(Reading time: 13 - 25 minutes)

“சொன்னா தான் தெரியணுமா அதான் இப்போ கூட முகத்துல தெரியுதே”,என சீண்டும் போதே அவனுக்கு அழைப்பு வர ததானிருக்கும் டேபிளை பற்றி கூறியவாறே கை காட்ட அவன் பார்த்த திசையை பார்த்தவளுக்கு கண்கள் விரிந்தன.

தன்னவனை பார்த்தவளுக்கு அவன் குறும்பு பார்வை பதிலாய் கிடைக்க,”அவங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா??!!!”

“ஹா ஹா திஷா டியர் ரிலாக்ஸ் எதுவாயிருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்..நானே இப்போ தான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன் அவளை நேர்ல..சோ நோ சண்டை ப்ளீஸ் ப்ளீஸ்”,என்பதற்குள் அவர்கள் அருகில் வந்தவள் இருவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்தவாறே அவர்களுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்து தன் பக்கத்து இருக்கையில் அந்த அழகிய ரோஜா செண்டாய் இருந்த தன் நான்கு வயது மகளை அமர வைத்தாள்.

“ஹாய் எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்..”

“நீதான் சொல்லனும் இரண்டு பேரும் ஜோடிப் பொருத்தம் எப்படினு”,என அபினவ் தன்னவளின் தோள் சுற்றி தன்புறம் இழுத்துக் கூற

தன் கைகளால் திருஷ்டிகழித்து நெட்டி முறித்தவள் செமயா இருக்கீங்க போங்க..என்றுசிரித்தாள்.

“என்ன திஷானி இப்படி ஷாக்ல இருக்கீங்க..என்னாச்சு என்னை பத்தி ஏதாவது ஏடாகூடமா சொல்லி வச்சுருக்காங்களா??”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நீங்க மேரீட்னு எனக்கு தெரியாது அதுவும் குழந்தையோட பாத்தவுடனே சர்ப்ரைஸ் ஆய்டுச்சு..”

மகனே இந்த வேலைய வேற பண்ணி வச்சுருக்கியா கடவுளே சமாளிப்போம்..என மனதிற்குள் நொந்தவள்,

“ஹா மேடம் பேரு ஆருத்ரா இப்போ தான் ஸ்கூல் போக ஆரம்பிச்சுருக்காங்க”,என்று கூற சிறியவளோ அழகாய் சிரித்தாள்..

“ஹாய் ஆன்ட்டி ஹாய் அங்கிள்”

“ஹாய்டா செல்லம்..எப்படியிருக்கீங்க..”,என அபினவ் கைநீட்ட கைகுலுக்கி சிரித்தாள்.

“அப்பறம் மேடம் ஆன்சைட் லா எப்படி இருந்தது..”

“ஹாங்ங் என்ன தான் சொல்லுங்க நம்ம ஊரோட சுகமே தனிதான்..முடில..அதான் என் ஆளை அங்கேயே தவிக்க விட்டுட்டு நா ஓடி வந்துட்டேன்..அவரு நெக்ஸ்ட் மந்த் வராரு..”

“மனுஷன் நிம்மதியா இருக்காருனு சொல்லு..”

“எப்படி நீங்க லீவ் முடிஞ்சு வேலைக்கு போகும் போது இருப்பீங்களே அப்படியா??”,என குறும்பாய் திஷானியை பார்க்க அவளே சிரித்திருந்தாள்.

“அடிப்பாவி வந்த அஞ்சாவது நிமிஷம் கூட்டுசேர்த்துட்டியா!!சரி புதுசா கல்யாணம் முடிஞ்சுருக்கு முதல் தடவை பார்க்க வரோமே எதாவது கிப்ட் வாங்கிட்டு வருவோம் அதெல்லாம் இல்ல..அப்படியே ஜாலியா வந்துர வேண்டியதுது..”

“அய்யே அலையாதீங்க எல்லாம் வச்சுருக்கோம் என்றவள் தன் பையிலிருந்து அந்த பரிசை எடுத்து நீட்ட இருவருமாய் பெற்றுக் கொண்டனர்.

உணவை ஆர்டர் செய்து மூவருமாய் உண்ண ஆரம்பிக்க குழந்தையும் அவளாய் எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.

தற்செயலாய் திஷானியை கவனித்தவளுக்கு அவள் பார்வை தன்னை அவ்வப்போது தீண்டிச் செல்வதை உணர முடிந்தது.ஏதோ கூற வருகிறாள் என்பதை உணர்ந்து சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தாள்.

அதன்பின் மெதுவாய் குழந்தை சிணுங்க ஆரம்பிக்க அதையே காரணமாய் வைத்து அபினவிடம்,

“அங்க ப்ளே ஏரியா இருக்குதான கொஞ்சம் கூட்டிட்டு போய்ட்டு வாங்களேன் நா அதுகுள்ள சாப்ட்டு வரேன்..சாரி..”

“ஹே லூசு இதுக்கு எதுக்கு சாரி நீங்க வாங்க மை ப்ரின்ஸஸ்..வந்துரேன் திஷா டியர்..”,என்றவாறு அவன் எழுந்து செல்ல..

“திஷானி ஏதோ அன்கம்பர்டபிளாவே இருக்கீங்களே என்னாச்சு..நா வந்ததுல எதுவும் ப்ராப்ளமா?”

“ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்ல சாரு..அக்சுவலா சாரி சொல்லணும் உங்ககிட்ட இவரு உங்களோட கால் பேசும் போதெல்லாம் மனசுக்குள்ள திட்டிருக்கேன்..எனக்குள்ள தான்னாலும் ஏனோ உங்களை பார்த்த அப்பறம் ஒரு மாதிரி கஷ்டமாயிடுச்சு..”

“புரியுது டா..எந்த வைஃப் க்கு தான் ஹஸ்பெண்ட் இன்னொரு பொண்ணோட மொக்க போடுறத பொறுத்துக்க முடியும்..அதுவும் எப் பி ப்ரெண்ட்னா கண்டிப்பா அப்படி நினைக்க தோணும் தான்..”

“ம்ம்”

“பட் நிஜமா சொல்லணும்னா நாங்க இந்தளவு நல்ல ப்ரெண்ட்ஸ் ஆவோம்னு நினைச்சதேயில்ல.அதுவும் உங்கள பாத்துட்டு வந்தவுடனே என்கிட்ட விஷயத்தை சொன்னப்போ எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் தெரியுமா..”

“என்னைப் பத்தியா??”

“ம்ம் உங்களை பாத்த அன்னைக்கே உங்க ஆளு ப்ளட்..அத்தனை ஸ்ட்ராங்கா பேசினாங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.