(Reading time: 10 - 19 minutes)

29. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ருகுக் காடு..

தன்னந்தனியாக தியா ஷ்ரனு நுழைந்த சருகுக் காடு..

முதல் முறைப் பார்த்ததற்கும் இன்றுப் பார்ப்பதற்கும் நிறையவே மாற்றங்கள்..

சேறும் சகதியும் சூழ்ந்துகிடக்க சருகுகளின் ஓசையுடன் அன்று தென்பட்ட சருகுக் காடு ரம்யமாய் இன்று..

காட்டுச் செடிகளில் எல்லாம் மலர்கள் மலர்ந்திருக்க மரங்கள் எல்லாம் தத்தமது சுழிப்பை மீட்டிருந்தது..

தியாவும் வ்ருதுஷ்ஷும் முன்னே நடக்க பின்னே தேவவ்ரத ஆச்சார்யாவுடன் தொடர்ந்தது அந்த இளைஞர் அணி..

“இன்னும் ரொம்ப தூரம் போகனுமா..??”, தனது தோளின் அமர்ந்தபடியே பயணம் செய்துகொண்டிருந்த அகிலனிடம் கேட்டு வைத்தாள் விஸ்மயா..

“பாதை கொஞ்சம் நீளம்தான் மயா..”

“புதிர் போட ஆரம்பிக்காதே அகிலா.. நல்ல நாள்லயே நீ சொல்றது எதுவும் எங்களுக்குப் புரியாது..”, முன்னால் சென்றுகொண்டிருந்த எழில் கூற அனைவரின் முகத்திலும் ஒரு சிரிப்பு..

அகிலனை அனைவரும் பார்க்க முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்ட அகிலன், “போகனும் போகனும்.. குட்டைகளைத் தாண்டி..”, என்றான் சிறு குழந்தையின் குரலில்..

“குட்டைகளா..?? பாம்புகள் இருக்குமே அங்கு..”, சற்று பயந்தபடியே வெளிவந்தது மயாவின் குரல்..

“பாம்புகள் இருக்கும் தான்.. நாம் அவற்றை தொந்தரவு செய்யும் வரை அது நம்மை ஒன்றும் செய்யாது..”, என்றான் அகிலன்..

“அகிலா.. சிவசிஷ்யன் கருடன் அன்னம் எல்லாம் வருவார்கள் என்றாயே.. காணவில்லை அவர்களை..??”, என்று கேட்டான் விக்கி..

“வருவார்கள் விக்கி.. நாம் உரிய இடம் சென்ற பிறகு உரிய நேரத்தில் வருவார்கள்..”

அகிலனை விட்டுவிட்டு கேள்வி கேட்டவர்களை எல்லாம் முறைத்த எழில், “இனி யாராவது அகிலன் கிட்ட கேள்வி கேட்டீங்க..”, என்று எச்சரிப்பது போல் சைகை செய்தவன், “பேசாம நடங்க.. இடம் வந்தால் அவனே சொல்லுவான்..”, என்று கொஞ்சமேக் கொஞ்சம் கடுப்புடன் அதட்டிவிட்டு நடக்கத் துவங்கினான்..

எழிலின் அதட்டத்தில் அவர்கள் கப்சிப்பானார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா..:P

குட்டைகள் இருக்கும் இடம் நெருங்க நெருங்க மலர்களின் சுகந்தமான நறுமனதுடன் சேர்த்து ஒரு துர்நறுமனமும்..

சில நொடிகளுக்குள் அனைவர் முகத்தையும் மாஸ்க்குகள் மறைத்தது..

மயாவின் தோளில் அதுவரை அமர்ந்திருந்த அகிலன் தனது சிறகுகளை விரித்து நாற்றம் வந்த திசைநோக்கிப் பறந்தான்..

அவனைப் பின்தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ரிக்கி தேவவ்ரத ஆச்சார்யாவைப் பார்த்துவைக்க அவரோ அப்பொழுதே அகிலன் பின்தொடரத்துவங்கியிருந்தார்..

“அவசியம் அங்கு போய்த்தான் ஆகவேண்டுமா..??”, இது க்ரியா..

“போனால் என்ன ரியா..??”, கேள்வி பிறந்தது விக்கியிடமிருந்து..

“இல்லை விக்கி.. ஸ்மெல்லை வைத்துப் பார்க்கும்பொழுது ஏதோ மிருகம் இறந்தது போல் தோன்றிகிறது.. அதைப் பார்த்து நாம் என்ன செய்யப் போகிறோம்..??”

“நாம் ஒன்றும் செய்யப் போவதில்லை தான்.. ஆயினும் அகிலன் அங்கே போகிறான்.. நானும் அவனைத் தொடர்வோம்..”, என்றாள் தியா..

வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக்கொண்டே அகிலன் சென்ற திசையில் மற்றவர்களைப் போலவே நடக்கத்துவங்கினாள் க்ரியா..

அந்த இடத்தை நெருங்க நெருங்கத் தான் தெரிந்தது அன்று தியா பாம்பைப் பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்த இடம் அதுவென்று..

எழிலும் மயாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் எங்கே தியா மீண்டும் ஏதவாது பாம்பைக் கண்டு அதைப் பிடிக்கச் சென்றுவிடுவாளோ என்று..

இருவரும் அவளை ஒட்டியே நின்றுகொண்டனர்.. (தடுப்புச்சுவர்களாம்)

இருவரின் செய்கையும் பார்த்த தியா இருவரிடமும் மெதுவான குரலில், “நான் பாம்புப் பிடிக்க வரலை.. இரண்டு பேரும் தள்ளி நில்லுங்க..”, என்றபடி அகிலனிடம் விரைந்தாள்..

“அகிலா.. ஏதோ மிருகம் செத்துக்கிடப்பது போல் நாற்றம் அடிக்கறது.. ஆனால் இங்கு அது போல் ஒன்றும் இல்லையே..”, என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி..

“இறந்தது மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே..”

“மிருகம் இல்லையா..?? அப்போ..??”

“அப்போ இறந்தது மனிதன் என்று அர்த்தம்.. அந்த மனிதன் உங்களுக்குத் தெரிந்த தனுசுஜன் என்று அர்த்தம்..”, என்றார் பெரியதொரு மரத்திற்கு பின்னுருந்து வெளிப்பட்ட சுபலராஜா பெரியதொரு குரலில்..

ரத்தின் பின்னிருந்து வெளிப்பட்ட சுபலராஜாவைக் கண்டு யாரென்று புரியாமல் சிலர் திகைக்க தேவவ்ரத ஆச்சார்யா, “ராஜா.. நீ எங்க என்ன பண்ற..?? உனக்கு தனுசுஜனைப் பற்றி என்னத் தெரியும்..??”, என்று கேட்டுவைத்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.