(Reading time: 10 - 20 minutes)

“என்னாச்சு மித்ரா. ? ஏதோ சொல்லனும்னு நினைக்கிற. ஆனால் சொல்ல மாட்டேங்கற? என்ன விஷயம்?

அப்போதும் தயங்கி விட்டு

“மாமாவும், அத்தையும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்க தானே” என்று கேட்டாள்.

இப்போ எதுக்கு இவளுக்கு இந்த ஆராயிச்சி என்று எண்ணியபடி

“ஆமாம். எதுக்கு கேட்கற?

“அவங்க லவ் ஸ்டோரி உங்களுக்குத் தெரியுமா?

“ஹ்ம்ம். தெரியும்”

“எனக்கு சொல்லுங்களேன்”

“என்ன திடீர்னு?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது.. “ என்று மேலும் தயங்கி விட்டு “இன்னிக்கு மாமா சீக்கிரம் வந்தாங்க இல்லியா? அத்தை, மாமாவோடு ரூமிற்கு போனாங்க. மாமாக்கு காபி எடுத்துட்டு வர சொல்லலமான்னு கேட்க நானும் அவங்க பின்னாடியே போனேனா?” என்று விட்டு நிறுத்த,

இப்போது ஷ்யாம் ஊக்கினான் “ஹ்ம்ம் .. மேலே சொல்லு”

“வந்து..  மாமா, அத்தை கிட்டே காதில் ஏதோ குனிஞ்சு சொல்ல, அத்தையோ அதை கேட்டுட்டு மாமாவை செல்லமா கிள்ளினாங்க. இதை பார்த்தாதும் எனக்கு ஆச்சரியமா இருந்தது. ராம் மாமாவை பார்த்தால் எனக்கு பயமா இருக்கும். அவங்களுக்கு தப்புன்னு தோணினால் நல்லா திட்டுவாங்க அப்படின்னு அம்மா சொல்லிருக்காங்களா? அத்தை அப்படி செய்யவும் மாமா திட்டப் போறாங்கன்னு நினைச்சா, மாமா இன்னும் ஏதோ சிரிச்சுகிட்டே சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு அத்தைக்கு எப்படி பயமே இல்லைன்னு தோணிச்சு?“

“ஹேய்.. அவங்க புருஷன் , பொண்டாட்டி. அவங்களுக்குள்ளே ஏன் பயம் இருக்கும்?

“மச்.. அது எனக்கு தெரியாதா அத்தான்? ஆனால் அதை மாமா ஸ்போர்டிவ்வா எடுதுக்கிராங்கன்னா, அவங்களுக்குள்ளே எவ்ளோ லவ் இருக்கணும்னு தோணிச்சு? அதான் அவங்க லவ் ஸ்டோரி பற்றி உங்ககிட்டே கேட்டேன்”

“ஹ்ம்ம். ரொம்ப முக்கியமான கேள்விதான்.” என்றவன், அவனுக்குத் தெரிந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

ராம், மைதிலி இருவரும் ஷ்யாமின் கொள்ளுத்தாத்தா என்பதாம் கல்யாணத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தது முதல் அவனுக்குத் தெரிந்ததை எல்லாம் சொன்னான்.

அப்போதே குடும்பத்திற்கு ராம் கொடுத்த முக்கியத்துவம், அதைப் புரிந்து கொண்ட மைதிலி எல்லாம் சொன்னான். அவர்களின் பிரிவு பற்றி சின்னவர்களுக்கு தெரியாது. பெரியவர்களும் அதைப் பற்றி பேசுவதில்லை என்பதால், ஷ்யமிற்கும் ஒன்றும் தெரியாது.

மித்ரா தான் வேலை பார்க்கப் போகும் அந்த நிறுவனத்தின் விவரங்கள் படிக்கும் போதே மைதிலி அத்தையும் இந்த நிறுவனத்தில் வேலை செய்து சில வருடங்களுக்குப் பின் தான் பங்குதாரராக சேர்ந்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள். அவள் இத்தனை நாட்கள் எண்ணியிருந்தது இதுவும் இவர்கள் குடும்ப தொழில் என்றுதான்.

ஆனால் இது மைதிலி அத்தைக்காக செய்தது என்று இப்போதுதான் புரிந்தது. அவள் மாமாவைப் பற்றி அவளுக்குத் தெரிந்தது எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சற்று அமைதியான சுபாவம் மட்டுமே. அவருக்குள் மைதிலி அத்தை மேல் இத்தனை அன்பா என்று எண்ணினாள்.

அவள் அப்பா, அம்மாவும் அன்னியோன்யமானவர்கள் தான். ஆனால் அவர்கள் இருவருக்குமே பின்புலம் நல்ல வளமானது என்பதால், இருவர் வாழக்கையிலும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது இல்லை. முக்கியமாக பொருளாதார சுதந்திரம் இருக்கவே, பெரிய வேறுபாடுகள் வந்தது இல்லை.

ஆனால் இங்கே மைதிலியின் தனிமை, ராம் அவளை தன் குடும்பத்தோடு இணைத்துக் கொண்டது எல்லாம் கேட்ட போது அவளுக்கு அதிசயமாக இருந்தது.

இந்த காதலைப் பற்றி தெரிந்து கொண்ட பின், இப்போது அவளுக்குள் வேறு சில கேள்விகள் தோன்றின.

ராம், மைதிலி காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்க, எப்படி ஷ்யாம் திருமணத்தை அப்படி முடிவு செய்தார்கள் என்று யோசித்தாள். ஷ்யாம் யாரையும் காதலிக்கவில்லை என்றாலும், திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு இருக்கும் தானே.

அதை எல்லாம் இவர்களுக்கு ஷ்யாம் சொல்லவில்லையா, அல்லது இவர்கள் கேட்டுக் கொள்ளவில்லையா? என்ற எண்ணம் ஓடியது.

ஆனால் என்னவோ அவள் மனதில் வாழ்ந்தால் ராம், மைதிலி போல் காதலோடு வாழ வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

அதை அவள் ஷ்யாமிடம் சொல்லி இருக்கலாம். அல்லது ஷ்யாம் கல்யாணத்திற்கு எப்படி சம்மதித்தான் என்பதை மைதிலியிடம் கேட்டு இருக்கலாம். ஏனோ அவளுக்கு அப்படி கேட்க தோன்றவில்லை.

தொடரும்

Episode # 24

Episode # 26

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.