(Reading time: 3 - 6 minutes)
Tholaithoora thoduvaanamaanavan
Tholaithoora thoduvaanamaanavan

ஒரே அலுவலகத்தில் சண்டையிட்டவள் !

 

தினம் தினம் நீள்கிறது அவன் பட்டியல் !

ஏனோ கொஞ்சமும் இனிக்காமல்  போனது உரையாடல் !

 

வாதங்கள்  தொடங்கும்முன்னே

மாதங்களின் வில்லன் வயிற்றில் குருதி அம்பு தொடுத்து விட்டான் !

 

"மாதவிடாய் !"

 

எத்தனை தொலைக்காட்சியில் பெண்ணானவள் பறக்கிறாள்  ?

அத்தனையும் வெறுக்கிறேன் !

உடல் வலி ஓங்கி

மன வலிமை தேங்கி

எண்ணங்களும் வீங்கி போன

உண்மை எவர் அறிவார் ?

 

யாருக்கும் புரிவதில்லை !

புரிந்திருந்தால், இங்கு துரியோதனங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் !

 

 

மீண்டும் குறுந்தகவல் அவனிடம் !

"மேடம் பிசியோ ? இன்னைக்கு ஆபிஸ் பொண்ணுங்களோடு லன்ச் போறேன் .. என்ன சாப்பிடலாம் ஐடியா கொடு !"

 

திறன்பேசி மட்டும் மரத்தில் காய்த்திருந்தால்

அதை சுவற்றில் எரிந்து உடைக்க வாய்த்திருக்கும் !

 

அடேய் , என்னை அசைக்கும் அசடே !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.