(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 33 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

பாரதியிடம் விடைபெற்று கிளம்பிய மதி நேராக கோர்ட் வளாகத்திற்கு சென்று முதலில் தனக்கு நம்பிக்கையான ஐந்து இன்ஸ்பெக்டர்களை அடுத்த அரை மணி நேரத்தில் கமிஷ்னர் அலுவலகத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தான்.... மேலும் சிலரை அழைத்து நரேஷிற்கும், நாராயணனுக்கும் தொடர்புள்ள அத்தனை இடங்களின் தகவல்களும் இன்னும் ஒரு மணி நேரத்தில் தனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆணையிட்டு இன்ஸ்பெக்டர்கள்  வருவதற்குள் நேரடியாக எதிரிலிருந்த துணிக்கடைக்கும், ஹோட்டலுக்கும் விசாரிக்க சென்றான்...

முதலில் ஹோட்டலுக்கு சென்ற மதி, அங்கிருந்த CCTV-யில் சந்தேகத்திற்கு உரிய முறையில் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என்று பார்வையிட ஆரம்பித்தான்...

“நீங்க இங்க எத்தனை வருஷமா மேனேஜரா இருக்கீங்க....”

“நான் மொதல்ல floor சூப்பர்வைஸராத்தான் சேர்ந்தேன் சார்.... ரெண்டு வருஷம் கழிச்சு மேனேஜர் ப்ரொமோஷன் கிடைச்சுது.... இப்போ அஞ்சு வருஷமா மேனேஜரா இருக்கேன் சார்....”

“இங்க தரை தளத்துல மட்டும்தான் CCTV இருக்கா... இல்லை எல்லா floor-லையும் இருக்குதா...”

“எல்லா தளத்துலையும் இருக்குது சார்.... மாடிப்படி ஏறுற இடத்துலயும், லிப்ட் உள்ளயும் இருக்கு.... அதே மாதிரி ஒன்பதாவது மாடி உணவகத்துலையும், மேல Roof top restaurant-லையும் இருக்கு சார்....”

“ஒ குட்.... எனக்கு கடந்த மூணு நாள்ல இந்த CCTV-ல பதிவான காட்சிகளை play பண்ணுங்க”

மேனேஜர் மூன்று நாட்கள் பதிவுகளை கம்ப்யூட்டர் திரையில் ஓடவிட்டார்...

“உங்களுக்கு இன்னைக்கு கோர்ட் வாசல்ல நடந்த சம்பவம் பத்தி தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...”

“ஆமாம் சார்... மதியம் விசாரணைக்கு வந்த இன்ஸ்பெக்டர் சொன்னார்... சந்திரன் சார் நல்ல மனுஷன்.... எங்க ஹோட்டல்ல கூட ஒரு பிரச்சனை வந்தப்போ அவர்தான் தீர்த்து வச்சார்...”

“ஹ்ம்ம் அவரை சுட்டவன் உயரமான இடத்துல இருந்துதான் சுட்டு இருக்கணும்... கடந்த ஒரு வாரத்துல உங்க ஹோட்டல்க்கு சந்தேகப்படுறா மாதிரி யாரானும் வந்து தங்கினாங்களா....”

“எனக்குத் தெரிஞ்சு இல்லை சார்... மதியம் இன்ஸ்பெக்டர் வந்து போன உடனேயே செக் பண்ணிட்டேன்... இது ஸ்கூல் நடக்கற டைம்... சோ வந்து தங்கற ஆளுங்களே ரொம்ப கம்மிதான் சார்... நிறைய ரூம்ஸ் காலியாத்தான் இருக்குது... இருக்கறவங்கள்ல நிறைய பேர் எங்களோட ரெகுலர் கஸ்டமர்ஸ்தான்... பிசினஸ் பண்றவங்க... மாசத்துல எப்படியும் ரெண்டு வாட்டி வர்றவங்க.... அவங்களைத் தவிர ரெண்டு பஸ்ஸ்டாப் தள்ளி ஒரு கல்யாண சத்திரம் இருக்குது...  அங்க இன்னைக்கு கல்யாணம் பண்றவங்க மொத்தமா பத்து ரூம்ஸ் ரெண்டு நாளைக்கு முன்னாடியே புக் பண்ணி இருந்தாங்க... அவங்க இருக்காங்க...”

“தனியா யாரானும் வந்து தங்கி இருக்காங்களா...”

“ரெண்டு பேர் IT கம்பெனி இன்டர்வியூக்கு வந்திருக்காங்க... அவங்களும் இன்னைக்கு காலைல காலி பண்ணிட்டாங்க சார்...”

“ஓ அவங்க ரெண்டு பேர் டீடைல்ஸ் கொடுங்க....”

“பொதுவா இங்க வந்து தங்கறவங்க முழு விவரமும் வாங்கிட்டுத்தான் சார் ரூம் கொடுப்போம்... அந்த பசங்க இன்டர்வியூ லெட்டர் வரை செக் பண்ணித்தான் ரூம் கொடுத்தோம்...”

மேனேஜர் கொடுத்த தகவல்களை ஆராய்ந்தபடியே CCTV காட்சிகளையும் ஆராய்ந்தான் மதி...

“அந்த பசங்க எந்த மாடில தங்கி இருந்தாங்க... அந்த காட்சிகளை ஓட விடுங்க....”

“நாலாவது மாடி சார்...”, என்று கூறியபடியே அந்த காட்சிகளை திரையில் ஓட விட்டான் மேனேஜர்....

“இதோ அந்த வெள்ளை சட்டையும், நீல சட்டையும் போட்டுட்டு லிப்ட்ல ஏறுறாங்களே அவங்கதான் சார்....”

“அவனுங்க மூஞ்சி தெளிவாத் தெரியறா மாதிரி zoom பண்ணி என்னோட போன்க்கு அனுப்பி விடுங்க.... அதே மாதிரி எனக்கு இந்த மூணு நாள் ரெகார்டிங் ஒரு copy கொடுங்க... உங்களுக்கு சந்தேகம் வர்றா மாதிரி ஏதாவது தோணிச்சுன்னா உடனே எனக்கு கால் பண்ணுங்க...”, என்று மேனேஜரிடம் மேலும் சில கேள்விகளுக்கு பதில்களைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி துணிக்கடைக்கு சென்றான்....

துணிக்கடைக்கு சென்ற மதி தரை தளத்திலிருந்து கடைசி மொட்டை மாடி வரை முழுவதும் அலசி ஆராய ஆரம்பித்தான்...

“உங்களைத் தவிர வேற யாரும் மொட்டை மாடிக்கு வர மாட்டாங்களா....”

“இல்லை சார்... நான் மட்டும்தான் தொட்டில தண்ணி செக் பண்ண வருவேன்... மத்தபடி ஆயாம்மா ரெண்டு மாசத்துக்கு ஒரு தபா கூட்டி பெருக்க வரும்...”

“இங்க வர்ற வழி எப்பவும் பூட்டித்தான் இருக்குமா....”

“ஆமாம் சார்... டெய்லி காலைல நான்தான் திறந்து டான்க் செக் பண்ணிட்டு பூட்டிடுவேன்... ரெண்டு சாவி இருக்குது... என்னாண்ட ஒண்ணு இருக்குது... இன்னொண்ணு மேனேஜர் கைல இருக்கும்.... ஆயாம்மாக்கு கூட நான்தான் தொறந்து விடுவேன்....”

“இன்னைக்கு காலைல நீங்க இங்க வரும்போது ஏதானும் வித்யாசமா இருந்துச்சா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.