Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

அன்று 2002

”ஒரு கோடி ரூபாய் பணம் வேணும்” என சர்வசாதாரணமாக கேட்ட சித்தார்த்தை கோபத்தின் உச்சியில் நின்று கத்தினார் சக்கரவர்த்தி

”என்னது ஒரு கோடியா? என்ன விளையாடறியா எதுக்கு உனக்கு அவ்ளோ பணம்”

”இத்தனை நாள் என்னையும் எங்கம்மாவையும் பிரிச்சதுக்கு நஷ்ட ஈடு” என்றான் சித்தார்த்

”என்னடா உளர்ற?”

”நான் ஒண்ணும் உளர்றல? இப்ப பணம் தந்தா நான் லண்டனுக்கு போறேன் இல்லன்னா இந்த ஊட்டியை விட்டு நான் எங்கயும் வரமாட்டேன்” என உறுதியாக கூற தாத்தா முன்வந்தார்

”டேய் உனக்கு ஒரு கோடியெல்லாம் ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. இத்தனை வருஷத்தில உன் பையன் எதையுமே உன்கிட்ட கேட்டதில்லை இதையாவது செஞ்சித் தொலையேன் உன் அப்பன் வீட்டு காசா போகுது” என தன் மகனைத் திட்ட

”அப்பா அப்படியில்லை இந்த சின்ன வயசுல எதுக்கு அவ்ளோ பணம், அப்படியா பட்ட பிரச்சனை என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என தன் தந்தையை பார்த்து பாவமாகக் கேட்டார் சக்கரவர்த்தி

”உனக்கெதுக்கு அதெல்லாம், சொல்லனும்னு அவசியமில்லை பேசாம அவன் கேட்ட பணத்தை கொடுத்துட்டு கூட்டிட்டு போ” என கத்தினார் தாத்தா

சக்கரவர்த்தி தன் தாயை பார்க்க அவரும் கண்களாலேயே சைகை செய்து கெஞ்சவும் ஒருவழியாக

”சரி நான் தரேன் இப்பவே பேங்க்ல சொல்லி பணத்தை உங்க அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்பர் பண்ணச் சொல்றேன் போதுமா சித்து, இப்ப கிளம்பறியா” என கூறவும் அவனும் உடனே சந்தோஷத்தில்

”சரி நான் வரேன் இருங்க என் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனும்” என கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

சக்கரவர்த்தியும் பேங்கிற்கு போன் செய்து ஒரு கோடி ரூபாயை தன் தந்தை அக்கவுண்டிற்கு மாற்றம் செய்ய சொல்லி உத்தரவிட்டார்.

பின் தன் தந்தையிடம்

”அப்பா உங்க அக்கவுண்ட்ல 1 கோடி ரூபாய் பணம் வந்துடும், வேற என்ன வேணும் சொல்லுங்க” என்றார் சக்கரவர்த்தி

”வேற எதுவும் வேணாம் இப்ப நீ செஞ்ச வேலையே போதும்” என கூறிவிட்டு தன் பேரனை தேடிச் சென்றார்.

சக்கரவர்த்தி தன் தாயிடம்

”அம்மா எதுக்கு சித்து ஒரு கோடி ரூபாய் கேட்டான்”

”இங்க இருக்கற ஒருத்தருக்கு அதை தரனும், கட்டாயம் அவசியமும் கூட வேற வழியில்லை நான்தான் உன்கிட்ட பணத்தை கேட்கச் சொன்னேன்”

”அதுக்கு நீங்களே கேட்டிருக்கலாமே”

”என்னை விட இந்த பணம் அவனுக்குத்தான் அவசரம் தேவை, அதனால அவன் கேட்டான் சரி விடு நான் போய் சித்துவோட ட்ரஸ்ஸெல்லாம் பேக் செய்யறேன், நேரத்தோட அவனை கூட்டிட்டு போயிடு சரியா” என கூறவும் அவரும் சரியென தலையாட்டவும் பாட்டியும் சித்துவின் அறைக்குச் சென்றார்.

அங்கு சித்து தாத்தாவிடம்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”தாத்தா அப்பா பணம் போட்டுடுவாரு, எப்படியாவது அது டாலுக்கு பயன்படற மாதிரி மாத்தனும் எக்காரணம் கொண்டும் அந்த மகாதேவன் அதை அடையக் கூடாது அப்படி செய்யனும் தாத்தா உங்களால முடியுமா”

”ஏன் முடியாது அதுக்குன்னு ஏகப்பட்ட வசதிகள் பேங்க்ல செஞ்சிருக்காங்க, நீ கவலைய விடு, நான் அந்த வேலையை முடிக்கறேன் கார்டியனா என் பேர் போடறேன், இதைப்பத்தி மகாதேவனுக்கு தெரியாம பார்த்துக்கறேன்”

”தாத்தா அப்படியே டாலுக்கும் தெரியாம பார்த்துக்குங்க”

”ஏண்டா?” என சந்தேகத்தோடு கேட்டார் தாத்தா

”அவளுக்கு தெரிஞ்சா அவள் அந்தாளு கிட்ட சொல்லிடுவா அதான், பார்வதி அக்கா நல்லவங்க அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும், நான் இங்கிருந்து கிளம்பிட்டேன்னு தெரிஞ்சாலே அந்தாளு வீட்டை பூட்ட மாட்டான், அந்தாளு இல்லாத நேரமா பார்த்து இதப்பத்தி பார்வதி அக்காகிட்ட பேசுங்க தாத்தா அப்படியே என்னை பத்தியும் நல்லவிதமா சொல்லுங்க தாத்தா” என்றான் சித்தார்த்

”கண்டிப்பாடா உனக்கு ஒண்ணு தெரியுமா, உன் அம்மாகூட ஏழைப்பொண்ணுதான் அவளோட குணத்துக்கு மெச்சிதான் அவளை உங்கப்பாக்கு நான் கட்டிவைச்சேன். நீ கவலைபடாத நான் பார்வதிகிட்ட பேசி நீ லண்டன்ல இருந்து திரும்பி வர்றதுக்குள்ள கல்யாண ஏற்பாடுகளை செஞ்சிடுறேன். நீ வந்ததும் அவளை கல்யாணம் செஞ்சிகிட்டு தூக்கிட்டு போயிடு என்ன ஓகேவா” என அவர் சிரிக்க சித்தார்த்துக்கும் வெட்கம் வந்து சிரித்தான். பாட்டி அவன் வெட்கப்படுவதைக் கண்டு

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாsasi 2018-08-11 12:40
ஆதர்வ் அவர்களே சித்துவின் கதையில அன்று இன்று முழுசா எழுதினா பக்கங்கள் ரொம்ப பெரிசா போச்சி. அதான் அதை ரெண்டா உடைச்சி அன்று முதல்ல அனுப்பிட்டு அடுத்த கடைசி பாகத்தில இன்று 2017ல நடந்ததை முழுசா எழுதி கதையை முடிக்கலாம்னு இருந்தேன். அதுபடி செஞ்சேன். இந்த வாரத்தோட அன்று முடிந்தது. அடுத்த வாரத்தோடு இன்று 2017ம் கதையும் முடிந்துவிடும் மறக்காமல் படித்துவிட்டு கமெண்ட் தாருங்கள் நன்றி :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாAdharvJo 2018-08-10 22:30
Oh god oru virus ala indha thatha patiya konutingala madam ji facepalm pavam andha kuruka Vera Bali agitaru....😑 Indha mahadevan ivalo mosama 😈😈😈 Che avarukku oru vetti appreciation Vera seithene 😯 interesting n emotional update ma'am :clap: :clap: ama thilo Sid-a vendamn vitata andha oru kodiena panuvanga ;-) Sid oda parents rombha mosam...his grand parents wer everything to him avanga death patri maraika Ena irunhadhu :angry: avanga amma en ivalo dumb aga irukanga...pity Sid.."ennai patri sollungan thatha kitta solluma idam superb :dance: missing the current dates update...look forward for happy and funfilled finale sasi ma'am ... :GL: n thank you and keep rocking (y) hope Sid finds his doll before think express it.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாsasi 2018-08-11 11:03
Mr.ஆதர்வ் நான் எந்த வருடத்தையும் மிஸ் செய்யவில்லை. 2008 ல் திலோ படிப்பு முடிந்து டெல்லி சென்றாள். சித் லண்டனில் படித்து 2 வருடம் வேலை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிகிறான் என எழுதிவிட்டேன். அடுத்து டால் இறந்த சோகத்தில் நாட்களை அவன் விரக்தியில் கழித்தான் என கதையில் குறிப்பிட்டிருக்கிறேன். அன்று என்பது குட்டி சித்துவின் காதல் பயணம் அதில் சித்துவின் காதலி இறந்துவிட்டதாக எழுதிவிட்டேன் அதனால் அதன் பின்பு வரும் வருடங்கள் அவன் சோகத்தில் கழித்ததால் அதை பற்றி எழுதவில்லை என்றாலும் நாட்கள் கடந்தது என குறிப்பிட்டிருக்கிறான் அதில் தாங்கள் சொன்ன மிஸ்ஆன வருடங்கள் உள்ளது. 2016 முதல் திலோவின் காதல் ஆரம்பம். டால் ஊருக்கு சென்ற பின்புதான் சித் லண்டன் விட்டு வந்திருக்கிறான். முதல் பாகத்தில் 2004 ல் சித் எழுதிய லெட்டர் பற்றி எழுதியுள்ளேன். அடுத்து வந்த வருடங்கள் சித் விரக்தியில் நாட்களை கடத்தியாக முடித்துவிட்டேன். வருடங்கள் குறிப்பிடவில்லையென்றாலும் நான் கதையை சரியாக முடித்துவிட்டேன். வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாAdharvJo 2018-08-11 11:29
Nah Nah Nah I meant 2017 updates....current la ena nadakudhun sollama vittutngalen sonnen madam ji facepalm avalo confusing agava type seithen sorry!! THozhan illai thozhi :yes: Ninga enoda ID vachi confuse agathinga sis :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாsasi 2018-08-11 12:37
Quoting AdharvJo:
Nah Nah Nah I meant 2017 updates....current la ena nadakudhun sollama vittutngalen sonnen madam ji facepalm avalo confusing agava type seithen sorry!! THozhan illai thozhi :yes: Ninga enoda ID vachi confuse agathinga sis :grin:

:angry: ஏங்க இன்று 2017ன்னு குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம்ல நீங்க எழுதின missing current dates update னு எழுதவும் என்னை என் நண்பிகள் புடிச்சி திட்டிட்டாங்க நான் ஏதோ தப்பா எழுதிட்டேன்னு உங்க விசிறகள் என்னை டார்ச்சர் பண்ணிட்டாங்க ஏங்க நான் பாவம் இல்லயா :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாsasi 2018-08-11 12:42
Quoting sasi:
[quote name="AdharvJo"] THozhan illai thozhi :yes: Ninga enoda ID vachi confuse agathinga sis :grin:

எனக்கு முன்னாடியே தெரியும் நீங்க தோழின்னு சும்மா கலாய்ச்சேன். இது என்னங்க பேர் வித்தியாசமா வைச்சிருக்கீங்க இதுவும் நல்லாதான் இருக்கு ஆனா எனக்கு இப்படியே ஆதர்வ்ன்னு பழகிடுச்சா டக்குன்னு மாற முடியலை சோ நான் உங்க விசிறியாவே பேசிக்கிறேன் சாரி facepalm
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாmahinagaraj 2018-08-10 10:58
:eek: இது கொஞ்சம் வருத்தமான எபியா இருக்கு....
மாகதேவன் இப்படி எல்லாம் பன்னுவான்னு நினைக்வேயில்லை.. steam :angry:
சக்கரவர்த்தியும் சித்துகிட்ட மறைச்சிருக்க கூடாது... :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாmadhumathi9 2018-08-10 06:07
wow nice epi :clap: :sad: adutha epiyodu kathai mudigiratha? Interesting aaga poguthu. Y mam intha epi pages kuraiva irukku? Waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகாSrivi 2018-08-09 22:58
Nice update sis.. adhukullayea mudiyudhu kadha? Mahadevan 🤬.. thatha pati potitanga😪.. waiting for next Thursday
Reply | Reply with quote | Quote
+1 # NUNVPriyashakti 2018-08-09 20:15
Super Adutha ud la mudika porengla super dear awaiting for final update
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top