(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 05 - அஸ்ரிதா ஸ்ரீ

Partha muthal naale

வாழ்த்துறேன் வாழ்த்துறேன்

வாரும் பெண்களுக்கே வாழ்த்துறேன்

பொண்ண பெத்த தாயாரே

போதரமா கேட்டுருங்க

மாப்பிள்ளைய பெத்தவங்க

மன மங்களமா கேட்டுருங்க

சுண்ணாம்பு போல சுவிச்ச முகத்துக்கு

இந்த சூரியனார் வமுசம்

எங்கங்கோ வாச்சுச்சோ

வெத்தல போல விரிச்ச முகத்துக்கு

இந்த சந்திரனார் வமுசம்

எங்கங்கோ வாச்சுசோ

மஹி எனக்கு படபடப்பா இருக்கு டி. ஏன்னு தெரில.

சிரித்தவாரே பக்கம் வந்தவள் ஒன்றும் இல்லை சக்கு இதோ வரேன்.

 சகிக்கா எனக்கு பௌடர் போட்டு விடேன் என்று 10 வயது ரியா வந்தாள். ஓஹ்ஹ்ஹ போடலாமே.

ஹே முக்கா லூசு எனக்கு பிரெஞ்சு பிளைட் போடறியா.

நீ தான் பின்னல் போட்டுருக்கியே அனி.

போட்டுருக்கேன் இருந்தாலும் சுட் ஆகாத மாதிரி இருக்கு.

 போடுன்னா போடு ரெம்ப கேள்வி கேக்குற.இப்டியே மாத்தி மாத்தி அவர்களின் அலங்காரத்தில் லயித்து விட்டாள் சஹி.

அடியே என்னங்க டி அவளை ரெடி ஆக விடாம இப்படி பண்றீங்க என்று வந்தார் சஹியின் அத்தை.

வந்துட்டியாதாயே போய் உன் மருமகளை கொஞ்சிக்கோ. போகும் போது மஹியும் அணியும் கட்டை விரலை தூக்கி வெற்றி என்று காட்டி கொண்டனர்.

மஹிக்கு தெரியும் அவளின் மன வருத்தம். அதான் அணியுடன் கூட்டணி போட்டு அவளை பிரீயாக விடாமல் வேலை குடுத்து கொண்டனர். என்னதான் என்றாலும் அவர்களின் மூத்த சகோதரி மன வருத்தம் கொள்ள விரும்பாத அன்பு உள்ளங்கள் ஆயிற்றே.

மஹி அவளுக்கு கல்யாணம்னு சொன்னதும் எனக்கே ஒரு மாதிரி இருந்தது. இந்த விளையாட்டெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கோ.

விடு அனி எல்லாருக்கும் உள்ளுக்குள்ள இருக்குறது தான்.நம்ம பீல் பண்ணுன அவளுக்கு இன்னும் கஷ்டமா இருக்கும்.

சரிதான் மஹி.வா நம்ம போய் அவளுக்கு ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வருவோம்.அதுக்குள்ள அவ ரெடி ஆகிடுவா.

இப்போ இங்க என்ன நடக்குதுன்னு இப்படி பிலிம் காட்டுறிங்க.

போ டா மென்டல் உனக்கு ஒன்னும் புரியாது. அனி உங்க அண்ணா கிட்ட பீலிங்ஸ் எதிர் பாக்க முடியாது.

 போ மஹி இப்போ ஏன் பீலிங்ஸ் நு கேக்குறேன்.லைப் ல அவளுக்கு நெஸ்ட் ஸ்டேஜ் அத பக்குவமா புரிய வச்சு எடுக்குற வழிய பாருங்க.

டேய் மாமா உன் வயசு 21 தான ஆமா 91 வயசு தாத்தா மாதிரி பேசுற.

 எதார்த்தத்தை புரிஞ்சு பேச வயசான தாத்தாவா இருக்க வேண்டாம் தெளிவா யோசிக்கிற புத்தி போதும்.

 உங்கிட்ட மனுஷன் பேசுவானா எனக்குன்னு அண்ணனா பிறந்துருக்க பாரு என்று அனி தலையில் அடித்து கொண்டாள்

என்ன அத்தை இப்படி கண்ணை கசக்கிட்டு வர.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒன்னும் இல்லை டி சின்ன பிள்ளையா பாத்தது இன்னைக்கு நிச்சயம் பன்ற அளவு வளந்துட்டா அடுத்தது நீங்க தான். அதான் கண்ணு கலங்கிடுச்சு.

விடு அத்தை அவ நம்மள விட்டுட்டு போகலை. நம்மள சந்தோஷ படுத்த புது உறவை குடுக்க போறா.

காளி உன் மருமக ரெடி ஆகிட்டாளா.

 ரெடி அண்ணி. உங்க பெரிய அண்ணன் உன்ன கூப்டாரு போய் பாரு மா.

அடியே மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துருவாங்க கொஞ்ச நேரத்துல.

சரி அதுக்கு இப்போ நாங்க என்ன செய்யனும்.ஏதும் வெல்கம் டான்ஸ் ஆடணுமா அத்தை.

தாய்களா கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா அமைதியா நடிங்க கொஞ்ச நேரம்.

ஏன் மா உன் மருமக கிட்ட இல்லாததெல்லாம் எதிர் பாக்குற என்று மஹி அணியை வாரி கொண்டிருந்தாள்.

ஏன் டி ஏன் டி இப்படி பண்றீங்க.இந்த சிறுசுகளை உங்கள பாக்க சொல்லலாம்னு நினச்சேன்.வேண்டாம் அவங்களா இருந்தாலும் அவ்ளோ ஆட மாட்டாங்க.உங்க கூட சேர்ந்து தான் ஆட்டம் அதிகம் ஆகும்.

ஒஹ்ஹஹ் அப்டியா அப்போ போ மா. இன்னும் இங்க ஏன் நிக்குற கிளம்பு எங்களுக்கு மேக் அப் வேலை இருக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.