Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகா

Muppozhuthum un ninaive

நாகப்பட்டினம் ஆடிட்டரின் வீடு

ஆடிட்டரோ திடீரென சிரிப்பு சத்தம் கேட்கவும் சட்டென தன் மனைவியை விட்டு விலகி நின்றவர் சுற்றிலும் பார்த்தார் சங்கரனின் முழுக் குடும்பமும் அங்கு இருக்கவே அவர் சாந்தியை தேட அவளோ சங்கரனுடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தவர்

”சாந்தி” என உரக்க கத்த அவளோ தந்தையின் குரல் கேட்டதும் சங்கரனிடம்

”மாமா விடுங்க, நான் அப்பாட்ட போகனும்” என சொல்ல அவனோ

“இனிமே என்னத்த அப்பன் சுப்பன்னு” என சிவா சொல்ல அதைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு அவனை தன் பக்கம் இழுத்தார் ஆடிட்டர்

”டேய் என்னடா பண்ற, விடுடா அவளை சின்ன பொண்ணுடா அவள்” என சிவாவை பிடித்து இழுக்கவும் அவளை விட்டவன் ஆடிட்டரிடம் மாட்டினான்

”யாரு சின்ன பொண்ணு? மேஜராயிட்டா உன் பொண்ணு பாருங்க புடவையில பெரிய பொண்ணா தெரியறா”

“அடங்குடா முதல்ல, அவளை வீட்டுக்கு கூப்பிட்டு அவமானப்படுத்தியா அனுப்பின, பாவி என்ன காரணம்னு சொல்லாம என் பொண்ணு எவ்ளோ நேரம் அழுதாள்ன்னு தெரியுமா உனக்கு” என கேட்க

”அவளை பார்க்க முடியாம இந்த 1 மாசம் நான் எவ்ளோ அழுதேன்னு தெரியுமா மாமா உங்களுக்கு, என் வேதனை உங்களுக்கு புரியாது வசுமதிக்கு புரியும் ஏன்னா அவளும் என்னைப்போல லவ்வரை பிரிஞ்சிருந்தா பாருங்க வசு முகத்தை பாருங்க இத்தனை நாள் இங்கிருந்தாளே அவளை சந்தோஷமா உங்களால பார்க்க முடிஞ்சதா இப்ப பாருங்க அவள் முகத்தை சந்தோஷத்தில எப்படியிருக்காள்னு அவள் சந்தோஷம் நீங்க இல்லை மாமா அவள் வாழ்க்கை, அவள் காதல் அவளோட ஆன்டர்சன்தான் அதான் அவன் வரவும் உங்களை மறந்துட்டா, அதே போலதானே நானும் என் வாழ்க்கை, என் காதல் என் சாந்திதான் அவளை எனக்கு கொடுத்துடுங்க மாமா” என அவன் கைகூப்பி கெஞ்சவும் அவரோ

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”பத்து பைசா பெறதாவன் நீ, உனக்கு என் பொண்ணு கிடையாது” என சொல்ல இந்திரன் வந்தான்

”யார் சொன்னது? இந்தாங்க பத்திரம் நீங்க கேட்டது போலவே இருக்கு, நீங்க கொடுத்த லிஸ்ட்படி சரியா இருக்கான்னு பாருங்க மாமா” என சொல்ல சாந்தியோ

”என்ன லிஸ்ட்ப்பா?” என கேட்க ஆடிட்டர் உடனே

”அது வேறம்மா ஆடிட்டிங் விசயம், பாரு ஆன்டர்சன் வந்திருக்கார்ல அவருக்கு கேக் தந்தியா நீ”

”அப்பா கேக் இல்லையே”

“சரி அவர் பாவம் களைச்சி போய் வந்திருக்காரு கூட்டிட்டு அக்கா ரூமுக்கு போம்மா நான் வந்துடறேன்” என சொல்ல அவளும் அங்கிருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றதும் ஆடிட்டர் சோபாவில் அமர்ந்தார். சங்கரன் குடும்பமும் சோபாவில் அமர்ந்துவிட்டது. அதில் சங்கரனோ

”பொண்ணுக்கு தெரியாம நல்லாவே காய் நகர்த்தறீங்க மாமா”

“ரொம்ப முக்கியம்” என சொல்லிக் கொண்டே பத்திரங்களைச் சரிபார்த்தார். அவர் சொன்ன எல்லாமே இருந்தது. ஆனாலும் என சிறிது நேரம் யோசித்துக் கொண்டே ராஜசேகரை பார்க்க அவர் உடனே கைகூப்பி மன்னிப்புக் கேட்டார்

”அன்னிக்கு நான் உண்மையாவே விளையாட்டாதான் பேசினேன் சத்தியமா என்னை நம்பு, என் உசுரே என் சங்கரன்தான், அவன் மேல சத்தியமா சொல்றேன் என்னை நம்பு மாப்பிள்ளை” என சொல்ல அவரும் சகுந்தலாவை பார்த்தார்

”என்னோட கடைசி கன்டிஷன் சிவா இந்த வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறது இதுல உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே”

“சத்தியமா இல்லை. என் வளர்ப்பைதான் எல்லாரும் குறை சொல்றாங்க, மிச்ச 2 பையன்களை ஒழுங்கா வளர்த்துட்டு சங்கரனை வளர்க்க தெரியாம இப்படியாக்கிட்டீங்களேன்னு கேட்கறாங்க அது கேட்க எனக்கு கஷ்டமாயிருக்கு, இங்க அவன் இருந்தா தானா மாறிடுவான் நீங்களே மாத்திடுவீங்க ஊருக்குள்ள அவனுக்கு நிறைய கெட்ட பேர் இருக்கு, இங்க இருந்தா அவனை எல்லாரும் மதிப்பாங்க அவனை நீங்களே பார்த்துக்குங்க அது போதும் எனக்கு” என சொல்லி கைகூப்பவும் அவர் அடுத்து இந்திரனை பார்த்தார்

”நீ என்னப்பா சொல்ற, தனியாளா வந்திருக்கியே எங்க உன் பொண்டாட்டி வரலையா என்ன?”

“இல்லை மாமா, அவளும் சுமியும் அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க” என சொல்ல அடுத்து அவரின் பார்வை சந்திராவின் மேல் விழவும்

”அதான் அண்ணா ஆன்டர்சனை கூட்டிட்டு வந்துட்டாரே, நீங்க சொன்னபடியே நடந்துக்கிட்டாரு. அண்ணா பேர்ல சொத்தும் இருக்கு, வீட்டோட மாப்பிள்ளையா கூட இருக்க சம்மதிச்சிட்டாரு அப்புறம் என்ன  கல்யாணம் பண்ணி வைச்சிடுங்களேன்”

“கல்யாணமா என் பொண்ணு படிக்க வேணாமா” என கேட்கச் சிரித்தான் சங்கரன்

”படிக்க வைக்க அவளை பாரினுக்கு அனுப்ப திட்டமா ஏன் மாமா இப்படி, அவள் இங்கயே படிக்கட்டும், நீங்க சொன்னீங்கன்னு இவ்ளோ செஞ்சேனே அவள் படிப்பு முடியறவரைக்கும் அவளை நான் நெருங்கலை மாமா தூரத்தில இருந்தாவது பார்த்துக்கறேனே மாமா” என சிவா சொல்ல அதற்கு ஆடிட்டர்

Add comment

Comments  
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகாmahinagaraj 2018-11-01 14:01
பயங்கரம் மேம்.... :clap: :clap:
சிவான்னா சும்மாவா.. சொன்னபடியே சொந்தம்,பந்தம்,ஊரார்கள்,பெற்றோர்கள் என அனைவரின் முன்னிலையிலும் கல்யாணத்தை முடிச்சிட்டரு... கெட்டிகாரர் தான்.. :roll: :lol:
ரெண்டு கல்யாணமும் சீரும் சிறப்பா முடிஞ்சது சந்தோஷம்..... :lol: :lol: :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந் 2018-11-01 12:16
சிவசங்கரன் அனைவரையும் முட்டாளாக்கியது பிடிக்கவில்லை ஏமாற்றி ஒரு உறவை உருவாக்கி இன்னொரு உறவை முறித்துக் கொண்டான் இது சரியல்ல 3:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகாராணி 2018-11-01 12:11
வசுமதிக்கு அவளுடைய காதலன் கணவனாக கிடைத்துவிட்டான் சிவசங்கரனுக்கு மனைவியாக சாந்தி கிடைத்துவிட்டாள் வாழ்த்துக்கள் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகாராஜேந்திரன் 2018-11-01 12:08
பாவம் ஆடிட்டர் நல்லா ஏமாந்துட்டாரே :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகாvijayalakshmi 2018-11-01 12:03
எப்படியோ கல்யாணம் முடிஞ்சிடுச்சி நைஸ் எபி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகாSAJU 2018-11-01 11:17
MAMAAAA KKUU SUPER AAPPUUUUUU VACHUTAANYAAAA
NALLAAAA VACHCHU SAINJUTAAANNNN
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top