(Reading time: 10 - 19 minutes)

“என் மாமனுக்கு என் பெயர் கூட நியாபகம் இருக்கு போல..”, என்று நக்கலாக சொன்னவர், “தனுசுஜன் என்ன..?? இங்கு நிக்கும் அனைவரின் ஜாதகமும் என் கையில்..”, கொஞ்சம் தெனாவெட்டாக..

“நீங்க யாரு முதலில்..??”, கேள்வி பிறந்தது தியாவிடமிருந்து..

“மிஸ் தியா ஷ்ரனு மேடம்க்கு என்னைப் பற்றித் தெரியாது இல்லையா.. சொல்கிறேன் கேளுங்கள்..”, என்ற ராஜா, “நான் சுபலராஜா.. இங்கே நிற்கிறாரே இந்தத் திரு தேவவ்ரத ஆச்சார்யா.. இவரின் ஒரே தங்கையின் மகன்.. சீதாலக்ஷ்மியின் அண்ணன்.. இன்னும் தெளிவாகச் சொன்னால் இங்கும் நடந்து கொண்டிருக்கும் செயல்களுக்கும் அசம்பாவிதங்களுக்கும் சூத்ரதாரி.. இந்தத் தகவல் மட்டும் போதுமா..?? இல்லை வேறு ஏதாவது..??”, என்று இழுத்தபடியே நிறுத்தியவர் சில பல கேள்விகள் தேங்கி நின்றிருந்தவர்களைக் கண்டு, “ரொம்ப யோசிச்சு உங்க மண்டையைக் குழப்பிக்க வேண்டாம்.. நான் நேரடியா விஷயத்திற்கு வருகிறேன்.. எனக்கு உங்ககிட்ட இருக்க அந்த மேப் வேண்டும்..”, என்றார்..

"எந்த மேப்..??”, மீண்டும் தியா..

“அதான் நீங்க எல்லாம் கஷ்டப்பட்டுத் தேடி எடுத்தீங்களே அந்த மேப்..”

“கொடுக்கமுடியாது..”, ஸ்திரமாக பதில் வந்தது தியாவிடமிருந்து..

“நல்ல மாதிரி நான் கேட்கும்பொழுதே நீங்கள் அதைக் கொடுத்தீங்கன்னா உங்களுக்கெல்லாம் சேதாரம் கம்மி.. இல்லையென்றால்..”, தோளைக் குலுக்கினார் ராஜா..

“என்ன மிரட்டுகிறீர்களா மாமா..??”, இது விக்கி..

“இன்னும் நான் மிரட்டவே ஆரம்பிக்கவில்லையே விக்கி..”, என்று ஒரு மாதிரிக் குரலில் சொன்ன ராஜா, “ஆமா.. உங்கக்கூட ஒரு அணில் இருக்குமே அது எங்கே..??”, என்றுக் கேட்டார்..

அப்பொழுது தான் அனைவருக்கும் அகிலன் அங்கில்லை என்று உரைத்தது..

தங்களுடன் இருந்தவன் சென்றதுகூடத் தெரியமால் இருந்திருக்கிறோமே என்று மானசீகமாகத் தன் தலையில் அடித்துக்கொண்ட தியா தேவவ்ரத ஆச்சார்யாவைப் பார்த்து வைத்தாள்..

அவரோ கண்களை மூடித்திறந்து எல்லாம் நல்லதுக்கே என்பது போல் தலையசைத்தார்..

இருவரின் இந்த சைகையைப் பார்த்த ராஜா, “என்ன புது தாத்தாவும் பேத்திக்கும் கண்ணால பேசிக்கறீங்க..??”, கேள்வியாக..

அவரது கேள்வியை ஒதுக்கித்தள்ளுவது, “கய்ஸ்.. இவரு கிடக்கறாரு விடுங்க.. நாம் நம்ம வேலையைப் பார்ப்போம்..”, என்றான் ரிக்கி..

காடே அதிரும் வண்ணம் பெரியதாக சிரித்தவர், “என்னது உங்க வேலையைப் பார்க்க போறீங்களா..?? எப்படிப் போவீங்க..??”, என்றார் ராஜா..

“நடந்துதான் வேற எப்படி..??”, என்று நக்கலாக உரைத்த விக்கி அனைவரிடமும் பொதுவாக, “வாங்க போகலாம்..”, என்றான்..

“விக்கி வெயிட்..”, திரும்பிச் செல்லத் திரும்பியவர்கள் தியாவின் குரலில் சட்டென நின்றனர்..

“என்னாச்சு தியூ..??”, இது க்ரியா..

அவளிடம் ஒரு நிமிடம் என்பதாய் சைகை செய்தவள் அவசரமாகத் தன் போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தாள்..

முழு ரிங் போனதேயொழியே மறுப்பக்கம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்..

கண்களை இருக்க மூடித் தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டவள், “எங்க அம்மா அப்பாவை எல்லாம் என்ன பண்ணுனீங்க..??”, ஒரு வித கோபத்துடன்..

“பரவாயில்லை.. பொண்ணு பாயின்ட்டைப் பிடிச்சிருச்சு..”, என்றவர், “உங்க அப்பா அம்மா மட்டும் இல்லை.. இங்கிருக்க எல்லாரோட அப்பா அம்மாவும் இப்போ என் கையில்..”, என்றார் தெனாவெட்டாக..

கோபத்தில் ஏய் என்றபடி தாக்க வந்த எழிலை அலட்சியமாகப் பார்த்தவர், “எழிலா.. உங்க பண்ணை வீட்டில் தான் எல்லாரும் இருக்கிறார்கள்..”, என்று தகவலாக..

உடனே யாரையோ அழைக்கத் தன் போனை எடுத்த எழிலைக் கண்டவர், “உங்க ஊருக்காரங்க யாருக்காவது நீ போன் பண்ணுன்ன யாரையும்..”, என்று கையில் சொடுக்குப்போட்டவர், “யாரும் அந்தப் பண்ணை வீட்டைவிட்டு வரமாட்டாங்க.. எல்லாரும் அந்த வீட்டோட எரிஞ்சுபோயிடுவாங்க..”, என்றார் ஒரு வித துவேஷத்துடன்..

“மாமா.. நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை..”, இது விக்கி..

“எது சரியில்லை..?? எது சரியில்லை..??”, கண்கள் சிவக்க ஒருவித குரூரத்துடன் கேள்வி எழுப்பியவர், ”நீங்க பண்ணது தான் சரியில்லை.. முதலில் நீ.. நீ செய்தது சரியில்லை..”, என்றார் தியாவைக் கை நீட்டி..

அவர் கூறவருவது ஒன்றும் புரியாமல் அவரை வெறித்துப்பார்த்தவளைக் கண்டு, ”காணாமல் போன உன் அப்பா அம்மாவைத் தேடத் துவங்கினாயே.. நீ செய்த முதல் தவறு அது.. இரண்டாவது இவர்கள் அனைவரையும் உன்னுடன் சேர்த்துகொண்டது..”, ஒரு மிருகம் போலவே ஒலித்தது அவரது குரல்..

அனைவருக்கும் இவர் என்ன லூஸா என்பது போலவேத் தோன்றியது.. அவர் தியாவிடம் கூறியதைக் கேட்டு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.