(Reading time: 3 - 6 minutes)
Tholaithoora thoduvaanamaanavan
Tholaithoora thoduvaanamaanavan

கவிதைத் தொடர்கதை - ஆண் மயிலாவானோ ? - தொலைதூர தொடுவானமானவன் – 05 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ணக்கம் தோழமைகளே ! நீண்ட .. ம்ம்ஹ்ம்ம்ம் யுகஇடைவேளைக்கு (கொஞ்சம் அதிகப்படியா இருக்கோ ?) பிறகு தொடர்கிறேன் இந்த தொடரை . கண்டிப்பா முன்னாடி அனுப்பின பதிவுகள் நினைவில் நிறுத்துவது கஷ்டம் அப்படிங்குறதுனால , கதை சுருக்கத்தை நான் கதாநாயகியின் குரலாக பதிவிடுறேன் .. இதை படிச்சிட்டு அடுத்த பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன் -புவி

 

அவள் : "தொலைத்தூர தொடுவானமானவன், ஆகிய அவனும் நானும் சந்தித்து கடக்கும் பயணம் இது . ஒரு செயலியின் மூலம் , நண்பர்களுக்கு இடையில் புதிய நண்பனென அறிமுகமாகிறான்  என்னவன் . ஏனோ  அவனை பற்றி அறிந்துகொள்ள அப்படியொரு பேரார்வம் எனக்கு . அவனுடன் உரையாட தொடங்குவதே நான்தான் . எங்களிடையே மிக எளிமையான அழகான நட்பு மலர்கிறது . அந்த மலர் பலவித உணர்வுகளாக மணம்  வீசிட , அவனை சீண்டி பார்க்க ஆசைப்பட்ட நான் , எனது மாமாவை சந்தித்தாக கூறினேன் . அவனது மெல்லிய அதிர்ச்சி எனக்குள் பெருமகிழ்ச்சியை உருவாக்கிய காரணம் நான் இன்னும் அறியவில்லை . (நம்பிட்டோம்- புவி  ) மேற்கொண்டு என்னவன் உடனான பயணத்தை கண்டுகளிக்க  வாரீர் !

 


 

ஒருமுறை சீண்டியதற்காக

வரைமுறையின்றி தூண்டுகிறான் !

 

எத்தனை பெண்தோழிகள் ?

கேட்டிருக்க வேண்டுமா நான் ?

 

ஐந்து வயதில் முத்தமிட்டவள் !

பள்ளியில் அவனை வட்டமிட்டவள் !

பதின்ம வயதில் தவிக்க விட்டவள் !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.