(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர்கதை - அவ்விடம் எப்படியோ ? - தொலைதூர தொடுவானமானவன் – 04 - புவனேஸ்வரி கலைச்செல்வி

distantRelation 

அவ்விடம் எப்படியோ ?

ஒற்றை கேள்வியில்.

தினம் தினம் திளைக்கிறேன் !

 

என் கைப்பேசிக்கு வயது மூன்று !

ஆனால் அவன் வரவிற்குபின்

அதற்கும் இளமை ஊஞ்சலாடுகிறது !

 

நொடிக்கொருதரம்  அது சிணுங்கி சிரிக்க ,

நான் கிளிக்கி சிரிக்கிறேன் !

 

சிடுசிடு ஆண்கள் கதாநாயகர்களாம் !

கவலை மறந்து சிரிக்க வைப்பவருக்கு  ஈடாக முடியுமா ?

 

சின்ன சின்ன வார்த்தை அம்புகளினால்

இன்பமெனும் பூமழை பொழிந்து

அவன் மன்னனாகி என் மனதை

சமரமாக்கி அவன் பக்கம் வீசச் செய்கிறானே !

இதோ சிணுங்குகிறது என் கைப்பேசி மீண்டும் !

 

"மேடம் பிசியா ?"

என் நேரத்தை எல்லாம் கடத்தி சென்றும் கேட்கிறான் !

பேசாத நேரங்களிலும் என் சிந்தையை களவாடிவிட்டு கேட்கிறான் !

அவனுக்காக நேரம் ஒதுக்குவேன் என்றறிந்தும் கேட்கிறான் !

குறும்புடன் நகைக்கிறேன் !

 

"ஆமாம்பா .. மாமா வந்திருக்காங்க !"

 

"அத்தையின் ஹஸ்பண்டா ?"

 

"ச்சீ  ..ச்சீ .. என்னோட " என்றனுப்பிவிட்டு மௌனம் கொள்கிறேன் !

 

பதிலில்லை அவனிடம் !

காத்திருக்கிறானோ ?

இன்னும் விளையாடிடவா ?

 

"என்னோட அம்மாவின் தந்தையின்

மகனின் மனைவியின் மூத்த மகன் "

 

"ஏன்  இப்படி இழுக்கிறாய் ? "

 

"எப்போதுமே தூரமான உறவு அவன் " என்றேன்  ..

 

"உப்ப் " பெருமூச்சுடன் பதில் தந்தான் !

 

அந்த பெருமூச்சாவது சொல்லிடுமா? 

நான் அவனின் உயிர்மூச்சா ?

 

தொடரும்...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1171}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.