(Reading time: 13 - 26 minutes)

“ரேஸ்லே விழுந்தவுடன் பர்ஸ்ட் எயிட் பண்ணிட்டாங்க அங்கிள். ஷ்யாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு அவனுக்கு போன் பண்ணினப்ப, ரேஸ் நடக்கிற இடத்துக்கு வர சொன்னான். நான் போகும் போது அவனுக்கு முதுலுதவி முடிந்து இருக்கவே, நான் என் மருத்துவமனைக்கே அவனை அழைத்து சென்று விட்டேன்”

“தேங்க் காட். பயப்படற மாதிரி ஒன்னும் இல்லையே. ஸ்கேன் எதுவும் எடுக்கணுமா?

“ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை அங்கிள். கையில் சின்ன கிராக் தான். தலையில் லேசா தோல் காயம் தான். இருந்தாலும் தலை என்பதால் ஒரு ஸ்டிட்ச் போட்டு கட்டு போட்ருக்கோம். தட்ஸ் ஆல் “

“நல்ல வேளை நீ அங்கே இருந்தது. “ என்று கேட்ட ராம், அவனின் வேலை பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்.

அதற்குள் மைதிலி சென்று எல்லோருக்கும் குடிக்க பானம் எடுத்து வர, முதலில் ஷ்யாமிடம் நீட்டினார்.

அவனோ தன் மனைவியிடம் அதைக் கொடுக்க, மித்ராவோ அவனை முறைத்தபடி

“நீங்கதான் உடம்பு முழுக்க எகிப்து மம்மி மாதிரி கட்டு போட்ருக்கீங்க. நீங்க முதலில் குடிங்க அத்தான்”

“ஹ. அடிபட்ட நான் கூட தெம்பா இருக்கேன். அதைப் பார்த்ததுக்கே நீதான் மயக்கம் போட்டு விழுந்துருக்க. நீதான் முதலில் குடிக்கணும்”

மைதிலி இடையிட்டு “மித்ரா, ரெண்டு பேருக்கும் இருக்கு எடுத்துக்கோங்க.” என, மித்ராவும் எடுத்துக் கொண்டாள்.

மைதிலி எல்லோருக்கும் கொடுத்து விட்டு தானும் ஒரு கப் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

ஷ்யாம் வலது கையில் கட்டு போட்டு இருந்தாலும், இடது கையிலும் அங்கே அங்கே சிராய்ப்புகள் இருக்கவே, கையை அசைக்கக் முடியாமல் சற்று தவித்தான்.

அதைப் பார்த்த மித்ரா, அவன் கிளாஸ் எடுத்து வாயில் வைக்க, ஷ்யாம் குடித்து முடித்தான்.

சபரி “மித்ரா, ஷ்யாம் அழைச்சுட்டு உங்க ரூமிற்கு போ. அவன் படுத்து தூங்கட்டும். நீ அவனுக்கு ஹெல்ப் பண்ணு” என்று கூறினார்.

“இருக்கட்டும் அத்தை. எல்லோரும் ரொம்ப நாள் கழித்து மீட் பண்றோம். கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம். நான் அப்புறமா படுத்துக்கறேன்” என்றான்.

அஷ்வின் சேகரிடம் பேசிக் கொண்டு இருக்க, சைந்தவி, சுமித்ரா இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஷ்யாம் “சுமி, “ என்று அழைத்தான்.

“என்ன அண்ணா?

“ உன்னோட ப்ராஜெக்ட் பண்ணனும்னு சொன்னியே? எப்போ?

“இப்போ எக்ஸாம் நடக்குது. அது முடிஞ்சவுடன் போகணும்.

“சேகர், சுமித்ரா எப்போ உன் ஹாஸ்பிடலுக்கு ப்ராஜெக்ட்க்கு வரட்டும் டா?

சேகர் “ எக்ஸாம்ஸ் முடிஞ்சவுடன், எனக்கு கால் பண்ணிட்டு வர சொல்லுடா” என்றான்.

“சுமி, அவன்கிட்டே உனக்கு என்ன கேட்கணுமோ கேட்டுக்கோ” என்று விட்டு அஷ்வினோடு பேச ஆரம்பித்தான் ஷ்யாம்.

சுமி சேகரிடம் “ஹலோ” என,

“ம்ம்.  எந்த ஏரியாலே நீங்க ப்ராஜெக்ட் பண்ணனும்?

“என்னோட டாபிக் ஜெனரல் அட்மின் தான். அதனால் எல்லா ஏரியாவும் கவர் பண்ற மாதிரி இருக்கும்”

“சரி. ஷ்யாம் கிட்டே போன் நம்பர் வாங்கிக்கோங்க. கால் பண்ணிட்டு வாங்க. உங்களுக்கு அசிச்ஸ்ட் பண்ண ஏற்பாடு பண்றேன். “ என்றான்.

மேலும் சில விவரங்கள் கேட்டு விட்டு, இப்போது ஷ்யாமிற்கு கொடுக்க வேண்டிய மெடிசின் பற்றியும் கேட்டுக் கொண்டாள் சுமித்ரா.

சற்று நேரத்தில் எல்லோரும் சாப்பிட வர சொல்லி மைதிலி கூறவே, எல்லோரும் சென்றனர்.

“அத்தை. அத்தான் எப்படி சாப்பிடுவார்? “ என்று கேட்க,

“ஹ்ம்ம் . நீ ஊட்டி விடு உன் அத்தானுக்கு “ என்றார். கேட்ட இளவட்டங்கள் எல்லாம் சிரிக்க, மித்ராவும் தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.

பிறகு அஷ்வின், சேகர் இருவரும் ஷ்யாமை மாடியில் கொண்டு விட்டு விட்டு வர, மித்ராவும் அவனுக்கு உணவை ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றாள்.

உள்ளே சென்றவள் ஷ்யாமைப் பார்க்க, அவன் கால் நீட்டி பெட்டில் சாய்ந்து இருந்தான்.

அவன் கண்ணில் களைப்பு தெரியவே,

“என்ன அத்தான், ரொம்ப வலிக்குதா? என்று கேட்டாள்.

“ம்ச்ச். ஆமாம். “ என்றான்.

அதற்குள் சுமித்ரா வந்து கதவை தட்டவே, மித்ரா திறந்தாள்.

உள்ளே வந்தவள்,

“அண்ணா , உன்னோட மெடிசின் எல்லாம் சேகர் கொடுத்து விட்டார்” என்று கூறிவிட்டு,

“அண்ணி மேடம் .. இங்கே வாங்க” என்றவள், அவள் கையில் இருந்த மாத்திரையில் எது சாப்பிடும் முன், பின் எல்லாம் சொன்னாள்.

கவனமாக கேட்டுக் கொண்ட மித்ரா,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.