(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி

Kaathalana nesamo

ரவணனை உள்ளே அனுப்பச் சொன்ன மித்ராவிற்கு , அவன் ஏன் வந்தான் என்ற கேள்வியே தோன்றியது. முதலில் ரிசெப்ஷனிஸ்ட் அவன் பேரைச் சொல்லி, பிசினஸ் விஷயம் பேசணும் என்றும், ஆனால் மித்ராவை பெர்சனாலகத் தெரியும் என்பதால் நேரில் பேசக் கேட்டதாகவும் கூறினாள்.

ரிசெப்ஷனிஸ்ட்டின் பேச்சில் குழப்பம் வந்தாலும், பிசினஸ் என்ற வார்த்தை இடையில் வந்ததால், அவனை உள்ளே அனுமதித்தாள்.

 உள்ளே வந்தவன், கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசிய பின், வெளியே சென்றான்.

அதற்குப் பின் மித்ராவின் முகத்தில் யோசனை ஓடியது. பின் மைதிலி வரவும், அவளோடு கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டாள்.

ஒவ்வொரு நாளும் அன்றைய என்குயரி பற்றிய விவரங்கள் மைதிலிக்கு ரிபோர்ட்டாக வந்து விடும். அன்றைய ரிபோர்ட்டில் சரவணன் பேரைப் பார்த்ததும் , மேற்கொண்டு கவனமாகப் படிக்க , அவன் மித்ராவைச் சந்தித்தது தெரிய வந்தது.

ரிபோர்ட்டில் அவனைச் சந்தித்ததைக் குறிப்பிட்டு இருந்த இடத்தில், மித்ராவும் கையெழுத்து இட்டு இருந்தாள்.

அதைப் பற்றி ஆபீசில் கேட்க எண்ணியவள், பின் வீட்டில் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

இருவரும் சேர்ந்து வீட்டிற்கு வரும் வழியிலும் எதுவும் சொல்லவில்லை மித்ரா. முகம் மட்டுமே ஏதோ யோசனையில் இருந்தது.

வழக்கமான வேலைகள் முடிந்து ரிலாக்சாக அமர்ந்த சமயம், ஷ்யாம், சுமித்ரா இருவரும் ஒன்றாகவே வந்தார்கள்.

ஷ்யாம் கைவலி இன்னுமே முழுக்க சரியாகததால் , சற்று சீக்கிரமே வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான்.

ஷ்யாம் வந்தவுடன், அவனுக்கு டிபன் எடுத்து வரச் சென்றாள் மித்ரா. அப்போது சரவணன் வந்ததைப் பற்றி ஷ்யாமிடம் சொல்லி விடலாம் என்று எண்ணி மைதிலி வாயைத் திறக்கும் போது சுமித்ரா வந்துவிடவே, தனியாக ஷ்யாமிடம் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள் மைதிலி.

மித்ரா டிபன் எடுத்து வந்து ஷ்யாமிடம் கொடுக்க, அதை ரெண்டு வாய் ஷ்யாம் சாப்பிட்டதும், சுமித்ரா அவன் தட்டில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டாள்.

மைதிலி

“ஏய் சுமி.. என்னது இது? வந்ததும் கை கூட கழுவாம சாப்பிடற? அதுவும் உன் அண்ணன் தட்டில் இருந்து ? என்ன பழக்கம் இது?

அதற்குள் ஷ்யாம் “ஏய் .. குட்டிப் பிசாசே. என்ன அவசரம் ? எப்போ சாப்பிட்ட? என்று கேட்டான்.

“நான் மத்தியானம் சாப்பிட்டேன் ப்ரோ”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“மத்தியானம் தானே சாப்பிட்ட.. மத்தியனத்திற்கும், இப்போ நீ சாப்பிடற இந்த நேரத்திற்கும் இடைவெளி வெறும் ஐஞ்சு மணி நேரம் தான். என்னமோ பத்து நாள் பட்டினி கிடந்த மாதிரி பிடுங்கிச் சாப்பிடறியே? நீ எல்லாம் மனுஷ ஜீவன் தானே?

“கண்ணு வைக்காதே ப்ரோ. நான் மட்டும் இப்போ இன்டர்ன்ஷிப் போகாம, காலேஜ் போயிருந்தா இதுக்குள்ளே ரெண்டு தடவை கான்டீன் போயிட்டு வந்து இருப்பேன். அதோட என் ஹன்ட்பாக்லே வச்சிருந்த அத்தனை ஸ்நாக்சும் காலி பண்ணியிருப்பேன். உன்னோட பிரெண்ட் அந்த சிடுமூஞ்சி சிங்காரம் ஹாஸ்பிடலில் இன்டர்ன்ஷிப் வாங்கிக் கொடுத்து, என் முக்கிய கடமையே செய்ய விடாம பண்ணிட்டியே? நீ எல்லாம் என்ன பாசமலர்?

“அது என்னமா உன் முக்கிய கடமை?

“சாப்பிடறது தான்.. யு நோ .. நாம் உயிர் வாழத் தேவையானது சாப்பாடு”

“நாங்க எல்லாம் உயிர் வாழ காத்து தான் தேவைன்னு படிச்சு இருக்கோம். இத எப்போ, யார் மாத்தினாங்க?

“போன பொங்கலுக்குத் தான் மாத்தினாங்க. தெரியாது?

“அடிங்க.. அப்புறம் யார் அந்த சிடுமூஞ்சி சிங்காரம்?

“வேறே யாரு? உன் தோஸ்தானா தான். ஒரு ப்ரீ அட்வைஸ். அந்த தோஸ்தானா பிரெண்ட்ஷிப்க்கு பிரேக்அப் பண்ணிடு. இல்லாட்டா நீயும் அந்த டாக்டர் மாதிரி ஆக்சிஜென்க்கு பதிலா உன் கம்பெனி வெல்டிங் காஸ் சுவாசிக்கப் போறே. பார்த்துக்கோ “

“உன் வாய் இருக்கே. அதைக் கொஞ்சம் குறை. இப்படி தான் அவன் கிட்டேயும் பேசிட்டு இருக்கியா?

“ச்சே..ச்சே. இது எல்லாம் ஸ்பெஷலி டிசைன் பார் என் ஆருயிர் பாசமலருக்கு மட்டுமே”

என்றவளின் மைன்ட் வாய்ஸ் “நீ பச்சைப் புள்ள ப்ரோ. உன்னை கலாயிக்கிறதுக்கு எல்லாம் யோசிக்கவே வேண்டியதில்லை. அந்த சிங்காரத்துக்கு கவுன்ட்டர் கொடுக்கணும்னா , தனியா ஓவர் டைம் பார்க்கணுமே” என்று பேசியது நல்லவேளையாக ஷ்யாமிற்கு கேட்கவில்லை.

இவர்களின் கலாட்டாவின் நடுவில் மித்ராவின் அமைதியை ஷ்யாம் கவனிக்கவில்லை.

பேச்சு அப்படியே டின்னெர் வரை நீளவே, ஷ்யாமும் ஆபீஸ் வேலை எதுவும் பார்க்காமல், எல்லோருடும் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.