(Reading time: 13 - 26 minutes)

“சரி சுமி. நான் பார்த்துக்கறேன்” என, சுமித்ரா கீழே சென்றாள்.

சாப்பிடும் முன் உள்ள மாத்திரை எடுத்து அவன் வாயில் போட முயல, அவனோ மூஞ்சை சுருக்கினான்.

“என்ன அத்தான்?

“மாத்திரை வேண்டாமே?

“அத்தான்.. என்னமோ காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட சொல்ற மாதிரி சொல்றீங்க? நமக்கு பட்ட அடிக்கு நாலு வேளை ஊசி தான் போடணும். ஏதோ உங்க பிரெண்ட் மாத்திரை கொடுத்து இருக்கார்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அவனே விட்டாலும் நீ விட மாட்ட போலே. சரி சரி. சர்க்கரை ரெடியா கையில் வச்சுக்கோ “

“அது இங்கே இல்லையே. “ என்னும்போதே சாப்பாடு ட்ரேயில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரை தனியாக இருப்பதைப் பார்த்தாள்.

“நல்ல அம்மா. நல்ல பிள்ளை “ என்று கூறியபடி, அவன் வாயில் மாத்திரை போட்டு விட்டு தண்ணீர் கொடுக்க, குடித்தான். அவன் வாயில் இப்போது சர்க்கரை போட்டாள்.

இப்போது தான் மாத்திரை போட்டு இருப்பதால் பத்து நிமிஷம் ஆகட்டும் என்று அமர்ந்து இருக்க,

மித்ரா மெதுவாக ஷ்யாம் அடிபட்ட கையை வருடிக் கொடுத்தாள். அப்போதும் அவள் கண்களில் கண்ணீர் வரவே,

“மிதுமா, ப்ளீஸ் அழாத. இது எல்லாம் ரேஸ் போகும் போது சகஜம். சீக்கிரம் சரி ஆகிடும்”

“அப்போ இது சரி ஆனதுக்கு அப்புறம் நீங்க திருப்பி ரேஸ் போவீங்களா?

“ஆமாம். இதுக்கு முன்னாடி லேசா சிராயிப்புல்லாம் ஆகிருக்கு. இந்த தடவை தான் கொஞ்சம் பெரிய அடி. “

“ஏன் அத்தான். அப்படியாவது ரேஸ் போகனுமா?

“மச். அது என்னோட ஆசை. “

“உங்களுக்கு ஆசை. உங்க மேலே பாசம் வச்சவங்களுக்கு இது எவ்ளோ பெரிய பயம் தெரியுமா?

“ஹேய்.. அப்படி எல்லாம் ஒன்னும் பயம் கிடையாது. நான் கலந்துக்கிறது புல் பாதுகாப்போடு இருக்கிற ரேஸ் மட்டும் தான்.

“மைதிலி அத்தையே இன்னிக்கு கலங்கி போயிட்டாங்க. நான் எல்லாம் தாங்குவேனா யோசிச்சு பாருங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா என்னாலே தாங்க முடியாது அத்தான்.”

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன், அதில் தெரிந்த பயத்தையும், வேதனையும் பார்த்து கஷ்டமாக இருக்கவே, அவளை அருகில் அழைத்தான்.

அவள் வரவும் தன் ஒரு கையால் அவளை அணைத்து பிடித்தபடி, அவள் நெற்றியில் முட்டி முத்தமிட்டான். அவளும் அவன் வாகாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

திருமணம் ஆன நாள் முதல் இன்றுதான் தன் சுயநினைவோடு மித்ரா ஷ்யாமை கணவனாக எண்ணி ஒரு அடி எடுத்து வைத்து இருந்தாள்.

ஷ்யாமிற்கு அது தெரிந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் அனுபவித்தவன்

“மித்தும்மா, சாரி. இந்த காயம் எல்லாம் ஆறின பின்னாடி, உன்னை ஒரு தரம் ரேஸ்க்கு கூட்டிட்டு போறேன். அங்கே பாரு. உனக்கு அப்போவும் பயமா இருந்தா, நான் ரேஸ்க்கு போறத பற்றி யோசிக்கறேன். சரியா?” என,

மித்ரா அரைகுறையாக தலை ஆட்டினாள்.  ராம் மாமாவிற்கு கூட இதில் இஷ்டம் இல்லை என்று தெரிந்தும் ஷ்யாம் போகிறான் என்றால் அதில் அவனுடைய விருப்பம் புரிந்தது.

இந்த அளவில் அவன் இறங்கி வந்து இருப்பதே பெரிது என்று எண்ணியவள், ஷ்யாமிற்கு உணவு ஊட்டினாள்.

அவள் ஊட்ட வாங்கிக் கொண்டவன், ரெஸ்ட் ரூம் போக வேண்டும் அஷ்வின் இல்லை சேகர் வர சொல்லு என, அவனை முறைத்தவள்

“நான் உங்க பொண்டாட்டி தானே. நான் கூட்டிட்டு போகமாட்டேனா?

“ஏய்.. இல்லடா.. என் வெயிட் உன்னால் தாங்க முடியுமா? அதான் அவங்களை கூப்பிடறேன்”

“அவங்க எவ்ளோ நேரம் இருப்பாங்க. நான் தானே புல்லா இருக்கப் போறேன். சோ நானே மெதுவா உங்கள பிடிச்சு கூட்டிட்டு போறேன்” என,

அடேங்கப்பா.. என்னடா நம்ம மித்து குட்டி கூட வளர்ந்துட்டா போலவே என்று எண்ணினான் ஷ்யாம்.

தொடரும்

Episode # 25

Episode # 27

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.