(Reading time: 11 - 21 minutes)

“எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலை சார்... தினம் இருக்கறா மாதிரிதான் இருந்துச்சு...”, மதி மொட்டை மாடி முழுவதும் ஆராய ஒரு இடத்தில் மட்டும் காலடித்தட சுவடு இருந்தது....

“கடைசியா எப்போ இந்த மாடியை சுத்தம் பண்ணினாங்க வாட்ச்மேன்....”

“அது ஒரு மூணு வாரம் இருக்கும் சார்....”,வாட்ச்மேன் கூற மதி அந்த காலடித் தடம் இருந்த இடத்தை அடைந்து ஆராய்ந்தான்...

காலடித்தடம் கதவிடமிருந்து ஆரம்பித்து தண்ணீர் தொட்டியின் அருகில் முடிந்திருந்தது... அந்தத் தண்ணீர் தொட்டி அருகில் சென்று பார்க்க நேராக கோர்ட் வளாகம் தெரிந்தது...

“இங்க இருந்துதான் சுட்டு இருக்கணும்...”

“என்ன சார் சொல்றீங்க... இங்க யாரும் வர முடியாது சார்... சாவி என்கிட்டே இருக்குது... மேனேஜர் சார் ரெண்டு நாளா லீவு... அப்பறம் எப்படி உள்ளாற வர முடியும்....”

“துப்பாக்கி வச்சு சுடற அளவுக்கு திறமை இருக்கறவனுக்கு இங்க வர்றதா பெரிய விஷயம்.... மேனேஜர் லீவுன்னா அவரோட வேலையை யார் இந்த ரெண்டு நாளா பார்க்கறாங்க....”

“அது ப்ரியா பொண்ணு பார்க்கும் சார்....”, வாட்ச்மேனிடம் தகவல் பெற்ற மதி, நேராக ப்ரியாவிடம் சென்று இரண்டு நாட்களில் பதிவான CCTV காட்சிகளை காண்பிக்க சொன்னான்...

அதிலிருந்த காட்சிகளில் சந்தேகப்படும்படி எந்தக் காட்சிகளோ, இல்லை நபர்களோ இல்லாத காரணத்தால் அவர்களிடம் பதிவுகளை வாங்கிக் கொண்டு கமிஷ்னர் அலுவலகம் நோக்கி கிளம்பினான்....

“Thank you இன்ஸ்பெக்டர்ஸ்... சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க... உங்களுக்கு சந்திரன் சார்க்கு இன்னைக்கு காலைல குண்டடி பட்டது தெரிஞ்சிருக்கும்... அவர் இப்போ எடுத்து நடத்தற ரெண்டு வழக்குமே  ரொம்ப சென்சிடிவானது...  அதுல சம்மந்தப்பட்டவங்க செஞ்சாங்களா... இல்லை வேற யாராவதான்னு கண்டுபிடிக்கணும்... ஆனா அதுக்கு முன்னாடி நமக்கு இருக்கற முக்கிய வேலை என்னன்னா உங்களுக்கு சந்திரன் சார் அஸிஸ்டென்ட் பாரதியைத் தெரியுமா...”

“அந்தப் பொண்ணைத் தெரியாம இருக்குமா சார்... ஊர்ல இருக்கற அத்தனை போலீஸ் ஸ்டேஷன்க்கும் அந்தம்மா விஜயம் செய்திருக்காங்க... கண்டிப்பா ஒரு குற்றவாளி அவங்க பிடிச்சு குடுத்தவங்களா இருப்பாங்க....”

“சந்திரன் சார்விட பாரதி அதிக பிரபலம் போல... அவங்களுக்கு ரொம்ப வேண்டியவங்களை கடத்திட்டாங்க... நாலு மணிக்கு கேஸ் ஹியரிங் ஆரம்பிக்கறதுக்குள்ள நாம அவரை ட்ரேஸ் பண்ணனும்... அவர் பேர் ராஜா... இது அவரோட போட்டோ...”, மதி இன்ஸ்பெக்டர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது போலீஸ் அதிகாரி ஒருவர் உள்நுழைந்து நரேஷ் மற்றும் நாராயணன் ஆகியோரின் சொத்துக்கள் உள்ள இடங்களின் விவரங்களை வழங்கினார்....

“வாங்க ஜனா.... எல்லா தகவலும் இதுல இருக்கா...”

“எஸ் சார்... நரேஷ், நாராயணன் மற்றும் அவங்க பினாமி பேர்ல வாங்கின எல்லா டீடைல்ஸும் இதுல இருக்கு...”

“ஜனா இதுல பக்கத்துல சர்ச் இருக்கறா மாதிரி ப்ரோபெர்ட்டி இருக்குதா....”

“சார் அதுல ப்ரோபெர்ட்டி பக்கத்துல அந்த ஏரியாவோட முழு வரைபடமும் இருக்கு சார்... கிட்டத்தட்ட எல்லா இடத்துலயுமே சர்ச் இருக்குது....”

“ஹ்ம்ம் இல்லை ஜனா ரொம்ப பக்கத்துல எந்த இடத்துல இருக்கு....”

“அது ஒரு ஆறு  இடத்துல இருக்கு சார்... நரேஷ் இடம் நாலு நாராயணன் இடம் ரெண்டு.... எல்லாமே தோப்புங்க.... அந்த தோப்பு முடியற இடம் இல்லைன்னா ஆரம்பிக்கற இடம் இப்படி இருக்கு...”

“சூப்பர் தேங்க்ஸ் ஜனா... பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க... ஓகே இன்ஸ்பெக்டர்ஸ் இப்போ நாம ராஜா இருக்கற இடத்தை தேட ஆரம்பிக்கலாம்....”

“சார் ராஜா காணும் அப்படின்னா மொதல்ல அவங்க இடத்தைத்தான் தேடுவோம்ன்னு அவனுங்களுக்குத் தெரியும் சார்... ஸோ வேற ஏதாவது இடத்துல வச்சிருக்க வாய்ப்பு அதிகம் இருக்குது....”

“இருக்கலாம் இன்ஸ்பெக்டர்... ஆனா நமக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு.... அதுக்குள்ள நாம கண்டுபிடிக்கணும்.... அவங்க அம்மாதான் ராஜாவை கடைசியா பார்த்து இருக்காங்க.... காலை அவர் பேங்க் போயிட்டு வந்து தாமதமாத்தான் காலேஜ் போய் இருக்கார்... அவர் 11 மணிக்குத்தான் வீட்டை விட்டு கிளம்பி இருக்கார்.... எங்களுக்கு அடுத்த ரெண்டு மணி நேரத்துலையே போன் வந்துடுச்சு... ஸோ கடத்தினவங்களுக்கும் அதிக நேரம் இல்லை.... அதனால மொதல்ல இந்த இடங்கள்ல தேடலாம்....”, மதி காவல்துறை அதிகாளிகளுக்கு அவர்கள் சென்று ஆராய வேண்டிய இடங்களை கூறிவிட்டு தானும் நான்கு காவலர்களுடன் வேளச்சேரி அருகில் இருக்கும் இடம் நோக்கி பயணப்பட்டான்...

மதி பாதி வழி சென்று கொண்டிருக்கும்போதே சூளைமேடு பக்கம் சென்ற இன்ஸ்பெக்டரிடம் இருந்து அழைப்பு வந்தது...

“சார் இங்க சூளைமேடு உள்ள சின்ன தோப்பு பங்களா இருக்குது... அதுல இருந்து ரெண்டு வீடு தள்ளி ஒரு சின்ன சர்ச் இருக்குது சார்.... அந்த பங்களா உள்ளதான் ராஜாவை கட்டி வச்சிருக்காங்க... நாலு பேர் இருக்காங்க சார்... இப்போ அவங்களை அர்ரெஸ்ட் பண்ணி ராஜாவை ரிலீஸ் பண்ணிடலாமா....”

“இத்தனை பக்கத்துலதான் வச்சு இருக்காங்களா... நீங்க எத்தனை பேர் இருக்கீங்க இன்ஸ்பெக்டர்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.