(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 13 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

பிறந்தவுடன் மறைவதுதான் நொடிகள். அதுதான் இயல்பு. அந்த நொடிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நொடி மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய அபரிதமான ஆற்றல் கொண்டது. ஆகாஷ் மற்றும் சாருவின் ஒவ்வொரு நொடியிலும் சுவாதி நிறைந்திருந்தாள். வெவ்வேறு எண்ணங்களாக . . ஒருவருக்கு பாசமெனில் மற்றொருவருக்கு கடமை.

மறுநாள் காலை பத்து மணி அளவில் ஆகாஷ் வீட்டிலிருந்து கிளம்பினான். தன் தந்தையின் காரை எடுத்துக் கொண்டான். அவனிடம் யூனிவர்சல் டிரைவிங் லைசன்ஸ் இருப்பதால் பிரச்சனை இல்லை. சுவாதி வேலை செய்ததாக சொன்ன கம்பெனியை அடைந்தான். அது மிக பெரிய நிறுவனம். மெயின் கேட்டில் இருந்து உள்ளே வரை இரண்டு புறமும் செயற்கையாக வளர்க்கப்பட்ட புள்தரை. பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அதுவும் மெயின் ஏரியாவில்.

ஆபீஸ் உள்ளே சென்றான் ரிசப்ஷன் பெண்ணிடம் வேறு எவரோ உரையாடிக் கொண்டிருந்தனர். ஆதலால் அவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். அதி நவீன சாதனங்களால் கூரையிலிருந்து தரைவரை அலங்கரிக்கபட்டிருந்தது. சுவற்றில் ஒரு பக்கம் அந்த நிறுவனம் பெற்ற விருதுகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஏதோ டெக்ஸ்டைல் உற்பத்தி செய்பவர்கள் என்பது புரிந்தது. தரை மார்பிள் ஆடை அணிந்திருந்தது. நுண்ணிய வேலைபாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்டீரியர் டிசைனரை மனதார பாராட்டினான் ஆகாஷ்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“உங்களுக்கு என்ன உதவி புரியட்டும்?” என நுனி நாக்கு ஆங்கிலத்தில் புன்னகையுடன் ரிசப்ஷன் பெண் வினவ.

“நான் சுவாதிய மீட் பண்ண வந்திருக்கேன்” என்றான் ரிசப்ஷன் டேபிள் அருகில் வந்து நின்றபடி . .

“சுவாதி?” என்றாள் புருவத்தை சுருக்கியபடி

“ ஆமா  . . ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாங்க . .”

“ஸாரி எனக்கு இங்க எல்லாரையும் தெரியாது” என  புன்னகையுடன் கூறியவள்.

“அவங்க என்னோட பிரெண்ட் . .  நான் வெளிநாடு போனதுல கொஞ்சம் டச் இல்லாம போச்சு அதான். என் மேரேஜ்க்கு அவங்கள இன்வைட் பண்ண்ணும்” தடையே இல்லாமல் சகஜமாக பேசினான்.

“ஜஸ்ட் எ செகண்ட் சார்” என போனை எடுத்து பேசினாள். அவள் முக பாவங்களை கவனிக்காததுப் போல கவனித்தான்.

ஆகாஷ் எதிர்பார்த்த பதிலை சொன்னாள் “இங்க சுவாதிங்கற பேர்ல ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட்ல யாருமே இல்ல . . வெரி சாரி” என்றாள்.

“மே பி வேலைய விட்டிருக்கலாம் . . இதுக்கு முன்னாடி வேல பண்ணிருப்பாங்களோ . . கொஞ்சம் செக் பண்ண முடியுமா . . போன் நம்பர் கொடுத்தா கூட போதும்”

“சாரி அந்த டிடெய்ல்ஸ்லாம் சொல்ல முடியாது”

“நோ பிராப்ளம் . . இந்த கார்ட் உங்க நிறுவனத்தோடது தானே?” என சாரு . . சுவாதி வேலை செய்த இடம் என  வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய கார்ட்டை காண்பித்தான்.

அதைப் பார்த்த அப்பெண் “இது எங்களுது இல்ல” என்றாள்

“அதே பேரு அட்ரெஸ் தானே இருக்கு?” என்றான்

“எங்க கார்ட்ல கம்பெனி லோகோ எம்பாஸ் பண்ணியிருக்கும் . . இதுல இல்ல பாருங்க” என்றாள்

“உங்க கார்ட் ஒண்ணு கிடைக்குமா?”

“ஷியூர்” எனக் கொடுத்தாள். 

விலைஉயர்ந்த கார்ட்டை வாங்கிக் கொண்டவன் “சாரி உங்க நேரத்தை விரயப் படுத்திட்டேன்” என சொல்லி கிளம்பினான்.

“ஹேவ் எ குட் டே சார்” என்றாள்.

இவை அனைத்தும் அங்கிருந்த சீ.சி கேமராவில் பதிவாகியது. அதை ஆகாஷ் கவனிக்க தவறவில்லை.

தன் காரில் அமர்ந்துக் கொண்டவன் சாருவிற்கு கால் செய்து “சுவாதி வேல செஞ்சதா கொடுத்த விசிடிங் கார்ட கொண்டு வா” என்றான். பிறகு அவன்  ரெஸ்டாரண்ட்டிற்கு சென்று காலை உணவை முடித்தான்.

அதற்குள் சாருவும் வந்து சேர்ந்தாள். அந்த கார்ட்டை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தான். பிறகு அந்த கார்டின் இரு புறத்தையும் தன் செல்போனில் போட்டோ எடுத்து ஜூம் செய்ய மிக மிக பொடி எழுத்தில் கார்டின் பின்னால் சீ.ஆர். பிரிண்டர்ஸ் என எழுதி இருந்தது.

கூகுள் மூலம் அதன் விலாசத்தை அறிந்துக் கொண்டான். அங்கே இருவரும் செல்ல . . அது சிறிய இடம்தான்.  ஒர் அறை அங்கே பழைய கால டேபிள் சேர். அவர்கள் அச்சிட்ட முக்கிய பிரமுகர்களின் கார்ட் நோட்டீஸ் போர்டில் மோஸ்ட் வாண்டட் ரீதியில் ஒட்டபட்டிருந்த்து. அதனோடு  புத்தம் புதியதாய் பழைய காலண்டர்களும் தொங்கின.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.