(Reading time: 10 - 20 minutes)

பின்னாடி பார்க்காமல் ஷ்யாமிடம் மித்ரா பேசிக் கொண்டு இருக்க, அவள் பின்னால் சுமித்ரா நின்று கொண்டு இருந்தாள்.

அவளின் போனை பிடுங்கிய சுமித்ரா, போனில்

“டேய் . அண்ணா.. உனக்கு பொழுது போகலைன்னா வீட்டிற்கு வந்து மித்ரா கூட பேய், பிசாசு விளையாட்டு ஆடு. ஒங்க போதைக்கு என்னை சைடு டிஷ் ஆக்கிட்டு இருக்கீங்களே? இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்” என்றபடி போன் கட் செய்து மித்ராவை முறைத்தாள்.

“முறைக்காதடி சுமி.. அப்புறம் பார்க்க அந்த காஞ்சனா பேய் மாதிரியே இருக்கே”

“லொள்ளு. ஏற்கனவே ரொம்ப படிச்சு மூளை சூடாகிட்டுதேன்னு வந்தா, என்னோட பாசமலர் கூட சேர்ந்து என்னை ஓட்டிட்டு இருக்க நீ? உன் பிரெண்ட்ட இப்படி விட்டுக் கொடுத்துட்டியே மத்து?

“ச்சே.. ச்சே.. நான் ரொம்ப நல்லவ. நீ பிசாசு மாதிரி இருக்கன்னு மட்டும் தான் சொன்னேன். உன் கிளாஸ் மேட் பிசாசு கூட கம்பேர் பண்ணி அத அழ வச்சிராதன்னு சொன்னாளே. அதை சொல்லவே இல்லை”

“அவ்ளோதானா.. இன்னும் வேறே ஏதாவது இருக்கா? முதலில் உன்னை அந்த வாட்ஸ் அப் குரூப்லேர்ந்து எடுத்து விட சொல்லி சொல்றேன்”

“சுமா டியர். உன்னை கலாயிக்கன்னே ஒரு குரூப் ஓபன் பண்ணிருக்கோம் செல்லம். பேர் என்ன  தெரியுமா ? சுமாவை சும்மாவே கலாயிக்கும் சங்கம். எப்படி ? பேர் செலெக்ஷன் நான் தான் “

“அடியே நீ என் அண்ணிடி.. இப்படி எல்லாம் பண்ணின, எங்க அண்ணன் கிட்டே சொல்லிடுவேன்”

“ஹ.. சொல்லு. அந்த சங்க செயலாளர் உங்க ஷ்யாம் அண்ணா தான்”

“இரு இரு.. நான் என் அப்பா கிட்டே சொல்லறேன்.”

“அது இன்னும் நல்லது.. மாமா தான் சங்க பொருளாளர்”

சரியாக ராம் , மைதிலி வர,  நேராக

“அப்பா நீங்க தான் சங்க பொருளாளரா? என்று வினவ, ராம் அன்றைக்குதான் அவர்கள் பழைய மாணவர்கள் சங்கத்திற்கு பொருளாளராக பொறுப்பேற்று இருந்தைதான் கேட்கிறாள் என்று எண்ணி ஆம் என தலையாட்டினான்.

அவ்வளவு தான் சுமித்ரா பத்ரகாளி ஆகி விட்டாள். எப்படி இந்த வீட்டு இளவரசி எனக்கு எதிராக எல்லோரும் சங்கம் அமைப்பீர்கள் என்று ஒரே சத்தம் தான்.

மித்ரா தலையைக் குனிந்தபடி நமுட்டு சிரிப்பு சிரிக்க, ராம் , மைதிலியோ என்ன என்று புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஷ்யாம் அந்த நேரம் சரியாக உள்ளே வந்தவன், சுமித்ராவின் கத்தலையும், மித்ராவின் நமுட்டு சிரிப்பையும் பார்த்துவிட்டு, இவளை என்று மித்ராவை முறைத்தான்.

பின் “ஏய்.. சுமி.. “ என்று சற்று சத்தமாக அழைக்க, அப்போதுதான் தன் அண்ணனை பார்த்துவிட்டு, இன்னும் கொஞ்சம் அதிகமாக பொரிய ஆரம்பித்தாள்.

அவளைத் தடுக்க பார்த்து விட்டு, மைதிலி ஓங்கி ஒரு அதட்டல் போட, சுமித்ரா சற்று அடங்கினாள்.

அவளிடம் மைதிலி விசாரிக்க, மித்ரா சொன்னதை சொன்னாள். அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட மைதிலி

“ஏய்.. அறிவு கொழுந்தே.. உங்க அப்பா ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் அசோசியேஷன் பற்றி சொல்லிட்டு இருக்கார். நீ என்னடானா என்னவோ யோசிச்சு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுட்டு இருக்க?

இப்போது “ஞே” என்று விழித்தாள் சுமித்ரா.

அதைப் பார்த்து வீட்டில் எல்லோரும் சிரித்தனர்.

ராம் மித்ராவிடம் “அம்மாடி .. மித்ரா நீ இவ்ளோ வாய் பேசுவியா?” என்று வியந்து கேட்டான்.

மித்ரா சற்று வெட்கத்தோடு தலை குனிய, சுமித்ராவோ “ஆமாம். உங்களுக்கு எல்லாம் பட படன்னு பேசற என்னை பார்த்தாதான் வாயாடி மாதிரி இருக்கும். இவ இருக்காளே . பச்ச புள்ளையாட்டம் இருந்துகிட்டு பண்றது எல்லாம் வில்லத்தனம். அது உங்க கண்ணுக்கு தெரியாதே” என்று பொரிய,

மித்ராவோ “ஹேய்.. நான் வில்லி இல்லைடி. ஹீரோயின்’’ என்று கூற,

“இதோ வந்துட்டேன். சாதாரண ஹீரோயினா இருக்க உன்னை அக்ஷன் ஹீரோயின் ஆக்கறேன்” என்று மித்ராவை துரத்த ஆரம்பித்தாள்.

இருவரும் ஓடிப் பிடித்து விளையாட, அதைப் பார்த்த மற்றவர்கள் ரசித்தனர்.

ராம் ஷ்யாமிடம் “என்னடா.. இன்னிக்கு ரொம்ப நேரமாகும்னு சொன்னியே. இவ்ளோ சீக்கிரம் வருவன்னா , நானும் உன்னோடவே வந்துருப்பேனே”

“இல்லபா. வேலை செய்யற மூட் போயிடுச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று கூறவே, சரி என்று விட்டு விட்டான் ராம்.

ழக்கம் போல் இரவு உணவு முடித்து விட்டு தங்கள் அறைக்கு சென்றனர் ஷ்யாம். மித்ரா.

அவ்வப்போது ஏதோ யோசனையும், தயக்கமும், ஒரு சிரிப்புமாக மித்ரா இருக்கவே, சற்று நேரம் கவனித்து விட்டு,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.