(Reading time: 10 - 19 minutes)

அழகான வண்ண வண்ண பூக்கள் பூத்து குலுங்கி கொண்டு இருந்தது. பூக்களை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு அடி  எடுத்து முன் வைக்கும் போது தான் கீதா அங்கு ஜாகிங் வந்து கொண்டு இருந்த ரிஷியை கண்டாள்.

வியர்த்து உற்ற உற்ற அவன் கீதா இருந்த பக்கமாக  ஓடி வந்து கொண்டு இருந்தான்.  முன்னர், அவனுடன் இருந்த போதும் இப்படித்தான் காலையில் எழுந்ததும் ஜாகிங் சென்று விடுவான்.

கீதாவையும் அழைப்பான். வெளியில் சென்று ஓடுவதில் அவளுக்கு உடன்பாடு இலாததால் அவள் வர மறுத்து விடுவாள்.

கீதாவிற்காகவேயே, ரிஷியும் தோட்டத்திற்குள்ள ஜாகிங் செய்ய ஆரம்பித்தான். அந்த, 30 நிமிடம் கூட அவளை  விட்டு அவன் விலக விரும்பவில்லை.

கீதாவும், அவனுடன் ஜாகிங் செல்ல விட்டாலும், அவன் வீட்டை சுற்றி ஓடுவதை, அவனுகேயே தெரியாமல் பார்த்து ரசித்து கொண்டு இருப்பாள்.

ஏனோ, அவனுக்கு தெரியாமல் ரிஷியை ரசிப்பது  அவளுக்கு மிகவும் பிடித்தது.  ரிஷி என்றும் தனக்கானவன் என்பதில் அவளுக்கு சிறிதும் சந்தேகம் வந்தது இல்லை.

அவன் ஜாகிங் முடித்து வருவதற்குள் அவனுக்கு தேவையான கிறீன் ஸ்மூத்தி, நியூஸ் பேப்பர், துண்டு உட்பட அனைத்தையும் எடுத்து வைத்து விடுவாள்.

ரிஷிகேயே, சில சமயம் ஆச்சரியம் ஏற்படும். கீதாவால், எப்படி தனது தேவைகளை கரெக்ட்யாக செய்ய முடிகிறது என்று....

ஒரு நாள், தன் கை கிளௌஸ் அணியாமல் ரிஷி ஜாகிங் சென்றான். அவன் போகும் போது கீதா தனது புத்தகத்தில் எதையோ ஆர்வமாக படிப்பது போன்று காட்டி கொண்டால்.

ரிஷியும், அவள் படிப்பதை தொந்தரவு செய்ய கூடாது என்று, அமைதியாக சென்று விட்டான்.

ரிஷி சென்ற பிறகு வேகமாக அவனது மாடி அறைக்கு சென்று ஜன்னல் திரையை விலக்கி அவன் ஜாகிங் செல்வதை பார்ப்பதற்காக நின்று கொண்டாள்.

வாசல் வரைக்கும், சென்ற பின்பு தான் ரிஷிக்கு கையில் கிளௌஸ் அணியாமல் வந்தது ஞாபகத்திற்கு வந்தது.

கிளௌஸ் எடுப்பதற்காக அவனது அறைக்கு வந்த போது தான் கீதா ஜன்னல் வழியே யாரையோ தேடுவது போல நின்று கொண்டு இருப்பதை கண்டான்.

பொதுவாக, ரிஷி அழைத்தால் கூட கீதா அதிகமாக அவனது அறைக்கு வரமாட்டாள்.  ஆனால், இன்று இங்கு ஜன்னல் வழியாக என்ன பார்த்து கொண்டு இருக்கிறாள்?.....

அதும் நான் பார்க்கும் போது ஹாலில் உட்கார்ந்து படித்து கொண்டு தானே இருந்தாள்.... இப்போது இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாள்???? என்று நினைத்து கொண்டேயே மெதுவாக அவள் பின்னாடி போய் நின்று கொண்டான்.

இவன் பின்னாடி நிற்பது தெரியாத கீதாவோ....  என்னாச்சு.... இந்த லூசு ஜாகிங் போகும் போது கிழ எங்கையாவது விழுந்துடுச்சோ???? இவ்ளோ நேரம் ஆச்சு இன்னும் இந்த பக்கம் வரல??? 

எப்படி பார்த்தாலும் இந்நேரம்  ரெண்டு ரௌண்டாவது ஓடி இருக்கனுமேயே என்று அவள் மட்டும் இருக்கும் நினைப்பியில் வாய் விட்டு தனக்கு தனயே கூறுவது போல ரிஷி நிற்பது தெரியாமல் கூறி விட்டாள்.

கீதா, தன்னை காண தான் நிற்கிறாள் என்பதை அறிந்த ரிஷிகோ சந்தோசம் தாளவில்லை. அவளை அப்படியே கட்டி கொள்ள வேண்டும் போல இருந்தது.

"நாம் விரும்பும் ஒருவர் நம்மை விட அதிகமான அன்பை நம் மீது செலுத்தும் போது அதும் நமக்கேயே தெரியம்மாள் செலுத்துவது நமக்கு தெரிய வந்தால் அதை விட சந்தோசம் உலகத்தில் இல்லை ".....

கீதாவாக, அவளது அன்பை அவளிடம் வெளிப்படுத்தியது இல்லை. ஆனால், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாள்.

ரிஷியின் கண்களை பார்த்து கூட கீதா அவ்வளவாக பேசமாட்டாள். அவனை கிண்டல் செய்வாள். ஆனால், அவன் மீது உரிமை எடுத்து கொள்ள மாட்டாள்.

ஆனால், இன்று கீதா அவனுகேயே தெரியாமல் அவனை ரசித்து கொண்டு இருக்கிறாள்.....  லூசு என்று மிகுந்த உரிமையுடன் கூப்பிடுகிறாள்.

இவை அனைத்தும் ரிஷிக்கு மிகுந்த மகிழிச்சியை அளித்தது. கீதா, எக்கி எக்கி ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டு இருந்ததில் அவளது டீ ஷர்ட் யின் கீழயே  விலகி அவளது அழகான வெள்ளை நிற இடுப்பை அவனுக்கு காட்டியது.

ரிஷி, அவளின் இடுப்பினை இழுத்து பின் இருந்தவரேயே அவளை அணைத்து கொண்டான்.

தீடிரென்று, ரிஷி அணைத்ததில் கீதா கொஞ்சம் பயந்து விட்டாள்.

அவளது, காதின் அருகில் யார மேடம் சைட் அடிக்குறிங்க? என்ற கேட்ட ரிஷியின்  குரலில் தன்னை முழுதும் இழந்தாள்.

அவளது இதய துடிப்பு ரிஷிக்கும் சேர்த்தேயே கேட்டது.

ரிஷியிடம், உண்மையான காதலுடன் இருந்தாலும் ஏனோ கீதாவால் அவனை நெருங்க முடிய வில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.