(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

ரவு ஒன்றரை மணிக்கு சென்னை மீனம்பாக்கம் ஏர்போட்டில் வந்து இறங்கியது விமானம். ஆகாஷ் மற்றும் சாருவை வரவேற்க சாருவின் பெற்றோர் வந்திருந்தனர். சாரு தந்தை ஹேமன்த் கன்சல்டன்சி நடத்துகிறார். வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர். தாய் கலாவதி அஞ்சலக் துறையில் வேலை.

சாரு இருவரையும் கட்டிப் பிடித்து ஏர்போர்ட் என்று கூட பாராமல் அழுதுவிட்டாள். அவளின் பெற்றோர் சமாதானப் படுத்தினார்கள். முன்பே ஆகாஷை பற்றி தன் பெற்றோரிடம் சாரு போனில் சொல்லி இருந்தாள்.  பின்பு நிலைமை புரிந்தவளாக ஆகாஷை மீண்டும் அறிமுகப்படுத்தினாள்.

அவனும் அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடினான். பின்பு தன் விட்டிற்க்கு கிளம்புவதாக  சொல்ல “அதெல்லாம் முடியாது எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க அப்புறம் நிதானமா வீட்டுக்கு போலாம்” என்றார் கலாவதி. அவனை மேலும் பேச விடாமல் மூவரும் அழைத்துச் சென்றனர்.

அவனுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது. ஆகாஷிறக்கு பயண களைப்பு அதிகமாக இருந்தது. அவனை விட்டால் பத்து மணி நேரம் உறங்குவான். ஆனால் அவர்கள் வீட்டில் இதெல்லாம் சாத்தியமா? எத்தனை சொல்லியும் அவர்கள் விடுவதாக இல்லை. சாருவும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டாள் “வீட்டுக்கு வந்துட்டு போங்க . . தனியா என்ன செய்யப் போறீங்க?” என சொல்லிவிட்டாள்.

வேறுவழி இல்லாமல் அவர்கள் வீட்டுக்கு சென்றான். சுடச்சுட இட்லியும் சட்னி சாம்பாரும் கலாவதி கொடுத்தார். “ இந்த டைமல வேற எதுவும் சாப்டா உடம்புக்கு ஒத்துக்காது . . ”

இரண்டு நாட்களாக உப்பு காரம் சுவை என எதுவுமில்லாமல் சாப்பிட்டு. அடக்கம் செய்ய இருந்த நாக்கிற்க்கு இதை சாப்பிட்டதும் புத்துயிர் கிடைத்தது. இரண்டு இட்லியை சேர்த்து விழுங்கினான். “இதுக்கு முன்னால இட்லியே பாத்தது இல்லயா? மானத்த வாங்குறியே” என மனம் ஒருபுறம் கடிந்தாலும் அதை கண்டுக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சாப்பிட்டதும் கிளம்ப நினைத்தான். “நடுராத்திரில உங்க வீட்டு கிளம்பற வேலையே வேணாம் படுத்து தூங்குங்க” என அவன் மனஓட்டத்தை புரிந்து பேசினார் ஹேமன்த். “அம்மாடி தம்பி உன் ரூம்லயே படுக்கட்டும்” என சொல்லி நகர்ந்தார்.

ஆகாஷ் மூளை கடைசி வார்த்தைகளை கேட்டு எக்குதப்பாக எண்ணமிட்டது. சாரு “வாங்க படுக்கலாம் டயர்டா இருக்கு” என சோம்பல் முறித்தாள்.. அதைப் பார்த்தவன் “ஐய்ய்யோ இவ வேற . . கடவுளே என்னை என்கிட்டருந்து காப்பாத்து” வேறு எப்படி வேண்டுவதாம்.

“வா” என அழைத்தவள் பின்னால் ஆட்டுக்குட்டியைப் போல சென்றான். “இது என் ரூம் . . நீங்க படுங்க” என்றாள்.

“நீயு. . .” என வார்த்தையை முடிக்கமுடியாதவனாய் அசமுவழிய

தன் இரண்டு இடுப்பிலும் கை வைத்து அவனை முறைத்தவள்  “ஆசைதான் நீங்க என் ரூம்ல படுங்க .  .  நான் அக்கா ரூம்ல படுக்கிறேன்” என்றாள் அவன் மனதினை யூகித்தவாரு. காத்து போன் பலூனாய் ஆனது அவன் முகம். வெளியே செல்ல எத்தனித்தவளை தன் அருகில் இழுத்தான். “ஐயோ அப்பா.  .” என ஏதோ சொல்ல முயன்றவள் கன்னத்தில் அஞ்சல் துறை முத்திரையாய் பதித்தான்.

அவள் வெட்க புன்னகையை ரசித்துக் கொண்டிருக்கையில் “சாரும்மா” என்ற அம்மாவின் குரல் இருவரையும் நொடிப் பொழுதில் பிரித்தது. அவள் அவசரமாய் நகர்ந்து படுக்கை விரிப்பை சரி செய்வதுப் போல பாவணை செய்ய . . . அவள் அம்மா வந்து “நல்லா ரெஸ்டு எடுங்க தம்பி . .எதாவது வேணுனா கேளுங்க சங்கோஜ படாதீங்க”  என சொல்லிவிட்டு சாருவை பார்த்து “நீயும் போய் தூங்குடி” என சென்றுவிட்டார். அவளும் நல்லபிள்ளையாய் “சரிம்மா” என்றாள்.

சாரு கண்ணாலேயே பை சொல்லி சென்றுவிட்டாள். படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். சாரு உறங்கவிடாமல் மனதில் ஏறிமிதித்து இன்பமாய் படுத்தினாள். சில சமயங்களில் அசதி அதிகமானாலும் உறக்கம் வராது.

கதவை திறந்து பால்கனிக்கு சென்றான். மணி மூன்று வெளியே நிசப்தம். தெரு விளக்கின் வெளிச்சத்தில் சாலை முழ்கி அடுத்த நாளின் செயல்பாட்டினை தன் மேல் எழுதிக் கொள்ள தயாரானது. ஏதோ பறவை விடிந்துவிட்டது என எண்ணி கூவ தொடங்கி பின் அடங்கியது. எங்கோ நாய் குறைத்தது.

மீண்டும் கதவை தாளிட்டு படுத்தான். தன் செல்போனை இந்திய நேரத்திற்கு மாற்றினான் பின்பு காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான். பத்து நிமிடம் கழித்து மீண்டும் அலாரம் அடிக்க வேண்டி ஸ்நுசிலும் வைத்தான். இப்போது சுவற்றில் இருந்த கடிகாரம் டிக் டிக் டிக் என சத்தம் போட்ட வண்ணம் இருந்தது. அக்காவும் தங்கையும் மனதில் ஆயிரம் எண்ணங்களாய் வளம்வந்தார்கள். ஆனால் சாரு மனதில் அதிக இடத்தை பிடித்து பெரும்பான்மை வோட்டை பெற்றிருந்தாள்.

சுவரில் சாரு மற்றொரு இளைஞியோடு சிரித்த வண்ணம் போட்டோவிற்க்கு போஸ் கொடுத்தாள். டேபிள் மேல் வைத்திருந்த வேறு ஒரு புகைப்படத்தில் குடும்பத்தில் உள்ள நால்வரும் இருந்தனர். அந்த மற்றொரு பெண்தான் சாருவின் அக்கா சுவாதி என யூகிப்பது பெரிய விஷயமாக இல்லை. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.