(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி

Kaathalana nesamo

மைதிலி மற்றும் கௌசல்யாவின் பயிற்சியில் மித்ரா இப்போது ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தன் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தாள். ஆனாலும் அவளால் சட்டென்று புதியவர்களிடம் பழகிட முடிவதில்லை.

அவளின் கல்லூரி சமயத்தில் தான் மித்ரா மற்றவர்களிடம் தானாக பேச ஆரம்பித்ததே. அப்போதும் சைந்தவி கூடவே இருந்தால் தான் அவள் சக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவாள்.

ஆரம்பத்தில் அவள் ஸ்லோ பிக்கப்பாக இருந்தாலும், வளர, வளர அவளின் அந்த குறை மறைந்து கொண்டு தான் இருந்தது. எதற்கும் அவளை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எண்ணியே அந்த ஸ்பெஷல் ஸ்கூலில் அவளின் படிப்பை தொடர வைத்து இருந்தனர்.

ஓரளவு தைரியமாகவே கல்லூரி சென்று இருந்தவள், அங்கே மாணவர்கள் எதிலும் காட்டும் வேகத்தைப் பார்த்தவள் அரண்டு விட்டாள். சைந்தவியும் அவளோடு படிக்கவே, அவளால் அங்கே சமாளிக்க முடிந்தது.

அதற்கு பின் உடனே திருமணம் என்று முடிவாக, அவளுக்கு வெளியுலக அனுபவம் என்பதே கிடைத்து இருக்கவில்லை.

மைதிலியோடு அலுவலகம் செல்பவள், ஆரம்பத்தில் எந்த துறையில் பயிற்சி மேற்கொள்கிறாளோ அவர்கள் சொன்ன வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருந்தாள்.

இப்போது அவளிடம் சில வேலைகளை தனியாக கொடுக்க ஆரம்பித்தாள் மைதிலி. அந்த வேலைக்கு தேவையான விவரங்கள் எல்லாம் மற்றவர்களிடம் கேட்டு பெற வேண்டும். அவள் யாரிடமும் தானாக பேசத் தயங்கி நிற்கவும், மைதிலி அவளுக்கு தைரியம் சொல்லி அவர்களிடம் பேச வைத்தாள்.

அப்போதும் தேவையான விவரங்கள் மட்டும் பெற்றுக் கொள்பவள், அனாவசியமாக யாரிடமும் பேச மாட்டாள். ஓரளவு மைதிலியும் இதே குணாதிசயம் கொண்டவள் என்பதால் அங்கிருந்தவர்கள் மித்ராவையும் அப்படியே ஏற்றுக் கொண்டு இருந்தனர்.

இப்போது எல்லாம் திருமணங்களில் சம்பிரதாயங்களும் முறையாக இருக்க வேண்டும். அதே சமயம் மற்றவர்களை கவரும் வகையில் புதுமையானகவும் இருக்க வேண்டும் என்று திருமண வீட்டார்கள் எண்ணுகிறார்கள்.

மைதிலியின் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அமைப்பதில் சிறந்தவர்கள். மித்ராவிடம் மண்டப அலங்காரம் மற்றும் தாம்பூலத்தில் வைத்து கொடுக்க கிபிட் இது இரண்டும் சற்று வித்தியாசமாக யோசிக்கும் திறமை இருந்தது.

தாம்பூலப் பையோடு சின்ன பிள்ளைகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக கிபிட் போடும் ஐடியா கொடுத்தாள்.

வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அந்த பொருளை தேர்ந்தெடுக்க உதவினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அது இல்லாமல் மற்ற எல்லா வேலைகளுக்கும் தினமும் கொடுக்கும் ரிப்போர்ட்டை வரிசைப் படுத்தி வைக்கும் பொறுப்பும் கொடுக்கப் படவே, அவளுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை உள்ள அனைத்தும் தெரியும்.

மித்ராவிடம் காணப்பட்ட இந்த முன்னேற்றம் மித்ரா ஷ்யாமிடம் கூறுவது மூலமும், மைதிலி அவ்வப்போது பேசுகையிலும் ஷ்யாம் தெரிந்து கொண்டான்.

அதே போல் ஷ்யாமின் ஏற்பாட்டின் படி சுமித்ரா, மித்ரா இருவருக்கும் வீட்டிற்கே வந்து டிரைவிங் கற்றுக் கொடுக்க ட்ரைனர் வந்தார்.

ஆரம்பத்தில் பயந்தாலும், மித்ரா கற்றுக் கொண்டாள். சுமித்ரா வேகமாக கற்றுக் கொள்ள, மித்ராவோ மெதுவாக கற்றுக் கொண்டாள்.

ஒரு சில கிளாஸ்க்கு பிறகு சைந்தவியும் சேர்ந்து கொள்ள, மூவரும் சண்டே அன்று காலையில் டிரைவிங் கற்றுக் கொண்டனர்.

ஷ்யாமின் ஜெர்மன் ஏற்றுமதிக்கான வேலைகளும் வேகமாக நடக்கவே, வீட்டில் இருக்கும் நேரங்களில் தவிர, மற்ற நேரங்கள் அவனால் மித்ராவோடு செலவழிக்க முடியவில்லை.

ஷ்யாம் மித்ரா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், அன்று ஒரு சனிக்கிழமை. மாலையில் ஷ்யாம் சீக்கிரம் வந்து இருக்க, வீட்டில் எல்லோரும் அதிசயமாக பார்த்தனர்.

ஷ்யாமோ எதையும் கண்டு கொள்ளாமல் எல்லோரையும் கேலி செய்து பேசிக் கொண்டு இருந்தான்.

மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்தவன், தன் தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான். ஞாயிறு என்பதால் வீடே சற்று தாமதமாக எழுந்து இருக்க, காலையில் கண் விழித்த மித்ரா, ஷ்யாமை தங்கள் அறையில் காணமல் கீழே வந்து தேடினாள்.

ராம் வெளியே ஒரு வேலை விஷயமாக செல்வதாக தன்னிடம் சொல்லிவிட்டு சென்றான் என்று விடவே , மித்ரா சரி என்று விட்டாள். ஆனால் ராம் சற்று தயங்கி சொல்லும்போதே மைதிலிக்கு புரிந்து விட்டது ஷ்யாம் எங்கே சென்று இருக்கிறான் என்று.

ராமிடம் பேச வந்தவள், அவன் மித்ராவை ஜாடை காட்டவும், மைதிலியும் எதுவும் பேசவில்லை.

சைந்தவி , மித்ரா, சுமித்ரா மூவரும் கிளாசிற்கு செல்ல, அன்றைக்கு சந்தோஷ் , ஸ்ருதியும் வந்து இருக்கவே, ராம் வீட்டில் அரட்டை களை கட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.