“இல்லை... நான் அழக்கூடாது... நான் ஏன் அழவேண்டும்?? ... தப்பு செய்ய முயன்றவன் அவன்...அவனே திமிராக கதவை உதைத்துவிட்டு போறான்.. நான் ஏன் அவனுக்காக அழ வேண்டும்?? நான் அழமாட்டேன் “ என்று உறுதி செய்தவள்
அவசரமாக எழுந்து சென்று முகத்தை தண்ணீர் அடித்து கழுவினாள்...முகமும் , மனமும் ஓரளவுக்கு தெளிவானது..
பின் வெளியில் வந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் டீபாய் மேல் இருந்த அந்த புது அலைபேசி I-phone X..
முதலில் சிறிது தயங்கியவள் பின் அதை எடுத்து பார்த்தாள்...தனக்காகத்தான் வாங்கியிருக்கான் போல... இதை கொண்டு வந்து கொடுக்கத்தான் வந்தானோ?
அப்புறம் ஏன் அப்படி செய்தான் என்று நினைத்தவளுக்கு தான் நின்றிருந்த கோலம் நினைவு வந்தது..
அப்போ ஒரு கணவனாகத்தான் என்னை நாடினானா???
இல்லையே... அவன் தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் ஒன்னும் குறைச்சல் இல்லை “ என்று திட்டி கொண்டே அவனுடைய ஷ்டேடஷ் ஐ பார்த்தாள். அது ஆப் லைன் ல் இருந்தது..இப்ப ஏன் ஆப் ல இருக்கு? ஒரு வேலை இது அவனுடைய சொந்த எண்ணாக இருக்கும் என்று எண்ணியவள்.. அவன் கோபமாக சென்றிருப்பான்.. பத்திரமாக போய் சேர்ந்தானோ இல்லையோ என்று எண்ணியவள் திடுக்கிட்டாள்...