(Reading time: 10 - 20 minutes)

பிளைட்டின்னுள் முதலில் எக்ஸி கியூடிவ் கிலாஸ் சென்றார்கள். அதன் பின்பு வீல் சேர்ரில் வந்தவர்கள் அதற்கடுத்து  குழந்தைகளை வைத்து கொண்டிருப்பவர்கள் அதன்பின் இவர்கள் முறை வந்தது.

அனகொண்டா வயிற்றுக்குள் நுழைவதுப் போல சற்றே இருட்டாக வளைந்து வளைந்து சென்றது பாதை. இறுதியில் லிப்ஸ்டிக் விமானபணிப் பெண் இயந்திரதனமான புன்னகையுடன் நமஸ்தே என்றாள் இவர்களை பார்த்து. ஆட்களை பார்த்து அந்தந்த நாடினற்கேற்ப வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அது ஜெர்மன் ஏர்லைன்ஸ் என்பதால் அவர்கள் அதிகம் காணப்பட்டனர். அங்கிருந்து ஜெர்மனியில் இருக்கும் பிராங்பர்ட் செல்கிறது. ஆதலால் ஜெர்மன் நாட்டினர் சற்று அதிகமாக இருந்தனர். மீண்டும் பிராங்பர்ட்டில் இருந்து சென்னை பயணம்.

இருவரும் தங்கள் சீட்டில் அமர்ந்தனர் . . அது மூன்று இருக்கை கொண்டது . . வின்டோ சீட்டில் உரித்த கோழி போல சிவந்த நிறத்து ஜெர்மன்காரன் அமர்ந்திருந்தான். நடுவில் சாரு அடுத்து ஆகாஷ்.

“வின்டோ சீட் கிடைச்சா நல்லா இருந்திருக்குமில்லா?” கேட்ட ஆகாஷிடம்

“வேண்டா வேண்டா ரெஸ்ட் ரூம் போகணும்னா ஒவ்வொருவாட்டியும் செக் போஸ்ட் மாதிரி அவனதாண்டி போறது சங்கடமா இருக்கும் . . இதுவே பெட்டர்” என்றாள்.

அனைவரும் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து ஒருவழியாக பிளைட் கிளம்பியது. கேப்டன் கடனே என்று கரகர ஸ்பீக்கர் குரலில் வரவேற்றான்.

இன்னும் பத்து மணி நேரம் இப்படியே பயணம் செய்ய வேண்டும். ஆகாஷ் சிறுவயதில் எல்லாரையும் போல மேலே பிளைட் பறந்தால் ஏக்கத்துடன் பார்த்திருக்கிறான். ஆனால் பிளைட் அனுபவம் கிடைத்தபின்தான் டிரைன் பஸ் எத்தனையோ பரவாயில்லை என நினைக்க வைத்தது.

அதிலும் அமெரிக்க  சென்னை பயணம் கொடுமை. கிட்டதட்ட இரண்டு நாள் பயணம் ஆயிற்றே. ஆரம்ப கட்டத்தில் எகானமி கிளாஸில் பயணம் செய்தான். பின்பு ஓரளவு கையில் பணம் சேர்ந்ததும். எக்சிகியூடிவ் கிளாசில்தான் பயணம் செய்வான். கொஞ்சமாவது வசதியாக இருக்கும்.

இந்த முறை அவன் டிக்கெட் ரிசர்வ் செய்ய இருக்கையில் திடீலென சாரு “நீங்க எனக்காகதான் இந்தியா வர்றீங்க அதனால நான்தான் ரிசர்வ் செய்வேன்” என சொல்லிவிட்டாள்.

அவளிடம் நமக்கு எக்சிகியூடிவில் ரிசர்வ் செய் என எப்படி சொல்வது. அவளுக்கு காஞ்சனா பள்ளியில் கொடுக்கும் சம்பளத்தை வைத்து இதுதான் முடியும். இவன் பணம் கொடுத்ததிற்க்கும் மறுத்துவிட்டாள்.

அவன் அசௌகிரியத்தை புரிந்தவளாய் “கஷ்டமா இருக்கா?” அவள் கேட்க

தன் அருகிலேயே தன் தேவதை அமர்ந்திருக்க  கசக்குமா என்ன? “ச்சே ச்சே இல்ம்மா” என தலையாடினான். அவனின் இடது கைக்குள் அவளது வலது கை விரல்கள் சிறையாக . . “என்ன பண்றீங்க” என்பதாய் புருவத்தை வளைத்து சிணுங்கியவள் விரல்களை இன்னமும் இறுக்கி பிடித்தான்.

அவர்களை கடந்து போன விமான பணிப்பெண் இவர்களை கண்டும் காணாத மாதிரி போனாள். விமானம் மெல்ல மெல்ல மேலே எழும்ப விமானதளம் ஓடுபாதை கட்டிடங்கள் என எல்லாம் விளையாட்டு பொம்மையாய் காட்சி அளித்தது.

“உனக்கு பிளைட் தியரி தெரியுமா?” ஆகாஷ் கேட்க

“தெரியாது” என தலையாட்டினாள்

“பிரச்சனைகள் பக்கதுல இருக்கரவரை  பெரிசா தெரியும் அதையே தூரமா வெச்சிபாரு சின்னதா தெரியும் பிரச்சனைய சுலபமாக கையாளலாம் என்ற தன்னம்பிக்கை மனசுல பிறக்கும். இப்ப வெளிய பாரு உலகமே உன் காலடியில ஈசியா சமாளிக்கலாம்.” என்றான்

“கேக்க நல்லாதான் இருக்கு” என அலுத்துக் கொண்டாள்.

“கமான் சாரு” அவளின் உள்மனதின் எண்ணத்தை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

“எனக்கு பெரிய சந்தேகம் என்னனா . . சுவாதி எப்படி அங்க போய் இருக்கா . . எனக்கு புரியவே இல்லடா” என சோர்வாக கேட்க

“விளையாடலாமா சாரு” என்றான்.

பதிலுக்கு முறைத்தவளை . .“சீரியசாடா ஒரு குட்டி கேம் . . ப்ளீஸ்டா” என்றதும்

புன்முறுவலுடன் “என்ன கேம்” என்றாள்

“நான் இங்லீஷ் லெட்டர்ஸ் சொல்லுவேன் . . அதை நீ வேர்டா சொல்லணும்”

“இது என்ன விளையாட்டு” என மனதில் நினைத்தாலும் அவனுக்காக சரியென தலையாட்டினாள்

ஆகாஷ் ஆராம்பித்தான் “MOTHER” என்பதற்கான ஆங்கில எழுத்துகளை தனிதனியாக அழுத்தமாக சொன்னான்.

சாரு “மதர்” என்றாள்

“F A T H E R“

“பாதர்” என்றவள் இதென்ன விளையாட்டு என்பதாக குரலில் அலுப்பு தட்டியது.

“S T E P M O T H E R” அவன் விடுவதாக இல்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.