(Reading time: 12 - 23 minutes)

எல்லாம் முடித்தவள், எதுவும் சொல்லாமல், காபி கப் எடுத்துக் குடிக்கவும், மைதிலி

“ஏண்டி, வந்து செக் பண்ணினியே. ஒன்னும் சொல்லாமல் காபி குடிச்சுட்டு இருக்க?

“என்ன சொல்லணும்?

“தெர்மோ மீட்டர் எல்லாம் வச்சுப் பார்த்தியே. ஜுரம் இருக்கா? என்னன்னு சொல்ல வேண்டாமா?

“யார் அவனுக்கு செக் பண்ணினா? இன்னைக்கு எனக்கு பிரக்டிகல். யாராவது ஓ.பி பேஷன்ட் பார்த்து செக் பண்ணி, பல்ஸ், டெம்பரேச்சர் எல்லாம் செக் பண்ணிக் காமின்னு சொல்லிடாங்கன்னா திணறக் கூடாதேன்னு எல்லாம் ஒரு தடவை ரிவைஸ் பண்ணிகிட்டேன்”

“அடிப்பாவி. அண்ணன் அடிப்பட்டு படுத்து இருக்கானே. அவனைக் கவனிப்போமேன்னு இல்லாம, ரிவைஸ் பண்ணிட்டு இருக்கியா? உன்னை எதுக்கு டாக்டர்க்கு படிக்க வைக்கிறோமாம்?

“நான் ஒரு டாக்டர்ன்னு என்னையே வாய்ஸ் அலாரம் வைக்கச் சொல்லி, இன்னிக்கு முளைச்ச காளான் எல்லாம் சொல்லுது. தென் வொய் ஷுட் ஐ வேஸ்ட் மை டைம் யா?

மித்ரா “சுமி, டார்லிங். நான் சொன்னதுக்கு மேடம்க்கு கோவமோ ?

“ச்சே. ச்சே.. அது எல்லாம் இல்லை.

“அதானே பார்த்தேன்.. நமக்குத் தான் வெ,மா,சொ எல்லாம் கிடையாதே. திடீர்ன்னு அந்த பேய் எல்லாம் உனக்குள்ளே இறங்கிட்டுதோன்னு யோசிச்சேன்”

ஷ்யாம் “அது என்ன? வெ.மா,சொ?

“வெட்கம், மானம், சொரணை”

“அடிப்பாவிங்களா? இதுக்கு எல்லாமா ஷார்ட் பார்ம் வச்சு இருக்கீங்க

“பின்ன? வாட்ஸ் அப்பில் இத்தனை நீளமாவா டைப் பண்ண முடியும்? எங்க இமேஜ் என்ன ஆகறது?

அன்றைய காலை இதே போல் கலாட்டாவாகக் கழிய, எல்லோரும் அவரவர் வேலைக்குக் கிளம்பினர்.

ஷ்யாம் மித்ராவையும் கிளம்பச் சொல்ல, அவனை முறைத்தவள், மைதிலியிடம் சென்று,

“அத்தை, ஷ்யாம் அத்தானுக்குச் சரியாகிற வரை, நான் ஆபீஸ் லீவ் எடுத்துக்கட்டுமா?

எனக் கேட்டாள்.

மைதிலி “அதுக்கென்னடா, லீவ் எடுத்துக்கோ. ஒரு மெயில் மட்டும் அட்மின் செக்ஷன்க்கு போட்டுடு. நான் மற்றதை நேரில் சொல்லிக்கறேன்”

என்று அனுப்பி வைத்தாள்.

ஷ்யாமை பார்த்துக் கொள்வதோடு, ஷ்யாம் கட்டோடு ஆபீஸ் போக வேண்டாம் என்பதால், வீட்டிலிருந்து ஆபீஸ் வேலை எல்லாம் பார்த்தான். அவனுக்கு உதவியாக இருந்த மித்ரா, அவன் சொல்லும் மெயில் எல்லாம் டைப் செய்து அனுப்புவது, அக்கௌன்ட்ஸ் டிடைல்ஸ் எல்லாம் பார்க்க என்று ஷ்யாமோடு அவளுக்கு வேலை சரியாக இருந்தது.

ஒருநாள் விட்டு ஒருநாள் சுமித்ரா வந்து ஷ்யாமிற்கு டிரெஸ்ஸிங் செய்து விட, மூன்று நாட்களுக்குப் பின் ஷ்யாம் ஆபீஸ் போகிறேன் என்று சொல்ல, மித்ராவும், மைதிலியும் அதட்டி மேலும் இரண்டு நாட்கள் அவனைப் போக விடாமல் தடுத்தனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஷ்யாம் ஒருவாரம் கழித்து ஆபீஸ் செல்ல, மித்ராவும் அவனோடு கிளம்பினாள்.

ஷ்யாம் “ஹேய். மித்து. நீ அம்மா ஆபீஸ் போ, என் கூட ஏன் வரே?

“ம். உங்க பிரெண்ட் உங்களை கட்டுப் பிரிக்கிற வரைக்கும் கைய ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்கார். நீங்க சாப்பிட எல்லாம் என்ன செய்வீங்க? அதனால் அது வரை நான் உங்க கூட வரேன்.”

“ஹேய்.. அதிபுத்திசாலி. ஆபீஸ்லே நீயென்ன ஊட்டியா  விடப் போறே.  நான் ஸ்பூனால் சாப்பிடுக்க மாட்டேனா?

“ஏன். உங்க பொண்டாட்டி தானே நான்? ஊட்டி விட்டா என்ன தப்பு?

என்று எதிர்கேள்வி கேட்கவும் , ஷ்யாம் வாயைப் பிளந்தான்.

அவளின் காதுகளில் “ஹேய். பொண்டாட்டி சாப்பாடு மட்டும் தான் ஊட்டி விடுவியா? “ என்று மெல்ல கேட்க, மித்ராவின் முகம் சிவந்தது.

அத்தோடு நிறுத்தாமல் “மித்துமா, இப்போ எல்லாம் உன் வின்னிய நீ கொஞ்சவேக் காணோம்” என்று கேட்டான்.

“ஆமாம் அத்தான். எனக்கு உங்களோடவே டைம் சரியாப் போயிடுதா? வின்னியத் தூக்க டைம் கிடைப்பதே இல்லை?

“அப்போ வின்னிய விட்டு என்னைக் கொஞ்சறன்னு சொல்றியா?

“வேறே என்ன செய்யறாங்களாம்? என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

ஷ்யாமிற்குப் புரிய ஆரம்பித்தது. மித்ரா தன்னுடைய மனைவியாக மாறிக் கொண்டு வருகிறாள் என்று.

பத்து நாட்கள் கழித்து, மித்ரா, சுமித்ரா இருவரின் துணையுடன் சேகர் ஹாஸ்பிடலுக்குச் சென்றான் ஷ்யாம்.

சேகர் கட்டைப் பிரித்து விட்டு , கைகளை நன்றாக செக் செய்தான். வெயிட் தூக்காமல், அதிக வேலையும் கொடுக்காமல் இன்னும் பதினைந்து நாட்கள் பார்த்துக் கொள்ளச் சொன்னான்.

வேறு சில மருந்துகள் எழுதிக் கொடுத்து சுமித்ராவை வாங்கி வரச் சொல்ல, மித்ராவும் அவளோடு சென்றாள்.

அவர்கள் சென்று இருக்கும் நேரம், சேகரிடம் சில விஷயங்கள் ஷ்யாம் பேசிக் கொண்டு இருக்க, வாசலில் ஆள் இல்லாமல் இருக்கவே, சேகரின் அறைக்குள் நுழைய முயன்றான் ஒரு ஆள்.

உள்ளே ஷ்யாம் இருப்பதைப் பார்த்தவன், வெளியில் செல்ல எத்தனிக்கும்போது மித்ராவின் பெயர் கேட்கவும், வேண்டும் என்றே தன் செல்லில் ரெகார்டர் ஆன் செய்தான்.

அவன் வேறு யாரும் அல்ல. சரவணன் தான்.

அந்த தானாக மூடும் கதவு மூடுவதற்குள் பதிந்த இரண்டு நிமிட பேச்சு, சரவணனுக்கு கொண்டாட்டத்தையும், மித்ராவிற்குத் துயரத்தையும் கொடுத்தது.

தொடரும்

Episode # 26

Episode # 28

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.