(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 07 - ஸ்ரீ

anbin Azhage

“நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..

பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..

முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்

காதல் தானே ..

இது காதல் தானே

உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,

நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை

எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,

இன்னும் போக மறக்கவில்லை …

 

விண்ணை தொடுகின்ற முகிலை ..

வெள்ளி நினைவை .. மஞ்சள் நட்சத்திரத்தை ..

என்னை தேடி மண்ணில் வரவழைத்து உன்னை காதலிப்பதை உரைத்தேன் ..

இன்று பிறக்கின்ற பூவுக்கும் .. சிறு புல்லுக்கும் ..

காதல் உரைத்து முடித்தேன்

உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் ,

இன்னும் சொல்லவில்லையே இல்லையே …

ன்றைய நாளின் கேலி அதன் பின் அவ்வப்போது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.அப்படியாய் தன் மடிக் கணிணியில் பார்வை பதித்திருந்தவன்,

“திஷா டியர் ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன் உன் எப் பி ஐடி என்ன?”

“எனக்கு அக்கௌண்டே இல்லங்க”,என்றவள் அவள்போக்கில் துணியை மடிக்க அவன் அவளை விசித்திரமாய் பார்த்தான்.

“நிஜமாவா சொல்ற?”

“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு நிஜமாவே இல்ல..ப்ரெண்ட்ஸ்னு நேர்ல பேசவே ஆள் இல்ல இதுல முகம் தெரியாத நட்புகள் கிட்ட நா என்ன பேசுறது..எப்பவுமே தனிமை தான் என் கம்பனியன்..”

“நீ ரொம்பவே வித்யாசமானவ தான் திஷா..”

மென்மையாய் சிரித்தவள் அவனிடம்,”ஆமா உங்களுக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்கனு சொல்றீங்களே,இதுல எந்தளவு நம்பிக்கை இருக்கு உங்களுக்கு?”

மடிக்கணிணியை முடியவன்,”ம்ம் உன் கேள்வி புரியுது திஷா..நட்புங்கிறது எப்பவுமே எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்..நா இருக்குற இடத்துல என்னை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும் அப்படிபட்டவன்னு வச்சுக்கோயேன்.பட் இந்த சோஷியல் நெட்வொர்க்னு வந்தப்பறம் அது இன்னமும் ஆச்சரியமான ஒரு விஷயமா மாறிச்சு..

ஆரம்பத்துல என் ப்ரெண்ட்ஸோட ப்ரெண்ட்ஸ் ரெக்வர்ஸ்ட் குடுத்தா கொஞ்சம் யயோசிச்சு தான் அக்செப்ட் பண்ணுவேன்.ஆனா அதில ஒண்ணு ரெண்டு பேர் ஷேர் பண்ற டீடெய்ல்ஸ் போஸ்ட்ஸ் அவ்ளோ யூஸ்புல்லா இருக்ககும்..சோஷியல் அக்டிவிட்டீஸ்,ட்ரஸ்ட் வொர்க்ஸ் இன்னும் எத்தனையோ நானே நிறைய நேரம் வாலண்டியரா போய்ருக்கேன்..

ஆனா அவங்களயெல்லாம் நநா நேர்ல பாத்ததுகூட இல்ல தான்..பட் இந்தமாதிரி இடத்துல நாம சந்திக்குற மனிதர்கள் அவங்க லைப்னு எத்தனையோ விஷயம் இருக்கு..முகம் பார்க்காம அவ்ளோ பேசி தற்செயலா அவங்கள மீட் பண்ணும் போது ஒரு எக்ஸைட்மெண்ட் அது சான்ஸே இல்லடா..

எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு..நாம சூஸ் பண்ற பாதையை பொறுத்து நம்ம பயணம் இருக்கும் அவளோ தான்..”

“ம்ம் கரெக்ட் தான் பட் நீங்க சொல்ற அளவு நல்லது நிறைய இருக்கலாம் ஆனாலும்…”

“திஷா பேபி நாம நாளைக்கு வெளில போறோம் அப்போ உனக்கு கண்டிப்பா நா சொல்றது புரியும்..”

“வெளிலயா அதெல்லாம்..”,அவள் முடிப்பதற்குள் அவன் பார்வை அவளை துளைக்க.

“சாரி இனி அப்படி சொல்லல போலாம்..”என மெதுவாய் புன்னகைத்தாள்.

கூறியபடியே இருவருமாய் மறுநாள் கிளம்பி வர மதிய உணவு வெளியே பார்த்துக் கொள்தாய் கூறிவிட்டு தன்னவளை அழைத்துச் சென்றான்.

நேராய் அந்த பெரிய ஹோட்டலின் முன் காரை நிறுத்திவிட்டு ரிசர்வேஷன் விவரங்களை கூறிவிட்டு காத்திருக்க சற்று நேரத்தில் அவர்களுக்கான டேபிளை காட்டி அமரச் செய்தனர்.

அதுவரையுமே அமைதியாய் இருந்தவள்,”அப்படி யாரு தான் வராங்க!இப்போவாவது சொல்லலாம் தான?”

“ம்ம் சொல்லிட்டா போச்சு..உன்னோட முகம் தெரியாத எனிமி தான் வரா..”

“புரில யாரு அது?”

“சாருதான் வர்றா..”,என்றவன் சிரிக்க,

“அவங்க என் எனிமினு நா எப்போ சொன்னேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.