(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி

Kaathalana nesamo

மித்ரா அப்படி சொல்லிவிட்டு செல்லவும், அவளைப் பார்த்து சிரித்தவன், மீண்டும் இரவு பேசும்போது அவளிடம் அன்றைக்கு அவளின் வேலை அனுபவத்தைப் பற்றிக் கேட்டான்.

மித்ராவும் அன்றைய நிகழ்வுகளை ஷ்யாமிடம் சந்தோஷமாகவே பகிர்ந்து கொண்டாள். அந்த வரவேற்பில் இருக்கும் பெண், மித்ராவிற்கு சில உத்திகளை சொல்லிக் கொடுக்க, அன்றைய கால் எல்லாம் நன்றாகவே பேசி இருந்தாள்.

ஷ்யாம் அவளைப் பாராட்டி விட்டு, இதைப் போல் மற்ற வேலைகளையும் நன்றாகக் கற்றுக் கொள்ள சொன்னான்.

வீட்டிலும் மைதிலி சிறு சிறு வேலைகளை மித்ராவே தனியாக செய்யுமளவிற்கு பழக்க ஆரம்பித்தாள்.

பொதுவாக வீட்டு வேலைக்காரர்கள் உட்பட எல்லோருமே மித்ராவிற்கு ஏற்கனவே பழக்கம் என்பதால், அவளுக்கும் எந்த தடுமாற்றமும் இல்லை.

காலை வேலைகள் பரபரப்பாகத் தான் இருக்கும் என்பதால் அதை எல்லாம் மைதிலி பார்த்துக் கொள்ளுவாள்.

சுமித்ராவிற்கு படிக்க வேண்டியது அதிகம் என்பதால் காலேஜ் முடிந்து வந்தவுடன் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு சென்று விடுவாள்.

பாட்டி, தாத்தா இருவரும் மாலையில் சற்று நேரம் நடைபயிற்சி , அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுதல் என்று காபி குடித்து விட்டு சென்றால், இரவு உணவிற்கு சற்று நேரம் முன் வருவார்கள்.

திருமணம் முடிந்த முதல் ஒருவாரம் மட்டுமே ஷ்யாம் வீட்டிற்கு சீக்கிரம் வந்தது. அதற்கு பின் அவன் இரவு உணவிற்குதான் வீட்டிற்கு வந்தான்.

ராம் அவன் வருவதற்கு ஒருமணி நேரம் முன்னால் வருவான்.

இதனால் மாலை வேளைகளில் மித்ரா, மைதிலி மட்டுமே வீட்டில் இருப்பார்கள். இரவு உணவிற்கு தயார் செய்து விட்டு, பேசிக் கொண்டு இருப்பார்கள்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சென்று இருக்க, மித்ரா ஒவ்வொரு துறையிலும் அடிப்படைப் பயிற்சி எடுத்து முடித்து இருந்தாள்.

அன்றைக்கு ராம் சீக்கிரம் வந்து இருக்க, மைதிலி ராமிற்கு தேவையானது செய்ய அவர்கள் அறைக்கு சென்று இருந்தாள்.

பாட்டி , தாத்தா கோவிலுக்கு சென்று இருக்க, சுமித்ரா மறுநாள் டெஸ்டிற்கு படித்துக் கொண்டு இருந்தாள்.

மித்ராவிற்கு தனிமையில் இருக்க போரடிக்கவே, என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு, ஷ்யாமிற்கு போன் செய்தாள்.

திருமணத்திற்கு முன்புமே ஷ்யாம் மித்ரா போன் செய்தால் எடுக்காமல் இருக்க மாட்டான். இப்போது கேட்பானேன்.

“ஹலோ அத்தான்”

“சொல்லு மிது”

“பிஸியா இருக்கீங்களா?

“என்னடா? கொஞ்சம் வேலை இருக்கு”

“எப்போ வருவீங்க?

“இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்’

“மச் “ என்று அவள் முனகவும்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்ன ஆச்சு? இந்த டைம் உங்க டெஸ்ட் லேப்லே தானே மாமியாரும் மருமகளும் இருப்பீங்க?

“இன்னிக்கு மாமா சீக்கிரம் வந்துட்டாங்க. சோ அத்தை அவங்க கூட பேசிட்டு இருக்காங்க”

“ஒ.” என்றவன் “சரி .. நீ எங்கிட்ட பேசிட்டு இரு.. நான் அப்படியே வேலை பார்க்கறேன்” என்று கூறினான்.

“ஐயோ . வேலை எல்லாம் தப்பா போயிடும்”

“ஒன்னும் போகாது. நாங்க எல்லாம் ஒரே நேரத்துலே பல வேலை பண்ற திறமைசாலி”

“அட ரொம்பதான். “

“சரி. சரி. இன்னிக்கு உங்க ஆபீஸ்லே என்ன வேலை செஞ்ச?

“வழக்கமா இது எல்லாம் நைட் தானே கேட்பீங்க?

ஆம். அவன் நேரம் கழித்து வருவதால், இப்படி பேசிக் கொண்டே இருக்கும்போது மித்ராவிற்கு தூக்கம் வந்து விடுவதால், அப்படியே அவன் தோளில் சாய்ந்து அவள் தூங்க ஆரம்பித்து இருந்தாள். இதைக் கண்டுகொண்ட ஷ்யாம், அதை பற்றிக் கொண்டான்.

“நைட் இன்னைக்கு நான் கதை சொல்றேன். இப்போ நீ உன் கதையை சொல்லு’

“என்ன கதை ஷ்யாம்? யானை கதையா, பூனை கதையா?

“ஹா.. பேய் கதை”

“அட. அப்போ அதுக்கு காஸ்டிங் சுமித்ராவை போட்டுடலாம். “

“அடிப்பாவி.. இதை மட்டும் அவ கேட்டானு வை. பிசாசா மாறி உன் ரத்தம் குடிச்சிடுவா”

“அவ அல்ரெடி பிசாசு தான் சார். அத அவளே ஒத்துப்பா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.