(Reading time: 10 - 20 minutes)

“ஸ்டெப் மதர்”

“S T E P  F A T H E R”

“ஸ்டெப் பாதர்”

“C A T”

“கேட்”

“D O G” என்றவனிடம்

“இதெல்லாம் ஹரிக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது” என்றாள். அவள் தொனியே அவளுக்கு இது பிடிக்கவில்லை என காட்டியது.

“பதில் சொல்லும்மா” என்றான்

அவளும் “டாக்” சத்தமாக சொல்ல பக்கத்து இறுக்கைகாரன் அவர்களை திரும்பி பார்த்தான்.

“H E N”

இவன் விட மாட்டான் என “ஹென்” என்றாள்.

“S T E P  C A T”

“ஸ்டெப் கேட்” முறைத்தாள்

“S T E P  D O G” எனறவன் “முடிய போகுது செல்லம்“ என கொஞ்சினான்

“ஸ்டெப் டாக்”

“S T E P  H E N”

“ஸ்டெப் ஹென்”

அவள் தலையில் செல்லமாய் குட்டியவன் அது “ஸ்டெப் ஹென் இல்லடி ஸ்டீபன் (STEPHEN)” என்றான் சிரித்தவாரு.

“அட ஆமா” என நாக்கை கடித்து தன் தவறை உணர்ந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இதுக்கு பேரு சப்லிமினல் சைக்லாஜி” என்றான்.

“ . . அப்படினா?”

“மத்தவங்க மனசுக்குள்ள விஷயங்களை வாண்ட்டா திணிக்கறது.”

“அதாவது அவங்களுக்கு தேவையான விஷயத்தை மத்தவங்க மனசுல திணிக்கப்படுதா?” ஆச்சரியமாய் கேட்டாள்.

“ஆன்மீகத்துல இருந்து அரசியல்வரை சிலர் இதை கடைபிடிக்காங்க. சொல்லவேண்டிய விஷயத்த டெய்ரக்டா சொல்லாமா தேவையில்லாம மத்த விஷயங்கள் பேசி கடைசில இவங்களோட விஷயத்த சொல்லுவாங்க. இதை கேட்கறவங்களுக்கு பேச்சாளர் சொல்றது எல்லாமே சரியோனு தோணும். உண்மையில இத மெஜிஷியன்ஸ் யூஸ் பண்ணுவாங்க. இப்ப உன்கிட்ட சொன்னமுறை கூட ஒரு மெஜிஷியன் சொன்னதுதான்.” என்றான் விளக்கமாக

“நம்பவே முடியலடா”

“ஆமா நான் முதல்லயே ஸ்டீபன் ஸ்பெல்லிங்க சொல்லி இருந்தா . .நீ சரியா கண்டுபிடிச்சிருப்ப . . ஆனா தேவை இல்லாம சில வார்த்தைகல சொல்லி உன் முழு கவனத்தையும் என் பக்கம் இழுத்து . . உன்ன தவறா சொல்ல வெச்சிருக்கேன். இதுதான் சுவாதிக்கு நடந்திருக்குமோனு தோனுது . .

ஆனா என்னால உறுதியா இதுதான்னு சொல்ல முடியல . . சுவாதிய சந்திக்கணும் அப்புறம் என் யூகம் சரியானு பாக்கணும். அப்படி சரியா இருந்தா அவள திரும்ப நாம திசை திருப்பணும். . ”

“இதெல்லாம் நிஜமா . . உன்னால முடியுமா ஆகாஷ்?”

“ஏன் முடியாது?” என்றான் மனமும் கூடவே “உனக்காக முடிப்பேன்” என்றது.

அவள் சோர்வாக அவன் தோளில் சாய்ந்தாள்.

துரகிரி மலையின் ஒரு கபுதியான கற்கண்டு மலைக்குக் கீழ் அடிவாரத்தில் “ஏர் அழிஞ்ச மரம்” உள்ளது. அவன் கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தான். தன் நண்பன் தங்க ஊசியாக மாற்ற சென்றவன் இன்னும் திரும்பவில்லையே என்ற ஆதங்கம் ஒருபுறம் மனதில் சுழல . . அவன் சரியாக செய்திருப்பானா? விலங்கு தாக்கி இருக்குமோ? இப்படி பல கேள்விகள் அவன் மண்டையை குடைந்தது.

கொட்டைகளை எண்ணையில் போட்டு ஊற வைத்தான். அந்த ஊறிய கொட்டையில் இருந்து மை எடுக்க வேண்டும். அது  வசியத்திற்க்கு பயன்படுத்தும் மை. சுவாமிஜிக்கு தெரியாமல் இவற்றை செய்தான்.

“ஏர் அழிஞ்ச மரத்தின்” காய் முற்றியவுடன் கீழே விழுந்துவிடும். விழுந்த காய் காய்ந்தவுடன் தோல் உரிந்து மீண்டும் மரத்தில் தானே ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. அந்த காய் காற்று அல்லது மழையினால் தள்ளி போயிருந்தாலும் சரியாக அதனுடைய மரத்தில் ஒட்டிக் கொள்ளும்.

தொடரும் . .

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.