(Reading time: 10 - 20 minutes)

“ஹ ஹ.. எங்களுக்கு ஊர் பூரா ஆள் இருக்கு ப்ரோ. நீங்க ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது “ என்று கனண்டிக்க

“என்னெருமை வானரமே “ என்று ஆரம்பித்தவன் , சுமித்ரா “என்னது ?” என்று முறைக்கவும்

“ச்சே.. ச்சே .. என் அருமை தங்கையே.. ப்ளீஸ் இந்த விஷயத்தை மட்டும் மித்ரா கிட்டே சொல்லிடாத. அப்புறம் வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணிடுவா. நீயாவது ஆத்தங்கரையில் டேம் கட்டினே. என்னாலே பால்ஸ்லே எல்லாம் டேம் கட்ட முடியாதுடி செல்லம். இந்த விஷயத்தை பற்றி வீட்டில் மூச்சு விடாதே “ என்று சற்று கெஞ்சி கேட்க

“சரி சரி . ஏதோ இவ்ளோ கெஞ்சுரதாலே விடறேன். நான் கேட்கறத அப்போ அப்போ செய்யணும் சரியா? “ என

“நேரம். சரி செய்யறேன்” என்று சரணடைந்தான் ஷ்யாம்.

ஷ்யாம் ஒரு பைக் பைத்தியம். அதிலும் ரேஸ் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் இன்று வரை மித்ராவிற்கு ஷ்யாம் பைக் ரேஸ் செல்கிறான் என்று தெரியாது. அவன் வீட்டினருக்கு கூட அரசல் புரசலாக தான் தெரியும். அது கூட ராம் சொல்லித்தான்.

அவன் கஸ்டமர் விசிட் என்று சொல்லி செல்வதால் , அதைப் பற்றிய விவரம் கேட்கும்போது ஷ்யாமின் தடுமாற்றைத்தை கவனித்த ராம், அவனிடமிருந்து விஷயத்தை தெரிந்து கொண்டான். பொய் சொன்னால் மைதிலிக்கு பிடிக்காது. ராமோ அதற்கும் மேல். அதனால் ஷ்யாம், சுமித்ரா இருவரும் பொய் பேசுவதில்லை.

ஷ்யாம் ரேஸ் பற்றி சொன்ன பின் முதலில் கோபம் கொண்ட ராம், பிறகு அவனுக்கும் ஒரு அவுட்லேட் வேண்டும் என்று புரிந்து கொண்டான். கண்ட பழக்கங்களில் மனதை செலுத்துவதை விட, இதுவே பரவாயில்லை என்று எண்ணி, மைதிலிக்கும் விஷயத்தை சொல்லி விட்டான்,

மைதிலியோ இன்னும் அதிகம் பயந்து ஷ்யாமிடம் வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டு இருக்க, ஷ்யாம் முழிப்பதைப் பார்த்து ராம் தான், மைதிலியை சமாதானப் படுத்தினான். ஆனாலும் ஷ்யாமின் பாதுகாப்பை பற்றி ஒரு பெரிய லெக்சர் கொடுத்த பின்பே அனுமதி கொடுத்தான்.

ஷ்யாமிற்கு தெரியும் மித்ரா இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் மிகுந்த பயம் கொள்வாள் என்று. அதனால் யாரும் அவளிடம் சொல்லவில்லை.

மித்ரா அருகில் வரவும், அந்த பேச்சை அப்படியே நிறுத்தியவன்

“போலாமா மித்ரா?  என, அவளும் தலை அசைத்தாள். அப்போதுதான் சுமித்ராவைப் பார்த்த மித்ரா,

“ஹேய்.. சுமி, நீயும் எங்க கூட வாயேன்?” என்னும்போதே, சைந்தவியும் வர, அவளைப் பார்த்தவுடன் இன்னும் ஆச்சர்யம் அடைந்தவளாக

“ஹேய்.. சந்து நீயும் வந்துட்டியா? பாட்டி வெளியில் போயிட்டு வர சொன்னாங்க. எல்லோரும் வெளியில் போகலாமா? “ என்று கேட்டாள்.

சுமிக்கும், சைந்தவிக்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் ஷ்யாம் அண்ணன் மட்டுமே. மித்ரா தோழி மட்டுமே. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவி என்றான பின் , எப்படி ரியாக்ட் செய்ய என்று தெரியவில்லை.

சுமிக்குப் புரிந்தது பாட்டி ஷ்யாம், மித்ரா இருவரும் தனியாக நேரம் செலவிடட்டும் என்று தான் வெளியே செல்லக் கூறினார் என்று.

ஆனால் மித்ராவோ இருவரையும் கூப்பிடுகிறாள். என்ன சொல்ல என்று தயங்கியபோது . ஷ்யாம்

“ஹேய் .. ரெண்டு பேரும் அணு ஆராயிச்சி விஞ்ஞானி ரேஞ்சுக்கு யோசிச்சுகிட்டு இருக்கீங்க. கிளம்புங்க போகலாம்” என்று கூறினான்.

சைந்தவி தயக்கத்தோடு பார்க்க, ஷ்யாமோ அவர்களிடம் க்விக் என்றான். அப்போது கௌசல்யா பாட்டி வர, சைந்தவியும், சுமியும் முழிப்பதைப் பார்த்து விட்டு , என்ன என்று வினவினார்.

மித்ரா கேட்டதை சொல்ல சைந்தவி பாட்டியிடம் சொல்ல, பாட்டியோ

“இதில் என்ன இருக்கு தங்கங்களா? மித்ரா நீங்க வந்தா நல்லா இருக்கும்னு தானே பீல் பண்றா. ஷ்யாமும் கூப்பிடறான் இல்லியா. போயிட்டு வாங்க” எனவும்

மித்ராவோ “ஹேய்.. வொய் போத் சீன் போட்டிங் யா? என்று கேட்டாள்.

அவர்கள் இருவரும் “உன் இங்கிலீஷ்லே சில்லி சாஸ்தாண்டி ஊத்தணும்” என்று மித்ராவை ஒட்டினார்கள்.

பேசிக் கொண்டே வெளியே வர, ஷ்யாம் காருக்கு அருகில் சென்றவுடன் எப்போதும் போல் மித்ரா பின்னாடி உட்காரப் போக, சுமித்ரா அவளைத் தடுத்து

“மிது டார்லிங்.. இனிமே உங்க இடம் இதுதான்” என்று முன் சீட்டில் உட்கார வைத்தாள்.

அவளின் கேலியில் அவஸ்தையாய் ஷ்யாமைப் பார்க்க, அவனோ சிரித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கார் ஓட்ட, சுமி ஏதோ சைந்தவியிடம் காலேஜ் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தாள்.

இதுவரை மித்ராவை யாரும் முன்னால் உட்கார வைக்க மாட்டார்கள். இந்த முறைதான் மித்ரா அமரவே, முதலில் கீழே , ஸ்டியரிங் பிரேக் எல்லாம் வேடிக்கை பார்த்தவள் சற்று நேரத்தில் ரோட்டை பார்க்க, அதற்கு பின் ஆரம்பமாகியது வினை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.