(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 11 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

வாழ்க்கை என்பது ஒரு புரிந்தும் புரியாத தெரிந்தும் தெரியாத பல புதிர்களை கொண்டது. மனிதனின் வாழ்க்கையை ஆட்டிப்படைப்பது எண்ணங்கள் தாம். ஒரு நிகழ்வோ அல்லது மனிதரோ மகிழ்ச்சியை  ஏற்படுத்தலாம். ஆனால் அதே நிகழ்வு அல்லது மனிதரின் நினைவோ நம் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியை அளிக்குமா? என்று சொல்லவிட முடியாது. சூழ்நிலைக் கேற்ப எண்ணங்கள் மாறுபடும்.

சுவாதியை பற்றிய எண்ணங்கள்தான் சாரு மனதை ஆக்கிரமித்து இருந்தது. அவளை பற்றிய எண்ணங்கள் சமீப காலமாக மகிழ்ச்சியளிக்க கூடியவையாக இல்லை. அவளைப் பற்றி கவலைகள்தான் அதிகமாக இருந்தது. இதில் ஈடுபட்டு ஆகாஷிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பது மற்றொரு கவலை.

சாரு மனதில் எண்ணங்கள் ஊர்வலம் போனாலும் கைகள் தானாக பேக்கிங் செய்தது. தன் பெற்றோருக்கு மற்றும் அக்கா சுவாதிக்கு வாங்கிய பரிசு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டாள். இவற்றை எடுத்துக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும் எடுத்துக் கொண்டாள்.

“ரீச்சிடு நியூயார்க்” என்ற ஆகாஷின் வாட்ஸ்அப் மெசேஞ் அவள் நினைவுகளை கலைத்தது.

ஆகாஷ் அவன் பெற்றோரை நியூயார்க்கில் லலிதா வீட்டில் விட்டு பின் சாருவுடன் இந்தியா கிளம்ப ஏற்பாடு செய்திருந்தான். அதன்படி முதலில் அவர்கள் டெக்சாசில் இருந்து நியூ யார்க்கை வந்தடைந்துனர். பத்மாவதிக்கு தான் தன் மகனோடு டெக்சாசில் நேரம் கழிக்க முடியாமல் போனதில் வருத்தம்.

“இந்தா வீட்டு சாவி . . பத்திரமா வெச்சிகோ  . . வீடு  கொஞ்சம் தூசியா இருக்கும்  . . வள்ளிக்கு போன் பண்ணிருக்கேன் அவ வந்து கிளீன் பண்ணுவா . . அப்புறம்” என தொடர்ந்து பேசிய பத்மாவதியை இடைமறித்து

“அம்ம்ம்மா. . . நான் என்ன தெரியாத ஊருக்கா போறேன் . . நம்ம வீடு . .நம்ம ஊரு . . நீங்க கவலப்படாம இருங்க . . நான் பாத்துக்கிறேன்” என அவரை அடக்கினான்.

அப்போது சாரு லலிதா வீட்டிற்கு வந்தாள். அனைவரிடமும் நலம் விசாரித்தபடி இருக்கையில்  பத்மாவதி “ உன் அக்கா நிச்சயமா வீட்டுக்கு திரும்புவா . . தைரியமா இரும்மா” என ஆறுதலளித்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சீக்கிரமா உன் அக்காக்கு கல்யாணம் பண்ணிடுங்க” என லலிதா தன் பங்கிற்கு சொல்ல

“ஆகாஷ்க்கும் வரன் பாக்கணும் ” என முக்கிய இடத்தை பத்மாவதி பிடிக்க . . ஆகாஷ் சாரு இருவரும் ஒருவரை ஒருவர் திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டனர்.

“இப்ப கல்யாணத்துக்கு என்னமா அவசரம்?“ என ஆகாஷ் வேண்டுமென்றே சாருவிற்காக அலுத்துக் கொள்பவன் போல சொல்ல . .

“யப்பாடி இந்த டெய்லாக் கேட்டு கேட்டு அலுத்து போச்சுடா . . மாத்தி சொல்லு” தன் காதுளகில் கைவிதைப்படி சொன்னாள் லலிதா.

“அவசரம் என்னமா கல்யாணத்துக்கு இப்ப? . . கல்யாணத்துக்கு என்ன அவசரம்? ” என பார்திபன் பாணியில் ஆகாஷ் மாத்தி மாத்தி சொல்ல . . “தெரியாம கேட்டுடேன் ராசா . .  வாய பொத்து” என்றவள் நக்கலாக கும்பிடு போட்டாள்.

“பாரு ஆகாஷ் இப்பவே சொல்லிட்டேன் . . உனக்கு சாருவ பிடிச்சிருந்தா . . நாங்களே சாரு அம்மா அப்பாகிட்ட பேசிடறோம்” என தடாலடியாக ஆகாஷின் அப்பா ராம்மூர்த்தி கேட்டுவிட்டார்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த்தே. சொல்லிதான் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாருவை மருமகளாக ஏற்க பத்மாவதி ராமமூர்த்தி தம்பதியினருக்கு சம்மதம்தான்.

ஆனால் இப்படி சட்டென அப்பா கேட்பார் என எதிர்பார்க்கவில்லைதான். எதுவும் சொல்லாமல் சாருவை பார்த்தான். அவளுக்கோ சங்கடமாய் போனது. இதற்கு என்ன பதில் சொல்வது? ஆகாஷிற்கு சந்தோஷம் இல்லாமல் இல்லை.

சாரு அக்காவின் திருமணம் முடிந்த பின்னர்தான் தன் திருமணம் என எண்ணிக் கொண்டிருந்தாள். அவள் அக்கா திருமணம் செய்துக் கொள்வாளா இன்னும் என்னென்ன சிக்கல்கள் அங்கு இருக்கிறதோ இந்த நிலையில் இப்படி ஒரு கேள்வியா என தடுமாறினாள்.

“அப்பா முதல்ல சாருவாட அக்கா விஷயம் சால்வாகட்டும் . . அதுக்கு அப்புறமா மத்த விஷயத்த பாக்கலாம் . .ஜஸ்ட் ஒன் மன்த் வெயிட் பண்ணுங்க. இந்த டாபிக் இதோட போதும் ப்ளீஸ்” என்றான் ஆகாஷ் சாருவின் மனதை புரிந்தவனாக. மற்றவர்களும் அந்த பேச்சை அத்துடன் நிறுத்திவிட்டார். “தேங்க்ஸ்” என்றாள் கண்களால் ஆகாஷிற்க்கு.

பின்பு ஏர்டிக்டெக்டை அவனிடம் காண்பித்தாள். அதை பார்த்தவன் டிக்கெட் நடுவில் “தேங்க்ஸ் அண்ட் ஸாரி” என ஒரு பேப்பரில் எழுதி இருந்தது. புன்னகைத்தவன் அவற்றை திரும்ப கொடுத்துவிட்டான். சிறிது நேரம் லலிதா பத்மாவதியிடம் பேசிவிட்டு சாரு கிளம்பிவிட்டாள்.

றுநாள் மதியம் போல அங்கிருந்து இருவரும் ஏர்போட்டிற்க்கு கிளம்பினார்கள். லலிதா மற்றும் பத்மாவதி செண்ட் ஆப் செய்ய வந்தனர். இருவருக்கும் பை சொல்லி ஆகாஷ் சாரு  உள்ளே சென்றனர். போர்டிங் பாஸ் எடுத்தபின் . . தங்கள் லக்கேஜை செக்கின் செய்து அனுப்பிவிட்டு அமர்ந்துக் கொண்டனர். இதற்கே கிட்டதட்ட இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.