(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 10 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

ம்பொன் சிலைகள், லிங்கம், பிரகாரம், கோபுரம், விமானம் போன்ற  எதுவும் அந்த ஆசிரமத்தில் வழிபாட்டிற்கு இல்லை. அங்கு வழிபடுவது சாதி மதம் மொழிகளை கடந்து அனைவரையும் சமமாக பாவிக்கும் இயற்கையை மட்டும்தான். அக்னி நீர் காற்று மண் மரம் மலை இவைகள் தான் அங்கு இறைவன்.

ஆசிரமத்தில் பல மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். வெளிநாட்டவரும் உள்ளனர். அவரவர் தங்களுக்கு விருப்பமான வழிபாட்டை செய்வதுண்டு. அதை பற்றி என்றுமே சுவாமிஜியோ அல்லது மற்ற எவருமே கேள்வி எழுப்பியது இல்லை.

ஆசிரமத்தின் நடுவே ஆலமரமும் வேப்பமரமும் ஒரே இடத்தில் பெரியதாய் வளர்ந்துள்ளது. அம்மரத்தின் வயது பல நூறு வருடங்கள் ஆகும். அதுவே அந்த ஆசிரமத்தின் முக்கிய இடம். அங்கே அமர்ந்துதான் தியானம் அறிவுரை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும்.

மரம் மழையை வரவேற்று மண்ணை வளமாக்குகிறது.  நச்சுளை தன்னுள் விழிங்கி தூய மென் காற்றினை தன் இலைகளினால் உயிர்களுக்கு கொடுத்து சாமரம் வீசுகிறது. காய் கனி மலர் என மனிதனுக்கு தேவையான பொக்கிஷங்களை அளிக்கிறது. நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால் மனிதன் என்றேனும் மரத்திற்கு நன்றி உரைத்திருப்பானா? மனிதன் மரமாகிவிட்டான். அதை வீழ்த்திவும் தயங்கியதில்லை. சுவாமிஜிக்கு கண்கண்ட தெய்வம் இயற்கை அன்னைதான்.

மரத்தின் வேர்பட்டை, கிளை, பட்டை, இலை, பூ, காய், பழம், கிழங்கு, விதை, பிசின், இலைகாம்பு, தண்டு, வேர் என மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருந்தாகிறது.

சுவாமிஜி அருகில் உள்ள கிராமங்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்வார். அதுவே அவரின் பிரதான வேலை. இயற்கையோடு ஒன்றிவாழும் போது நோய் மனிதனை அண்டுவதில்லை என்பார்.

மூலிகையின் மகத்துவத்தை அறிந்து சுவாமிஜி அந்த கலையும் மகத்துவமும் அழிந்துப் போகக் கூடாதென எண்ணியவர். ஐந்து இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மூலிகை வைத்தியம் பயிற்றுவிக்கிறார்.

அந்த இளைஞர்கள் மனதாலும் உடலாலும் வலுப்  பெற்றவர்கள். அவரின் அறிவுரைகளை ஏற்று இளைஞர்களும் சிரத்தையாக பயில தொடங்கினர். அந்த ஐவரை கொண்ட குழுவிற்கு பஞ்சபூத சக்தி என பெயரிட்டார்.

சுவாமிஜி “சதுரகிரி மலையே ஒரு மூலிகை வனம். அங்கு கிடைக்காத மூலிகை இல்லை. ஆனால் எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. மனிதனுக்கு நோய்க்கு தகுந்தாற் போல் மருந்தின் அளவு மிக சரியாக இருத்தல் வேண்டும். அதிகம்  குறைவு என வேறுபட்டால் அது மருந்து அல்ல நஞ்சாகும்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”உண்ணும் உணவை சமைக்கும்போது நல்ல மனநிலையுடன் மகிழ்ச்சியாக சமைத்தால் அதன் தாக்கும் அவ்வுணவை உண்பவருக்கும் ஏற்படும் அப்படிதான் மூலிகையிலிருந்து மருந்து தயாரிக்கும் போது . . நல்ல மனம் மற்றும் நல்ல எண்ணத்துடன் மருந்தை தயாரிக்க வேண்டும்” என கூறுவார்.

சுவாமிஜி தம் மாணவர்களுடன் சதுரகிரி மலையில் இருக்கும் மகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்று மனம் உருக வேண்டினார். பின்னர் அருகில் உள்ள வனத்திற்கு சென்றார்.

அங்கிருந்த மரங்களை உன்னிப்பாக கவனித்தவர் “இங்க இருக்கிற ஒவ்வொரு மரமும் பல வகையான அருமருந்துகள் . . அதை சரியா பயன்படுத்த தெரியணும்”

“இது கற்பக விருட்சம்தானே சுவாமிஜி?” என ஒருவன் கேட்டான்.

“ஆமா இதோட இன்னொரு பெயர் “பஞ்சு தரு”. இதுல ஐஞ்சு கிளைகள் இருக்கு பாருங்க . . . ஒவ்வொரு கிளையில் இருக்கிற இலையும் வெவ்வேறு வடிவத்துல இருக்கு . . நல்லா பாருங்க”

அவர்கள் அவர் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு உன்னிப்பாக கவனித்தனர். வியந்து போனார்கள்.

“இந்த மரத்தோட பட்டை ரொம்ப விசேஷமானது. . . நோய்களுக்கு அருமருந்து”

 “இப்போது பட்டையை சேகரிக்கவா?”  என மற்றொருவன் கேட்க

“இல்லப்பா எந்த நேரத்துலயும் அப்படியெல்லாம் பண்ணக் கூடாது. ஒவ்வொரு மூலிகைக்கும் குறிப்பிட்டு விசேஷமான நாள் உண்டு. அப்பதான் பறிக்கணும்”

“மூலிகைக்கு தோஷ நிவர்த்தி பூஜை செய்யணும்……… இப்படி நிறைய வழிமுறை இருக்கு . .ஒரே நாள்ல எல்லாம் கத்துக்க முடியாது” எனச் சொல்லி புன்னகைத்தார்.

செல்வன் இறப்பு இயற்கை மரணம் என காவல்துறை சொல்லிவிட்டபடியால். ஆசிரம வாசிகள் அந்த சம்பவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கிவிட்டனர். தத்தம் வேலைகளில் கவனம் செலுத்தினர். சுவாதியால் மட்டுமே இன்னும் முழுமையாக அத்துயர சம்பவத்தில் இருந்து வெளிவர இயலவில்லை. ஆதலால் அவள் எந்த பணியிலும் ஈடுபடாமல் மனச்சோர்வுடன் இருந்தாள். மற்றவர்களுக்கு அது நன்றாக புரிந்தது. ஆதலால் அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை. அவளுக்கு தனிமை தேவையாயிருந்தது. அவள் சுணங்கி தன் அறையில் முடங்கி கிடந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.