(Reading time: 13 - 25 minutes)

ஒரு நொடி கேள்வியாய் பார்த்தவள் பின் ஒன்றும் கூறாமல் கீழேயிறங்க அவனும் ஒன்றும் கூறாமல் காரை லாக் செய்துவிட்டு அவளோடு வந்தான்.பார்க்கிங் ஏரியாவை கடந்து மணல்பரப்பின் அருகே சென்ற அடுத்த நொடி அவள் இடைப்பிடித்து அப்படியே தூக்கி விட்டிருந்தான் அபினவ்.

இதை சற்றும் எதிர்பாராதவளோ அவன் கழுத்தை சுற்றி தன் கையை இறுகப் பற்றினாள்.

“ஐயோ என்னங்க இது!!நானே வரேன் விடுங்க..”

“சாரி பேபி..நீ மணல்ல நடக்கலாமா இல்லையானு தெரில ஆனா இன்னைக்கு நா ஹாப்பியா இருக்கேன் சோ கடல்ல காலை நினைச்சே ஆகணும்..அதுனால நோ எக்ஸ்கீயூஸஸ்..பட் நல்ல வேளை நீ ஒல்லியா இருக்க இல்லைனா என் நிலைமை..”,என அவளை உலுக்க தன்னையும் மீறி செல்லமாய் அவன் மார்பில் குத்தியவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

கடல் அலைகளின் அருகில் சென்று அவளை இறக்கியவன் அவள் கைப்பிடித்து நிற்க தன் காலணிகளை கழற்றியவள் கையை இறுகப் பற்றினாள்.

“என்னாச்சு திஷா?”

“இல்லங்க பர்ஸ்ட் டைம் அதான் கொஞ்சம் பயமா இருக்கு..”

“என்ன சொல்ற பீச்சுக்குகு வந்ததே இல்லையா?”

“ம்ம் இல்லங்க..இந்த மணல்ல நடக்க முடியுமானு தயக்கம் இருக்கும் அதனாலேயே வர மாட்டேன்..பட் இன்னைக்கு எக்ஸ்பெக்டே பண்ணல தேங்க் யூ சோ மச்..”,என்றவள் கைகளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அதன் பின்னான நிமிடங்கள் இருவருக்குமே சொல்ல முடியாத உணர்ச்சிக் கலவைகளை கொண்டிருந்தன.

சிறு பிள்ளையென அலை வரும் நேரம் கையை இறுக்கிப் பற்றுவதும் பின் இயல்பாவதுமென முகத்தில் மெல்லிய புன்னகையோடே இருந்தவளை பார்த்தவனுக்கு அவளை அப்படியே கையணைப்பிற்குள் வைத்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

பெண்ணவளுக்கோ வாழ்வையே ஜெயித்துவிட்ட உணர்வு அந்த நீரின் குளுமை காலை வருடும் நேரமெல்லாம் தன்னவனின் ஸ்பரிசம் காட்டும் குறுகுறுப்பு அவளுள்.

வாழ்க்கை மொத்தமாய் அழகாகிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு..அந்த கடற்கரை காற்றோடு கூடிய தன்னவனின் அருகாமை அவளை மோன நிலைக்கு கொண்டு சென்றிருந்தது..

குழந்தையென இன்னும் ஒருதடவை ஒருதடவைனு அரைமணிநேரம் அவள் அப்படியே நிற்க நாளை மாறுபடியும் வரலாம் என சமாதானப்படுத்தி அவளை அழைத்து வந்தான்.

வரும் போது அவனுக்கு இன்னுமே சிரமமாய் இருப்பது நன்றாகவே தெரிந்தது.அவன் உடையும் ஈரமாய் இருக்க அதோடு அவளையும் தூக்கி வந்தவனுக்கு பயங்கரமாய் மூச்சு வாங்க வேகமாய் தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள்.

குடித்து முடித்தவன் பொறுமையாய்,”திஷா டியர் எதுக்கும் கொஞ்சம் வெயிட் போடாம பாத்துக்கோ இல்லனா என் நிலைமை..”,என முடிப்பதற்குள் சீட்டிலிருந்த குஷனை எடுத்து அவனை அடித்திருந்தாள்.

“அடிப்பாவி கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்ததுக்கு வேற எதுவும் தரலனாலும் பரவால்ல இப்படி அடிக்குறியே”,என்று சிரித்தவனோடு சிரிப்பில் இணைந்துகொண்டவள் ஒன்றும் கூறவில்லை.

வீட்டிற்குள் நுழைந்தவர்களைப் பார்த்து சாரதா தலையில் அடித்துக் கொண்டார்.

“சின்னப் பசங்க மதிரி இப்படியா ஆட்டம் போடுவீங்க..கடவுளே போங்க போய் முதல்ல ட்ரெஸை மாத்துங்க”,என்றவாறு கிட்சனுக்குச் சென்றார்.

தங்களறைக்குள் நுழைந்த அபினவ் மாற்றுத் துணியெடுத்து திரும்ப திஷானி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.முதலில் தடுமாறியவன் பின் தன்னவளின் செயலில் முகம் மலர அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..

“என்ன டீச்சரம்மா சடன் சர்ப்ரைஸ்..”என்றவனுக்கு பதில் கூறாமல் சட்டென அவனை தன்புறம் இழுத்து கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்..

மெதுவாய் விலகியவள்,”தேங்க்ஸ் பார் எவ்ரித்ங்..”,என தன்னவனின் விழி பார்க்க இப்படி சொல்ற தேங்க்ஸ்னா எத்தனை தடவை வேணாலும் அக்செப்ட் பண்ணிக்குறேன் என மீண்டுமாய் அவளை மார் சாய்த்துக் கொண்டான்..

தொடரும்...

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.