(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் மெடிசின் எடுத்துக் கொண்ட பின் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள, மித்ரா கீழே இறங்கி சென்றாள்.

மைதிலி மித்ராவிற்காக காத்து இருக்க, –மற்றவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். மித்ராவும், மைதிலியும் சாப்பிட்டு வரவும், எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மித்ராவின் முகத்தைப் பார்த்த மைதிலி,

“மித்ரா , என்ன ஆச்சு? ஷ்யாம் ரொம்ப கஷ்டப் படுறானா?

“ஆமாம் அத்தை. வலி இருக்கும் போலே இருக்கு. அதோட நடக்கவும் கஷ்டப் படுறார்”

சேகர் “காலில் கொஞ்சம் அடி பட்டு இருக்கு சிஸ்டர். ஊமை அடி தான். ரெண்டு நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் சரி ஆகிடும்” என்று கூறினான்.

“அதுக்கு டேபிலேட் கொடுத்து இருக்கீங்களா அண்ணா? என்று மித்ரா கேட்க, வீட்டில் எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

மித்ரா அதுவரை இப்படி யாரிடமும் பேசினதில்லை. இரண்டு முறை மட்டுமே அறிமுகமாயிருந்த சேகரிடம் அவள் பேசியது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது.

சபரி குறுக்கிட்டு ஏதோ கேட்க வர, ராம் தலை அசைத்து அவளை தடுத்தான்.

சேகர் , மித்ராவிடம் பதில் கூற, அவள் வேறு எங்கே அடிபட்டு இருக்கிறது என்று கேட்டுக் கொண்டவள், ஆயின்மென்ட் அப்ளை செய்வதைப் பற்றியும் கேட்டாள்.

சேகரும் ஒருநாள் விட்டு ஒருநாள் டிரெஸ்ஸிங் செய்து விட்டு பத்து நாள் கழித்து வந்து கட்டுப் பிரித்துக் கொள்ள சொன்னான்.

“அண்ணா, நீங்களே டிரெஸ்ஸிங் வந்து பண்ணிடுவீங்களா? நான் அவரை கூட்டிகிட்டு வரட்டுமா?” என்று கேட்க,

அதுவரை மித்ராவைப் பேச விட்டுப் பார்த்துக் கொண்டு இருந்த சுமித்ரா,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அடியே மத்து. நீயெல்லாம் பிரெண்ட்டாடி. இங்கே வீட்டிலே ஒரு டாக்டர் இருக்கும்போது டிரெஸ்ஸிங் பண்றதுக்கு எல்லாம் ஹாஸ்பிடல் வரட்டுமான்னு கேட்கறியே.. இது நியாயமா? அப்பா , உங்க லிட்டில் பிரின்சஸ்க்கு இதை விட அவமானம் தேவையா?

மித்ராவோ “ஹி... ஹி. அது வந்து சுமி, நீ டாக்டர்ன்னு அப்போ அப்போ மறந்தே போயிடுது. ஒன்னு பண்ணு . உன் மொபைல் ஆட்டோமாடிக் வாய்ஸ் அலாரம் போட்டுடு.  சுமித்ரா ஒரு டாக்டர். பேஷன்ட் எல்லாம் வாங்க. இப்படி ஒரு அலாரம் செட் பண்ணு”

என்று கூற, எல்லோருக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தது.

ராம் தன் பங்கிற்கு,

“அதானே.. மித்ராம்மா, இவ இருக்கும்போது அனாவசியமா ஏன் வெளிலே போகணும்? “ என்று கேட்டுவிட்டு “சுமி, ஏதோ லிட்டில் பிரின்சஸ்ன்னு சொன்னியே? யாருடா அது?” என்று சேம் சைடு கோல் அடிக்க, சுமித்ரா பல்லைக் கடித்தாள்.

“டாடி. இதுக்கு அவளே பரவாயில்லை. “ என,

மித்ராவோ “நண்பிடி. இதுக்கு எல்லாம் பீல் பண்ணலாமா?” என்று அவள் தோளோடு முட்டிக் கொண்டாள்.

சைந்தவி “ஆத்தி.. இந்த புள்ளபூச்சியா இம்புட்டு நேரம் பேசுனது? இருக்க இடம் தெரியாம இருந்த பூனைக் குட்டி எல்லாம், இப்போ புலியா மாறிடுச்சே. ஆண்டவா இந்த கொடுமைய கேட்க ஆள் இல்லையா? “ என்று புலம்ப, இப்போது மீண்டும் சிரிப்பலை.

சேகர் கவனமெல்லாம் சுமித்ரா மீது தான். ஷ்யாம் சுமித்ராவைப் பற்றி அவளின் இன்டர்ன்ஷிப்பிற்காக கேட்கும்போது சேகரிடம் சொல்லி இருந்தான். அதிகம் பேசுபவள் என்று. இப்போது பார்த்தால் வாயாடி போலே என்று எண்ணிக் கொண்டான்.

மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு எல்லோரும் கிளம்பினர்.

அஷ்வின் மித்ராவிடம் அவள் எப்படி இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்று எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டவன்,

“மித்ரா, உன்னைப் பற்றின கவலை எனக்குள்ளே ரொம்ப நாளா இருந்ததுடா. எப்போ ஷ்யாம் மச்சான நீ கல்யாணம் கட்டிகிட்டியோ , அப்போவே முக்கால்வாசி கவலை தீர்ந்தது. இன்னிக்கு நீ மைதிலி அத்தை ஆபீசெக்கு போயிட்டு வரது எல்லாம் கேட்டப்போ, இருந்த கொஞ்ச நஞ்ச கவலையும் விட்டுட்டேன். உன்னை நல்லா பார்துக்கிறது மட்டுமில்லாம, உன்னோட முன்னேற்றத்திலும் அக்கறையிருக்கிறவங்க நம்ம மாமா பாமிலி. நீ யார் பேச்சையும் எதிர்த்து பேசமாட்டேன்னு எனக்குத் தெரியும். உனக்குப் புரியாத விஷயங்கள் இருந்தால் கூட கேட்டுத் தெரிஞ்சிக்கோ. எல்லா விதத்திலும் நீ சந்தோஷமா இருக்க என்னோட வாழ்த்துகள்” என்று கூறினான்.

அதே போல் சபரியும் “மித்ரா, ஷ்யாமை நல்லா பார்த்துக்கோடா. இதுவரைக்கும் அவன் இந்த மாதிரி படுத்தது இல்லை. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாமல் இருக்க சொல்லு. நாங்க எல்லோரும் இப்போக் கிளம்பறோம். “ என்று கூறி கிளம்பி விட்டாள்.

மித்ராவிடம் எதுவும் காட்டிக் கொள்ளாத சபரி ராம், மைதிலியிடம் தனியாகப் பேசினாள்.

எல்லோரும் கிளம்பவும் , மித்ரா யோசனையோடு மைதிலியிடம் சென்றாள்.

“என்னடா மித்ரா யோசனை?

“அத்தை , நீங்க ஏன் அத்தானை ரேஸ்க்கு எல்லாம் போக வேண்டாம்ன்னு சொல்லலை?

“ நாம சொன்னால் கேட்கமாட்டான். அதனால் தான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.