(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - என்னவளே - 08 - கோமதி சிதம்பரம்

ennavale

கீதாவை கண்ட சதாசிவம்  அப்படியே வாசலில் நின்று விட்டார். 

அதும் , ரிஷியுடன் கீதா சேர்ந்து நிற்பதை பார்க்கும் போது எதோ தவறு செய்து விட்டது போல நினைத்தார்.

வேலையாட்கள் சதாசிவம் வந்து இருப்பதை பருவதம் அம்மாளுக்கு தெரிவித்து இருந்தனர். தனது அண்ணனை வரவேற்க பருவதம் அம்மாள் வாசலுக்கேயெ வந்து விட்டார்.

வாங்க அண்ணா!!!! என்று பாசத்துடன் கூப்பிடும் பருவதம் அம்மாளின் குரல் அவர்க்கு கேட்டாலும் அவரது பார்வை கீதைவையே நோக்கியது.

அதற்குள், ரிஷியும் கீதாவை கூட்டிக்கொண்டு தனது தந்தையின் அருகில் வந்து விட்டான்.

அப்பா...... என்று கூப்பிட்டா ரிஷியின் குரலும் அவர்க்கு எட்டவில்லை.

கீதாவிற்கு தான் தர்மசங்கடம் ஆகிவிட்டது. ஏன்? இவர் என்னை இப்படி பாக்குறார்? வீட்டை விட்டு வெளியில் போக சொல்லி விடுவாரோ?...... என்று பயத்துடன் நின்று கொண்டு இருந்தார்.

தனது, அண்ணன் தோள்களை உலுக்கி பருவதம் அம்மாள் தான் சதாசிவத்தை நினைவிற்கு கொண்டு வந்தார்.

அப்பொழுது தான் சதாசிவம் பருவதம் அம்மாளை பார்த்தார்.

அண்ணா, என்ன ஆச்சு என் இப்படி நிக்குறீங்க? ரிஷி கூப்பிட்டது கூட உங்க காதுல விழலையா??? என்று பாசத்துடன் பருவதம்  அம்மாள் கேட்டார்.

அப்படி எல்லாம்  ஒன்னும் இல்லாம  பயண களைப்பு அவ்ளோதான்மா..... வேற ஒன்னும் இல்ல... என்று கூறிய சதாசிவத்தின் பார்வை கீதாவின் மீது தான் இருந்தது. பருவதம் அம்மாளும் தனது அண்ணனின் பார்வையை புரிந்து கொண்டார்.

கீதாவை, தனது அண்ணன்க்கு அறிமுக படுத்தவேண்டும் என்று நினைத்த பருவதம் அம்மாள்.

அண்ணா... இந்த பொண்ணு பெயர் கீதா... என்று பருவதம் அம்மாள் கூறியதும் கீதா, சதாசிவத்தை நோக்கி தந்து இரு கரங்களையும் குவித்து பயத்துடன் வணக்கம் கூறினாள்.

கீதாவின் பயந்த பார்வை சதாசிவத்திற்கு பழைய நினைவுகளை எல்லாம் கொண்டு வந்தது.

இது வரைக்கும் யாருக்கும் தெரியாமல் அவர் மறைத்து வைத்து இருந்த உண்மைகள் அவரை கேள்வி கேட்க ஆரம்பித்தது.

உண்மையில், கீதாவை கண்டு சதாசிவம் தான் பயந்தார் என்பதை அங்கு இருந்த யாரும் அறியவில்லை.

தன்னிடம் பயத்துடன் வணக்கம் கூறும் கீதாவிடம் அவரால் ஒரு வார்த்தை கூட பேசாது விறுவிறு என்று வீட்டிற்குள் சென்று விட்டார்.

தன்னிடம் பயத்துடன் வணக்கம் கூறும் கீதாவிடம் அவர்  ஒரு வார்த்தை கூட பேசாது விறுவிறு என்று வீட்டிற்குள் சென்று விட்டார்.

சதாசிவம், கீதாவின் முகத்தில் அடித்தார் போல நடந்து கொள்வார் என்றும் அங்கு இருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.

சதாசிவம் தன்னை ஏன் வெறுக்கிறார் என்று கீதாவிற்கு புரியவில்லை. அவரது புறக்கணிப்பு அவளை மிகவும் காயப்படுத்தியது.

கீதாவின்  கண்களில் தெரிந்த கண்ணீர் ரிஷியின் மனதையும்  வலிக்க செய்தது.  அப்பாக்கு என்னதான் பிரச்சனை? அன்றேயே அவர்  கீதாவை திருமணம் செய்து கொள்ள ஒத்து கொண்டு இருந்தால் இப்படி மூணு வருஷம் கஷ்டப்பட்டு இருக்க மாடேன்யே????

இதோ, இப்பொழுதும் பிரச்சனை செய்கிறார்??? இம்முறை  நான் விட போவது இல்லை. கீதாவை யாருக்காவும் விட்டு தர ரிஷி தயாராக இல்லை .

பருவதம் அம்மாளுக்கும் ஒன்றும் புரிய வில்லை. பொதுவாக, தனது அண்ணன் யாரிடமும் இப்படி நடந்து கொள்ள மாட்டார். அதும் சின்ன பெண் இவளிடம் என்ன கோபம்????  என் இப்படி முகத்தில் அடித்தார் போல கொண்டார்???

இப்போதைக்கு, கீதாவை சமாதானம் செய்வோம் என்று எண்ணியவர். கீதா, நீ தப்பா எடுத்துக்காதமா.... எதோ பயண களைப்பு டென்ஷன்.... அதான் அண்ணா இப்படி நடந்து கொண்டார். என்று கூறும் போதேயே கீதா குறுக்கிட்டாள்.

பரவா இல்லாம...நீங்க போய் அவர்யா கவனிங்க என்று கூறிவிட்டு தான் கொண்டு வந்த பூக்களை பருவதம் அம்மாளிடம் கொடுத்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.

கீதாவை, பார்ப்பதற்கு பருவதம் அம்மாளுக்கும்  பாவமாக இருந்தது.  ரிஷியோ, கோபத்துடன் பருவதம் அம்மாளிடம் கத்த ஆரம்பித்து விட்டான் .

என்ன ஆச்சு உங்க அண்ணாக்கு???? வணக்கம்'சொன்ன திருப்பி வணக்கம் சொல்லணும் அத விட்டுட்டு இப்படியா முகத்தில் அடித்தார் போல நடந்து கொள்வது???

ஐயோ! இவன்யா வேற சமாளிக்கணுமா???? அதும், நேற்று தான் அப்பா என்று கூப்பிட்டான். அதுக்குள்ள இந்த அண்ணா செஞ்ச காரணத்துனால மறுபடியும் அப்பான்னு கூப்பிட மாட்டேங்குறான்யா.

சொல்லுங்க அத்தை .... உங்க அண்ணா செஞ்சது சரியா படுதா உங்களுக்கு? என்று கோபத்துடன் கேட்டான்.

ரிஷி, அண்ணா செஞ்சது சரினு நான் சொல்லல... ஆனா, அண்ணா பொதுவா இப்படி நடந்துக்க மாட்டார். நான் போய் என்ன ஆச்சுன்னு அண்ணாகிட்ட கேட்க்கிறேன் நீ அப்பா மேல கோபப்படாத டா..... என்று கெஞ்சவது போல கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.