(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - என்னவளே - 07 - கோமதி சிதம்பரம்

ennavale

ங்கேயோ, கேட்ட குயிலின் சத்தம் கீதாவின் தூக்கத்தை கலைத்தது.

கண் முழிக்ககூட முடியாத அளவிற்கு தலை பாரமாக உணர்ந்தாள். கண் விழித்தும், தான் இருப்பது   ராஜசேகர் வீடு என்பதை உணர்வெயே அவளுக்கு ஐந்து நிமிடம் தேவைப்பட்டது.

நேற்று இரவு, ரிஷி சேகர் உடன் தன்னை சேர்த்து சந்தேகப்பட்டதை அவளது மனம் அவளுக்கு ஞாபகப்படுத்தியது. இனி ஒரு போதும் ரிஷியிடம் தனது காதலை வெளிப்படுத்த கூடாது.

ரிஷியிடம் இருந்து வெறுப்பை மட்டுமேயெ பெற வேண்டும். அதுவே, இருவரது வாழ்க்கைக்கும் நல்லது என்று முடிவு எடுத்தாள்.

இதற்கு மேலும்,  இதை பற்றி நினைக்க கூடாது என்று நினைத்தவள்.  அவளது அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள். மணி அதிகாலை 5:30 என்று காட்டியது.

வேகமாக, எழுந்து குளித்து முடித்து குழந்தையை காண  பருவதம் அம்மாள் அறைக்கு சென்றாள்.

அன்று மலர்ந்த ரோஜாப்பூ போல தன் முன் வந்து நிற்கும் கீதாவை பார்த்த பருவதம் அம்மாவாள் அவளை தவறாக எண்ண முடியவில்லை. 

அதேயே நேரத்தில். கீதாவின் கண்களில் தெரிந்த சோகத்தையும் அவர் கண்டு கொண்டார்.

அம்மா, ராஜா குட்டி இன்னுமா தூங்குறான்? உங்கள நைட் எல்லாம் படுத்தி எடுத்துட்டான்ய்யா? என்று கேட்டு கொண்டேயே தொட்டிலில் தூங்கி கொண்டு இருக்கும் குழந்தையின் அழகை ரசித்தாள்.

பிரியா, உன்னை பார்த்தால் சிட்னியில் இருந்து வந்தவள் போலவேயே இல்லைதெரியுமா.... என்று அவளது கூந்தலை வருடினார்.

அம்மா உங்க பையனுக்கு  இப்படி இருந்த தான் பிடிக்கும். இல்ல அவ்ளோதான்.... என் காது ரெண்டும் திருகி இரத்தமேயே வர வச்சுடுவாரு என்று கூறி  சிரித்தாள்.

அதும் இல்லாம அங்க நான் படிக்கச் மட்டும் தான் போனேன்.

அவள் உரிமையுடன் பேசுவதிலேயே கீதாவிற்கும்  ரஃஜசேகர்க்கும் எதோ ஒரு பந்தம் இருப்பதை பருவதம் அம்மாள் உணர்ந்தார்.

அமைதியாக நின்ற பருவதம் அம்மாள், நேற்று போல் இன்றும் தான் சேகர் பற்றி பேசியதை கேட்டு அழுது விடுவாரோ என்று கீதா பயந்தாள்.

பருவதம் அம்மாளை மேலும் யோசிக்க விட கூடாது என்று நினைத்த கீதா . அம்மா நான் கிச்சன் சென்று ஏதேனும் வேலை செய்யட்டுமா என்று கேட்டாள்.

இங்கு அதற்கு எல்லாம் ஆட்கள் உண்டு பிரியா. பூஜை அறையை மட்டும் தான் சுத்தம் செய்ய வேண்டும். அதை எப்பொழும் நான் தான் செய்வேன்.

நீ, வேண்டுமானால் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு தோட்டக்காரன் கிட்ட பூஜைக்கு பூக்கள் வாங்கிட்டு வாம்மா .

நானும் அதற்குள் குளித்து விட்டு பூஜை செய்ய வருகிறேன்.

அம்மா! ராஜகுட்டி எழுந்துட்டா? நீங்க குளிச்சு முடிச்சு வர வரைக்கும் நான் ராஜகுட்டி கூட இருக்கவா?

வேண்டாம், பிரியா ராஜகுட்டிய பார்த்துக்க நேற்றையே ரெண்டு லேடீஸ்யா வேலைக்கு வச்சுட்டேன்.

நாம,  இல்லாத போது அவங்க பார்த்துக்குவாங்க. ரொம்ப நம்பிக்கையானவங்கமா.என்று கூறிய பருவதம் அம்மாளிடம் இருந்து சிரித்த முகத்துடன் தலை அசைத்துவிட்டு கீதா தோட்டத்திற்கு சென்றாள்.

தோட்டத்திற்கு செல்லும் கீதாவையை பார்த்து கொண்டு இருந்த பருவதம் அம்மாள் மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தது .

முதலில் யார் இந்த பிரியா ? இவளுக்கும் சேகர்க்கும் என்ன சம்மந்தம்?......

இல்லை... ரிஷிக்கும் இவளுக்கும் தான்  எதாவது சம்மந்தம் உள்ளதா? இத்தனை  சந்தேகத்திற்கு மத்தியிலும் பிரியாவின்  மீது  கோபம் என்பது சிறிதும் ஏற்படவில்லை.

இவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள்? என்பது தெரிந்து இருந்தும்......  ஏதோ ஒன்று அவளை தவறாக நினைக்க விடாமல் தடுக்கிறது.

பிரியா, தன்னிடம் சிரித்து கொண்டு பேசினாலும்.... அவளது கண்களில் எதோ கவலை தெரிகிறது ....

யோசிக்க யோசிக்க  பருவதம் அம்மாவால்.... எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

 சீக்கிரம், தனது அண்ணன்  இங்கு வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டார். இப்போதைக்கு இந்த பிரச்சனைக்கு முடிவு  என்பதை அவர் மட்டுமேயெ தர முடியும் என்று எண்ணினார்.

தோட்டத்திற்கு வந்த  கீதா, பருவதம் அம்மாள் சொன்னது போலவேயே தோட்டக்காரனிடம் இருந்து  அனைத்து பூக்களையும் வாங்கி கொண்டு பூஜை அறைக்கு செல்ல நினைத்தாள்.

ஆனால், தோட்டத்தின் அழகு அவளை கவர்ந்தது. இங்கு  வந்து முழுதாக ஒரு நாள்  ஆன  பிறகு தான் அவளுக்கு தோட்டத்தை  ரசிக்கவேயே நேரம் கிடைத்து உள்ளது  . அந்த வீட்டின் தோட்டக்காரர்கள் மிகவும் அழகாக அந்த பராமரித்து  இருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.