,. நான் வேலை ஆட்களை கூப்பிட்டு இந்த  அறையை மறுபடியும் துடைக்க சொல்கிறேன் போதுமா? அதுக்கு என் இப்படி பயப்படுகிறாய்? ராஜகுட்டிக்கு ஏதும் ஆக நான் விடமாட்டேன் நீ கவலைப்படாதமா...

பிரியா, இதோ பாரு ராஜகுட்டி முழிச்சுட்டான். நீ அவனுக்கு பசி ஆற்றுமா என்று குழந்தையை அவளிடம் கொடுத்தார். கீதாவிற்கு, இப்போது என்ன  சொல்லுவது என்றேயே தெரியவில்லை. ஆனாலும் இதை சமாளித்துதானேயே ஆக வேண்டும்.

அம்மா, அதுவந்து எனக்கு குழந்தை பிறந்தப்போ உடம்புல தேவையான சத்துக்கள் இல்லாததுநாளா என்னால குழந்தைக்கு பால் குடுக்க முடியாம போய்டுச்சும்மா என்று வருத்தத்துடன் தெரிவித்தாள்.

அதை கேட்ட பருவத்தம்மாள், அதிர்ச்சி அடைந்தாலும் தன்னை போன்ற பெரியவர்கள் கூட இருந்து பார்க்கம்மாள் போனதுல வந்த வினை இது என்று எண்ணி கொண்டார். அதை கீதாவிடமும் கூறினார்.

தன் மீது கோபப்படுவார் என்று எண்ணிய கீதாவிற்கு அவரின் பேச்சில்லையே அவரது மனம் புரிந்தது. ராஜசேகர் தன் அம்மாவை எப்போதும் பெருமையாக பேசுவது என் என்று இப்போது புரிந்தது. ராஜசேகர் நினைத்து போன்றேயே எந்த குழந்தைக்கு பருவதம் அம்மாளின் அரவணைப்பு மிகவும் முக்கியம் என்று புரிந்தது. இவர்களின் அன்பில் வாழ நினைத்த இரண்டு ஜீவனும் எப்போது இல்லாதது நினைத்து கீதாவிற்கு அழுகையே வந்து விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.