(Reading time: 8 - 15 minutes)

எதிர் சுவற்றில் வெங்கடாஜலபதி சுவற்றில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் இரண்டு விளக்குகள் எந்த தருணத்திலும் முடிவை எதிர்நோக்கியபடி இருந்தது. அறை முழுவதும் முடிந்துப் போன ஊதுபத்தி வாசம். பக்தி பரவசத்துடன் ஆயுத பூஜைகைகாக வைத்துக் கொண்ட சந்தன பொட்டுடன் கணினி ஓய்வெடுத்துக் கொண்டிருக்க . . பெரிய லெட்ஜரில் தலையை விட்டபடி அமர்ந்திருந்தார் ஒருவர். இன்னமும் அவர் வழுக்கை மண்டையில் எண்ணெய் அப்பி இருந்தது முயற்சி திருவினை ஆக்கும் என்ற நம்பிக்கை போலும் அந்த மனிதருக்கு.

“எக்ஸ்கியூஸ் மீ” என ஆகாஷ் வெளியில் இருந்த குரல் கொடுக்க

தன் மூக்கு கண்ணாடி வழிய பார்த்த மனிதர் “வாங்க உள்ள வாங்க . .உட்காருங்க” என தன் முன் இருந்த இருக்கையை காட்டினான்.

அந்த காலத்து பழைய துருப் பிடித்த இரும்பு சேர். அதில் ஆகாஷ் சாரு தங்களை அமர்த்திக் கொண்டனர்.

“எங்க்கிட்ட எல்லா வகை கார்ட் கேலண்டர் பிரிண்ட் பண்ணலாம் . . ராசியான கடை” என ஆரம்பித்தார்.

ஆகாஷ் சாரு கொண்டு வந்த விசிடிங் கார்ட்டை அவரிடம் கொடுத்து “இந்த கார்ட் இங்க பிரிண்ட் பண்ணதா?”

அந்த மனிதர் முகம் “இதுக்குதானா?” என்பதைப் போல வேண்டா வெறுப்பாக கார்ட்டை வாங்கி பார்த்து “ஆமா இங்கதான்” என்றான்

“எனக்கு இந்த கார்ட் எப்ப பிரிண்ட் பண்ணக் கொடுத்தது தேதி வருஷம் கொடுத்தவரோட விபரம் வேணும்”

“இதெல்லாம் கேக்க நீங்க யாரு?”

“அட்வகேட் ஆகாஷ் . . ஒரு கேஸ் விஷயமா சில தகவல்கள் வேணும்”

“நினைச்சேன் அப்பவே நினைச்சேன்” என தன் மூக்கு கண்ணாடியை கழுற்றியபடி சொன்னார்.

“என்ன?” என்பதைப் போல இருவரும் பார்க்க . . .

“இந்த கார்ட் அடிக்க கொடுத்தவங்கள மறக்கவே முடியாது” என்றார்

“விபரமா சொல்லுங்க” என சாரு ஆர்வம் தாளாமல் கேட்டுவிட

“நூறு கார்ட்க்கு கம்மிய நாங்க அடிக்கறதே இல்ல . . பத்து கார்ட்தான் அடிக்க ஆர்டர் கொடுத்தாங்க . . ஆனா நூறு கார்ட்க்கு ஆன பணத்த கொடுத்தாங்க”

“யார் அவங்க டிடெயில்ஸ் வேணும்” என்றான் ஆகாஷ்

“ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஆச்சே . . . ஆனா இப்பவும் எனக்கு நியாபம் இருக்கு பாருங்க” என தன் நினைவாற்றலை எண்ணி சிலாகித்தார்.

“அவங்க விவரம் . .” என மீண்டும் ஆதி தாளத்தில் இருந்து ஆகாஷ் துவங்க . .

“இருங்கள்” என செய்கை செய்துவிட்டு உள்ளே வேறொரு அறைக்கு சென்றார். பெரிய பெரிய பில் நோட்டுகளை கொண்டு வந்து பார்க்க தொடங்கினார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எனக்கு கம்பயூட்டர் பாக்க தெரியாது . . என் பையன் இருந்தா ஒரு நொடில பாத்து சொல்லிடுவான்” என்றார்.

“எப்ப வருவாரு உங்க பையன்?”

“ஊருக்கு போயிருக்கான் வர ரெண்டு நாள் ஆகும்” என தேட ஆரம்பித்தார்.

இருபது நிமிடத்திற்கு பிறகு அட்ரஸ் கிடைத்தது.

“இதோ பாருங்க” என காண்பித்தார்.

இருவரும் எழுந்து கவனமாக பார்க்க செல்வன் என்ற பெயரில் இருந்தது. குழப்பமாக ஆகாஷ் “செல்வன் யாரு உனக்கு தெரியுமா?”

இல்லை என தலையாட்டினாள்.

“கார்ட் பிரிண்ட் கொடுக்க யாரு வந்தாங்க . . அது நியாபகம் இல்லயே தம்பி . . ரொம்ப வருஷம் ஆச்சுல” என்றார்.

பேர் தேதி விலாசம் என அனைத்தையும் தன் போனில் போட்டோ பிடித்துக் கொண்டான் ஆகாஷ்.

இதற்கு மேல் அங்கிருந்து பயணில்லை என்பதால் அந்த மனிதருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்கள்.

செல்வன் விலாசம் சென்னை என்பதால் அங்கு தேடிச் சென்றனர். செல்வன் வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கேட்டனர்.

“செல்வனை பார்க்கணும் எப்ப வருவார்?“

அந்த பெண்மணி மேலும் கீழுமாய் இவர்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு . . செல்வன் தம்பி இறந்து போயி பத்து நாள் ஆக போகுதே” என்றாள்.

இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள . . “அப்ப வீட்ல மத்தவங்க?” என சாரு கேட்க

“பாவம் வயசான அம்மா அப்பா பொஞ்சாதி கொழைந்த அல்லாரும் அவங்க ஊருக்கு போயிட்டாங்க”

“எந்த ஊரு”

“மதுரை பக்கத்துல எனக்கு தெரியாது” என்றாள்

“எப்படி செத்துப் போனாரு?”

“வெளிநாட்டுல வேல பாக்குறாராம் வேல முடிஞ்சி வீட்டுக்கு வர சொல்ல ஆக்சிடெண்ட் ஆயிடுச்சி” என்றாள்.

ஸ்தம்பித்து நின்றவர்களை கண்டு “நீங்க யாரு?”

“நான் சின்ன வயசு பிரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு கூப்பிட வந்தோம்” என முடித்துக் கொண்டான்.

இதற்கு மேல் என்ன கேட்பது கிளம்பினார்கள்.

எங்கு தொடங்கினானே அங்கேயே மீண்டும் வந்து நின்றாயிற்று குழப்பங்கள் கூடியதுதான் மிச்சம்.

“நீ வீட்டுக்கு போனதும் உன் அக்கா ரூமை செக் பண்ணு . . எதாவது க்ளு கிடைக்கலாம்”

சதுரகிரி ஆசிரமத்தில் செல்வன் இறப்பிற்காக இறங்கல் கூட்டம் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.

செல்வன் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான்.

தொடரும் . .

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.