(Reading time: 12 - 23 minutes)

அதற்குள் வீட்டு வேலை செய்ய வள்ளி வந்தாள். வீட்டை சுத்தம் செய்து கொடுத்தாள். ஆகாஷ் அவள் குழந்தைகளுக்கு வாங்கி வந்த பரிசு பொருட்களை கொடுத்தனுப்பினான்.

பயண களைப்பு மிச்சமிருக்க மீண்டும் மாலையே உறங்கிவிட்டான். காலிங்பெல் நான்கைந்து முறை அடித்தபின் எழுந்து கதவை திறக்க சாரு நின்றிருந்தாள்.

அவன் கலைந்த கேசமும் தூங்கு மூஞ்சியுடன் காட்சி அளித்தவனை பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள். “தூக்கத்த கெடுத்துட்டு என்ன இளிப்பு?” என்றவன் மீண்டும் தன் கட்டிலில் போய் விழுந்தான்.

சாரு டைனிங் டேபிளில் அவனுக்காக கொண்டு வந்த உணவை வைத்துவிட்டு அவன் அறைக்கு சென்றாள். “இன்னுமா தூக்கம்?” என கேட்டவளுக்கு பதிலே இல்லை.

“ஏந்திரி ஆகாஷ் ஏந்திரி” என வேண்டுமென்றே சத்தமாக அவன் காதருகில் சொன்னாள். அவன் தலையணையால் தன் முகத்தை மூடிக் கொண்டான்.

“டேய் எந்திரிடானா” என்றவள் மடியில் தலைவைத்து சௌகிரியமாய் படுத்துக் கொண்டான்.

“பாப்பானு நெனப்பு சார்க்கு” என அவன் தலை முடியை கோதினாள். “இப்ப தூங்கினா ராத்திரி தூக்கமே வராது மவனே”

“உன் வீட்ல வாங்க போங்கனு மரியாதய கூப்ட இப்ப டா மவனேனு மரியாத தேய்து . . செம்ம பெர்பாமென்ஸ் பண்றடி நீ” என தூக்கதிலியே அவள் காதை பிடித்து இழுத்தான்.

“ஆ . . ” என்றவள்  “அது அப்படிதான் . . தனியா மாட்ன நீ டேமேஜ்தான் மவனே” என சிணுங்கினாள்.

“நீ எப்டி வேணா கூப்டுடி என் க்யூடி” என மெதுவாய் கண் திறந்து அவளை பார்த்தான்.

“வந்த வேலைய கவனிக்கலாமா?” கேட்டாள்

எழுந்து அமர்ந்தான். “இப்ப எதுக்கு இங்க வந்தே?”

அவன் கேள்வியால் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு “உனக்கு ஆசையா டின்னர் கொண்டு வந்தேன். நீ என்னடானா?”

“இந்த சென்னைய இதுக்கு முன்னாடி நான் பார்த்த்தே இல்ல பாரு. உன் பேரண்ட்ஸ் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாமே. எனக்கு எதுக்கு இதெல்லாம். பாவம் அவங்க ஏற்கனவே மனசு கஷ்டத்துல இருக்காங்க. அதுக்காகதான் சொன்னேன். அப்புறம் அவங்க செல்லல பொண்ண மிஸ் பண்ணுவாங்க” என்றவனிடம் அழகு காட்டி “எல்லாம் எங்களுக்கு தெரியும்” என எழுந்துச் சென்றாள்.

“சாப்ட வாடா” ஹாட் பேக்கை பிரித்து எடுத்து வைக்க தொடங்கினாள்.

ஆகாஷ் முகம் கழுவி டைனிங் டேபிளுக்கு சென்று அமர்ந்தான்.

“நாளைக்கு எனக்கு வெளில வேலை இருக்கு நீ இங்க வராத” என்றவனை முறைத்தாள். “உங்க அக்கா விஷயமா வெளிய போகணும் சில ஏற்பாடு செய்யணும்” என்றான் அவளின் முறைப்பை பொருட்படுத்தாமல்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நாம எப்ப சதுரகிரி கிளம்புறது?” கேட்டாள்

“டே ஆப்டர் டுமாரோ . .” என்றான் சாப்பிட்டபடி

“சரி நான் ரெடியா இருக்கேன். அப்பா நம்ம கூட வருவாரு. அக்காவ பாத்து ரொம்ப நாள் ஆச்சாம்”

“குட் நீயும் உங்க அப்பாவும் தனியா போங்க . . நான் தனியா வரேன். நாம ரெண்டு பேரும் தெரிஞ்சவங்களா காட்டிக்க கூடாது”

“என்னடா சொல்றா”

“ஜஸ்ட் டு வாட் ஐ சே சாரு . . நோ க்ராஸ் கெஷ்டின். உங்க அப்பாகிட்டயும் இத சொல்லி வை. அவர் சுவாதிகிட்ட உளறிட போறாரு”

“என் அப்பா உளற மாட்டாரு” சூடாக பதில் வந்தது

“ஹே நான் அந்த மீனிங்ல சொல்லல . . கூல் பேபி .. எனிவே சாரி . . நானே அவர்கிட்ட பேசறேன்”

“நாம எந்த விதத்திலயும் கனக்டெட்னு அங்க யாருக்கும் தெரிய கூடாது. உன் அக்கா உள்பட . . .  நீ யாரோ நான் யாரோ சரியா”

சரியென தலையாட்டினாள்.

அதன் பிறகு அவள் அங்கு என்ன எதை எப்படி பேச வேண்டும் என கிளாஸ் எடுத்தான். “நான் சொதப்பிடுவேன்” என பயந்தாள்.

“அக்கா வேணுமா வேண்டாமா?” குழந்தையிடம் சாக்லேட் வேண்டுமா வேண்டாமா என கேட்பதைப் போல கேட்டான்.

வேண்டும் என தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அவள் விழிகளில் தெரிந்த ஆர்வம் ஆசை அனைத்தையும் அவனால் உணர முடிந்தது.

ஆகாஷ் வேலை என்று இறங்கிவிட்டால் சீரியசாகிவிடுவான். “ஏண்டா சீரியசா ஆகிட்ட . . கோப்படாம குணமா பதமா சொல்லு” என கிண்டலாக சொன்னவளை செல்லமாக தலையில் குட்டு வைத்தான்.

“சரி  நான் கிளம்புறேன் டைம் ஆச்சு” என கிளம்பினாள்

“நாளைக்கு இவ்னிங் உன் வீட்டுக்கு வரேன். நானே அவங்கிட்ட பேசிகிறேன். நீ எதுவும் உள . .  சொல்லாத” என்றான்

“தெரியும்” என அழுத்தமாக சொல்லி கிளம்பினாள்.

அடுத்த தன் பெற்றோருடன் சிறிது நேரம் பேசிவிட்டு . . . கூகுளில் சதுரகிரி என டைப் செய்தான்.

தொடரும் . .

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.