(Reading time: 13 - 25 minutes)

“ம்ம் எனக்கு இன்னுமே இந்த ரிலேஷன்ஷிப்பை எப்படி எடுத்துக்கணும்னு தெரில சாரு..”

“ஏன் டா அப்படி சொல்றீங்க?”

“தெரில நா என்ன நினைக்குறேன் ஏன் இப்படி இருக்கேன் எதுவுமே..யார்கிட்டேயும் இதைப் பத்தி பேசவும் தோணல..மனசு குழப்பமா இருக்கு அது மட்டும் தான் தெரியுது..”

“ரிலாக்ஸ் திஷானி..தேங்க்ஸ் பர்ஸ்ட் ஆப் ஆல் என்கிட்டயாவது உங்க மனசை வெளிப்டுத்துறதுக்கு..சொல்லுங்க என்ன குழப்பம் உங்களுக்கு?”

“இல்ல சாரு எதோ ஒரு விதத்துல நா அவருக்கு பொறுத்தமில்லையோனு தோணிட்டே இருக்கு..”

“திஷானி அவங்ககூடவே இருந்த இந்த பத்து  நாளுக்கு அப்பறமுமா உங்களுக்கு இப்படி தோணுது?”

“அதனால தான் ரொம்பவே தோணுது.. ஒரு ப்ரெண்டா சொல்லுங்க நா அவருக்கு ஏத்தவ தானா?”

“ம்ம் இதுக்கு என்னோட பதில்ல சொல்றேன் ஆனா சமளிக்குறதா நினைக்காதீங்க..ககணவன் மனைவி உறவுல ஒருத்தருக்கு ஒருத்தர் ஏத்தவங்கனு சொல்றது உருவத்தை வச்சு இல்ல திஷானி..நம்ம மனசு பொருத்த விஷயம்..நீங்களே சொல்லுங்க அபினவ் விட யாராவது உங்களை சந்தோஷமா வச்சுக்க முடியும்னு நினைக்குறீங்களா?”

இல்லையென்பதாய் அவள் தலையசைக்க,”அதே மாதிரி உங்க மேல அவரு காட்டுற லவ் வேற யார்கிட்டையாவது அவரால காட்ட முடியும்னு உங்களுக்கு தோணுதா?”

“அப்படி என்னால நினைச்சு பார்க்க முடில சாரு..”

“ம்ம் இது ஒண்ணு போதாதா அவங்கள உங்களுக்கு எவ்ளோ பிடிச்சுருக்குனு தெரிய..ஒரு ப்ரெண்டா கூட என்னை அவர்கிட்ட நெருங்க விட முடில உங்களால இந்த பொசசிவ்னெஸ் எல்லாருக்கும் எல்லார்கிட்டேயும் தோணாதுடா..

நானும் லவ் மேரேஜ் தான் அந்த அனுபவத்துல சொல்றேன் அவர் உங்கள பாக்குற பார்வைல நிறைய நிறைய காதல் இருக்கு பாசம் இருக்கு ஆனா துளியும் இரக்கமோ கல்யாணம் பண்ணிட்டோம் அதனால ஏத்துக்குறேன்ங்கிற நினைப்போ இல்லவே இல்ல..அஅவர் உங்கள உங்களுக்காகவே நேசிக்குறாரு..அப்படியிருக்க நீங்களா ஏன் உங்கள அவர்ட்ட இருந்து பிரிச்சு காட்றீங்க..

நம்மோட உருவம் குறை இதெல்லாம் சும்மா வெளி உலகத்துக்குதான்.அவங்க பேசுறதுக்காக நாம வாழ முடியாது..மனசை நேசிக்குற யாருக்கும் உருவம் ஒரு பொருட்டா தெரியாது திஷானி..அழகான லைப் அழகா வாழ ஆரம்பிங்க..நா சொல்றது புரியுது தான?”என்றவள் லேசாய் அவள் கைப் பற்றி அழுத்த சமாதானமாய் தலையசைத்தவள்,

“ரொம்ப தேங்க்ஸ் சாரு..மனசு கொஞ்சம் தெளிவான மாதிரி இருக்கு..இப்போ பீல் பண்றேன் இப்படி எனக்கும் ஒரு ப்ரெண்ட் இல்லையேனு..”

“என்ன இப்படி சொல்லிட்டீங்க இனி நாம ரெண்டு பேரும் ஒரு கட்சி டீல் தான?”,என்றுச் சிரித்தாள்.

அதற்குள் அபினவ் குழந்தையோடு அங்கு வர அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு அவனிடம் கவனம் செலுத்தினர்.

“சரி ரொம்வே டைம் ஆச்சு நா கிளம்புறேன்..உங்கள இப்படி மீட் பண்ணணும்னு தான் நினைச்சுட்டே இருந்தேன்..வெரி ஹாப்பி நவ்..பை டேக் கேர்..”

“நானே ட்ரப் பண்றேன் வெயிட் பண்ணு..”

“அதெல்லாம் வேணாம் நம்ம ஊரு தான நா பாத்து போய்க்குறேன்..பர்ஸ்ட் டைம் ஔட்டிங் வந்துருக்கீங்க என்ஜாய் யுவர் டைம்..”என்று அவள் நகர அபினவ் தன்னவளை பார்த்து அமர்ந்தான்.

“என்ன திஷா டியர் ரொம்ப கோவமா இருக்கியா?பர்ஸ்ட் டைம் மீட் பண்ண ப்ளான் பண்ணோம் நோ சொல்ல முடில..”

“என்னங்க இது அப்படியெல்லாம் ஒண்ணும் நா நினைக்கல..சொல்லப் போனா நாங்க ரெண்டு பேரும் இப்போ நல்ல ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டோம்..நம்பர் கூட வாங்கிட்டேன்..”

“பார்ரா அந்த மயக்கிக்கு இதுவேதான் வேலை எல்லாரையும் வழிக்கு கொண்டு வந்துருவா..”

“உண்மைதான் ரொம்பவே பாசிஸ்டிவ் அப்ரோச்..லைப்ல யாருமே வேண்டாம்னு நினைச்சாகூட இப்படி சிலரை பாக்கும் போது எதையோ மிஸ் பண்ணிண பீல் இருக்கு கண்டிப்பா..”

“இனி எதையும் மிஸ் பண்ண விட்றதா இல்ல..ஜாலியா இரு திஷா..சரி போலாமா”,என்றவன் எழுந்து கொள்ள தன்னிச்சையாய் அவன் கைப்பிடித்து எழுந்தவள் பற்றிய கையை விடாமலே நடக்க ஆரம்பித்தாள்..ஆனால் தவறியும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.

இத்தனை நாட்களில் முதன் முறையாய் அவளாய் அவன் துணையை நாடியிருக்கிறாள் என்பதே அவனுக்கு நிறைவய் இருந்தது  இன்னுமாய் தன்னவளை உரசியவாறு நடக்க ஆரம்பித்தான்.

காரில் அமர்ந்தவன் அவள் முகம் பார்க்க முடிந்த மட்டுமாய் தலையை வெளியே திருப்பியிருந்தாள் பெண்ணவள்.குறுஞ் சிரிப்போடு காரை கிளப்பியவன்  நேராய் கடற்கரையில் நிறுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.