(Reading time: 8 - 16 minutes)

அதே நேரம் ஆசிரமத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவன் கையில் எதையோ மறைத்துக் கொண்டான். அருகில் மற்றொருவன் பதட்டமாக குரலை தாழ்த்தி பேசினான். “இன்னிக்கு முடிச்சே ஆகணும். நேரம் குறைவா இருக்கு நமக்கு” எனச் சொன்னவன் சுற்றும் முற்றும் பார்த்தான். சுவாமிஜி மாணவர்களுடன் மலைஏறி விட்டார் என்பது அவனுக்கு தெரியும். அதிகம்பேர் அங்கு இல்லை. இருப்பவரும் அவர்களை  கவனிக்கவில்லை.

“நீ கிளம்பு” என முந்தியவனை துரிதப்படுத்தினான்.

“வேல முடிஞ்சதும் சீக்கிரம் வந்திடுறேன்”

“போட்டோ பத்திரம் . . சரியா நிதானமா பத்ட்டபடாம செய் போ”

தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி கிளம்பினான். சதுரகிரி மலை ஏறத் தொடங்கினான். சுவாமிஜி சென்ற பாதையை தவிர்த்து வேறொரு பாதையை தேர்ந்தெடுத்தான். அந்த பாதை மனிதர்கள் அதிகம் பயன்படுத்தாத ஒன்று. விலங்குகள் நடமாட்டம் காணப்படும்.

மூன்று மணி நேரத்திற்கு பிறகு ஓர் இடத்தை அடைந்தான். மண்ணின் வாசமும் மூலிகையின் வாசமும் இதமாய் இருந்தது. தென்றல் வீசியது.  அருவியின் சலசலப்பு துள்ளியமாய் கேட்டது. மூச்சு வாங்க வேர்வையை துடைத்தபடி மரக்கிளையில் அமர்ந்தான்.

தான் கொண்டு வந்திருந்த போட்டோவை எடுத்து பார்த்தான். அது ஒரு செடியின் போட்டோ பின்னர் கண்களை சுழலவிட எல்லாம் ஒரே மாதிரி இருப்பதைப் போல  தோன்ற ..  மறுப்பா தலையாட்டி மனதை நிதானப்படுத்தினான்.

மெதுவாக நடக்க தொடங்கினான். ஒவ்வொரு செடிகளையும் ஊர்ந்து கவனித்தான். சிலவற்றை தொட்டு பார்த்தான். ஆங்காங்கே பாம்புகள் ஊர்ந்து சென்றபடி இருந்தது. அவற்றை கண்டதும் நிதானித்தான். அவைகள் தன் வழி சென்றுவிட்டது.

சுமார் பத்து நிமிட நடைக்கு பிறகு அந்த செடி கண்ணில் பட்டது. அவனுக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அருகில் முழங்காலிட்டு அமர்ந்தவன் தன் விரல் கொண்டு ஒரு இலையை தீண்ட அந்த இலை நான்கு இலைகளாக விரிந்தது. அதன் வேர் சடைப் போல் இருந்தது. தான் தேடி வந்தது கிட்டியதில் திருப்தியடைந்தான். மற்றும் மொருமுறை போட்டோவை பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டான்.

தான் கொண்டு வந்திருந்த இரும்பு ஊசியை சடைப் போன்ற வேரில் நுழைத்து இரண்டொரு நொடிக்கு பிறகு எடுத்தான். அந்த இரும்பு ஊசி தாமிர ஊசியாக மாறியிருந்தது. அவனுள் மகிழ்ச்சி ஊற்றெடுக்க . . மீண்டும் வேரில் வேறு இடத்தில் அந்த தாமிர ஊசியை சொருக அது வெள்ளியாய் மாறியது. சந்தோஷமும் வெற்றியும் அவனுள் பிரவாகம் எடுத்தது.

கடைசி முயற்சி வெள்ளி ஊசியை மற்றொரு இடத்தில் நுழைத்து எடுக்க சொக்க தங்கமாய் மாறி மின்னியது ஊசி. “ஐ காட் இட்” என ஆக்ரோஷமாய் கூச்சலிட்டான்.. அவன் குரல் மலை எங்கும் எதிரொளித்தது.

அந்த தங்க ஊசியை பத்திரப்படுத்திக் கொண்டான். மலை இறங்க எத்தனிக்க வந்தவழி சற்றே மறந்துப் போனது. குழம்பியவனாக இங்கும் அங்கும் அலைந்து பின்பு ஒரு வழியை தேர்வு செய்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

திடீலென சுவாதி அவன் முன்பு தோன்றினாள். இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை திணறினான்.

“சும்மா சுத்தி பாக்க வந்தேன்” என உளறினான்.

“நான் எதுவுமே கேட்கலியே”  என்றாள் நக்கலாக

அவள் எல்லாம் பார்த்துவிட்டாள் என்பது அவனுக்கு புரிந்துப் போனது. அவன் முகம் கடுமையானது. “நீ இனி உயிரோட இருந்தா எங்களுக்கு ஆபத்து” என மனதில் நினைத்தவன். அவளை மலை உச்சியில் இருந்து தள்ள முற்பட்டான். இதை எதிர்பார்த்திருந்தாள் சுவாதி.

ஆதலால் நொடிப் பொழுதில் மதிமயங்கி என்னும் மூலிகையை அவன் நாசி அருகில் வைக்க அவன் அடுத்த நொடி தன்னை மறந்தான். சவத்தைப் போல நின்றான். மூச்சு மட்டும் வெளியேறி மார்பு கூடு ஏற்ற இறகத்தை காட்டியது.

தங்க ஊசியை அபகரித்தாள். மேலும் அவனிடம் இருந்த போட்டோவையும் எடுத்துக் கொண்டாள். அவனை மலையிலிருந்து அதளபதாளத்துக்கு தள்ளிவிட்டாள்.

அவன் எதிர்க்கவில்லை . . தங்க ஊசியையும் போட்டோவையும் அபகரித்தாள் அவனால் தடுக்க முடியவில்லை. அவனை மலையில் இருந்து தள்ளிவிட்டாள் அவனால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. மரணம் அவனை நெருங்கிவிட்டது அவனால் எதுவும் செய்ய இயலவில்லை.

மதிமயங்கி மூலிகை  வசியம் செய்ய பயன்படுத்துவது. அந்த மூலிகையின் காற்றினை சுவாசித்தால்  மதியை மயக்கிவிடும் ஆற்றல் பெற்றது அந்த மூலிகை.

மலையிலிருந்து கீழே விழுந்தவனை மரணம் தழுவியது. போட்டோ மற்றும் தங்க ஊசியுடன் ஆசிரமத்தை அடைந்தாள் சுவாதி.

டெக்சாஸ்

சாரு மற்றும் ஆகாஷ் இந்தியாவை நோக்கிய பயணத்திற்காக தயாராகினார்கள். சாரு தன் அக்காவை எப்படியும் ஆசிரமத்தில் இருந்து மீட்ட வேண்டும். அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். இப்படி பல கனவுகளுடன் கிளம்பினாள்.

ஆகாஷ்ற்க்கு கண்டிப்பாக சாருவின் மகிழ்ச்சிதான் அவனின் மகிழ்ச்சி. ஆதலால் சுவாதி மீட்க தன்னால் ஆன முழு முயற்சியை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் கிளம்பினான்.

இருவரின் விருப்பமும் நிறைவேறக் கூடாது என சூர்யா எண்ணமிட்டான்.

தொடரும் . .

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.