Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 09 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 09 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

நீலகிரி… சதாவிற்கு புதிய இடம்… அந்த ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் ஆசைபட்டாள். ஆனால் அதற்காக புவனிடம் பேச முடியாது. இப்போதுவரை அவள் தன்னிலையை விட்டு இறங்கவேயில்லை. அவள் முடிவு செய்து வைத்ததை மாற்றி வைத்து அவளுடைய வாழ்க்கையை வேறு மாதிரி மாற்றி விட்டான்.

அவனுக்கு என்ன உரிமை உள்ளது? அத்தை சொன்னால் இவன் செய்து விடுவானா என்ற கோபம் வந்தது. சில சமயம் அவனிடம்  நேராகவே கேட்டுவிடலாமா என்று தோன்றியது. அப்படி கேட்டால் வேறு ஏதோ பிரச்சினை வரும் என்று உள்மனதிற்கு தோன்றியது. ஏனெனில், ஊருக்கு கிளம்புமுன் அத்தை அவளிடம் இரண்டொரு முறை.அழுத்தி சொல்லிய விசயம்தான் மனதை அழுத்தியது.

“உனக்கு எந்த சந்தேகம் கேள்வி இருந்தாலும் நீ புவனிடமே கேட்டுக் கொள். உனக்கு பதில் சொல்ல வேண்டியவன் அவன்தான். கொஞ்சமும் விட்டு வைக்காமல் கிளியராக கேட்டுவிடு. அப்புறம் அவனுடன் நீ வாழப்போவதை முடிவு செய்” என்று கூறியிருந்தார்.

அத்தைக்கு என்ன திடீர் அக்கரை… அதுவும் அவருடைய செல்ல சிஷ்யனை விட்டு தருவதுபோல் பேசுகிறாரே…? அவர் அவனுக்கு சாதகமாகத்தானே அனைத்தையும் செய்தார். இப்போது எதற்கு இந்த அந்தர் பல்டி! என்னவோ இருக்கிறது…

இப்படி ஒரு எண்ணம் தோன்றியதாலேயே அவனிடம் எதுபற்றியும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தாள். இப்போதைக்கு புவனை வெறுப்பேத்தலாம் என்று நினைத்துக் கொண்டாள். எப்படி செய்யலாம்…?

ம்ஹூம்… சே… சே.. சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடும் வேலையை எல்லாம் செய்யக் கூடாது! அந்த குணம் அவள் பரம்பரைக்கே கிடையாது….!(ஆஹாங்!)

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனுக்கு பிடிக்காத விசயங்கள்  வேறு என்ன இருக்கிறது? அவனுடைய அறைக்குள்ளும் போகக் கூடாது என்று சொல்லி விட்டான்? அவனும் தொட்டா சிணுங்கிபோல இல்லையே? ரொம்பவும் கோபம்வரக் கூடிய விசயத்திற்குகூட நிமிர்ந்து ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தான். அன்றைக்கு அவன்மீது பழிபோட்டபோதும் அவன் ரியாக்ஸன் அதுதான்.

நல்ல  நகர வாழ்க்கையை விட்டு விட்டு இங்கு வந்து அத்துவான காட்டில் இருக்கிறானே… அமைதி விரும்பியாக இருப்பானோ? அதை டச் செய்து பார்ப்போமா? ம்… ஹோம் தியேட்டரில் வால்யூம் எவ்வளவு டெசிபல் வைத்தால் காது கிழியும்….?

செய்து பார்த்தாள்…. காலங்கார்த்தாலேயே…. ‘ஐ வாண்ட் டு மூவ் இட் மூவ் இட்…” என்று ஹை வால்யூமில் வைத்தாள். ஒன்னும் நடக்கலை! அவளும் விடாமல் ஒரு மணி நேரம் போட்டு பார்த்தாள். அவளுக்குதான் தலைவலிக்க ஆரம்பித்தது… விரக்தியுடன் வெளியில் நின்றபோது… அவன் காதில் வைத்திருந்த பஞ்சை எடுத்து குப்பையில் வீசியதை பார்த்து வெறுத்து போனாள்… க்ரேசி ஃபெல்லோ!

கொஞ்சம் டிஸிப்ளின் பைத்தியம்… எல்லாம் ஒழுங்காக அந்தந்த இடத்தில் இருக்கணும்… பொருட்களை கலைத்து போட்டு பார்த்தாள். ம்ஹூம் அவன் கண்ணிருந்தும் குருடனாக நடித்தான். கடைசியில் அவளுக்கே அந்த சூழல் பிடிக்காமல் மீண்டும் ஒழுங்குபடுத்தி வைத்தாள்.

ஹையோ… வேறு எப்படி அவனை இரிட்டேட் செய்வது…?  உண்மை என்னவெனில் சதாவிற்கு அடுத்தவரை வம்பிழுக்கத் தெரியாது. வழு சண்டைக்கு யாராவது வந்தாலும் அவ்விடம் விட்டு  நகர்ந்து விடுவாள். அடுத்தவரை எடைபோடத் தெரியாது. எல்லோருக்கும் சம மதிப்பெண்தான் தருவாள்.

அவர்கள் சக மனிதர்கள் என்ற நிலையிலேயே  நிறுத்தி மரியாதையாக நடத்துவாள். அடுத்தவர்களுக்காக வருத்தப்படும் அளவிற்கு அடுத்தவரிடம் கோபப்படும் குணமும் கிடையாது. வீட்டின்  செல்லப் பெண்ணான அவளுக்கு அது தேவையும் பட்டதில்லை! கேட்டது கிடைத்த நிறைவில் இருக்கும்போது கோபம் பழகாது அல்லவா?

முதன் முதலில் அவளுக்கு கோபம் வந்ததே வைபவிடம்தான். அதையும்கூட அவனிடம் வெளிக்காட்டாமல் விலகி விடவே நினைத்தாள். அதற்காக அவனுடைய கோபத்திற்கும் ஒரு நியாயம் கற்பித்தாள்.

பிறகு இந்த புவன்… சம்பந்தமே இல்லாமல் வந்த தொல்லை! அப்போதும் அவனிடம்   நேரடியாக சண்டையிடத் தெரியாமல்… வேறு ஒரு யுக்தியை செய்யப் போய் அவள்தான் சிக்கிக் கொண்டாள்.

இந்த கேப்பில்… அப்பாவிடமும் அத்தையிடமும் செல்லிடத்து சினத்தையும் காத்தாள். அவளுக்கு கோபம் வராது என்றில்லை…. உள்ளுக்குள் கொதித்து தொண்டைகுழிவரை குமிழிட்டு வரும் சினம் அப்படியே அடங்கி விடுகிறது…. அவ்வளவுதான் அதன் வீச்சு..!

அவளால் புவனை பழிவாங்க முடியுமா என்பதுகூட சந்தேகம்தான். கோபம் என்பது ஒரு உணர்வு அது உக்கிரமாக வெளிப்பட அடுத்தடுத்த தூண்டல்கள் வேண்டும்.

ரொம்பவும் சென்சிடீவாக இருந்தால் படக்கென்று கோபம் வந்து விடும்… வாய் வார்த்தையாக திட்டி தீர்ப்பார்கள்… கை நீட்டுவதும் நடக்கும்… பாம்பு மாதிரி…

கொஞ்சம் அமைதியான ரகம் எனில் கோபம் வர ட்யூன் செய்ய வேண்டும்… அடுத்தடுத்து இம்பல்ஸ் கிளம்ப வேண்டும்… மொத்தமாக பர்ஸ்ட்-அவுட் ஆகிவிடும். மதம் கொண்ட யானை மாதிரி…

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 09 - சாகம்பரி குமார்saaru 2018-10-31 11:27
Ha ha puvan chellam avala nee Moonu vagaiyavum mathiruvangle pola ye
Avala handle pandradellam sari vaibav ah parthathum Ena un iyalba mathura
Poramayooo :grin: :grin: :grin:
Anda paambu vaibav vela ha ha chinna pulla thana iruke

Sada baby nee Innum valaranum kanna
Anda room kulla Apdi Enna tan iruku.. Ha ha Inga tan puvan thali pandran
Anda room pokoodathu nu Trumba Trumba sonna Ada seiya thonumla he he
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 09 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-10-31 10:57
ரொம்ப நல்லாயிருக்கு மேம்... :clap: :clap:
சதாகிட்ட குழந்தைதனம் இருக்குன்னு தெரிஞ்சுவச்சிருக்கர புவனுக்கு அவகிட்ட எப்படி நடக்கனும்ன்னு கூட தெரிஞ்சிருக்கும்... :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# MAMÑ by Sagambari KumarSahithyaraj 2018-10-31 01:24
:yes: :yes: Ippadiye vitta sarivarathe oru twist venumla but Bhuvan is there to help Sathakshi and to even overcome all the problems. Appadinu Sagambari mam sollasonnanga facepalm pa. Mam sollittane ok va :grin: . Adutha ud lengthy ah kudunga. Tit for tat. :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 09 - சாகம்பரி குமார்AdharvJo 2018-10-30 20:34
Looks like Sadha-oda rendu move-um unwanted aga irukkun :yes: As u said sadha-vukul innum married girl symptoms ethum theriyala :P anyway Mr Buvan nala co-operate panuraru but adhukkun rombha test pana Sadha patient aga vendiyadhu thaan ;-) what a misunderstanding athai ji right-n sonna ivanga left turn podura character aga irukangale facepalm anyway nanga happy to see the Tom & jerry :dance: Buvan-kum Sadhavu-kum ena irukuradha :Q: Out of syllabus question ellam seladhu Ms Sagampari :grin: Andha erumai thaan pambu vittadho :Q: silly fellow he can only do DAT.. avanoda cunning plan-k 5L kuda spend panadhavanche steam sadha-y eppadi track-k kondu varivirgal endru therindhu kola waiting. Thank you for this interesting update :clap: :clap: Keep rocking.
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2018-10-30 20:18
Wow..... Sooper... :clap: dora girl, kosu.... Aanalum heroine ku ivlo nick names vendamae mam... :P paavam Sadha darling..... Vaibhav thaan antha paamba kondu vanthirpaan pola :Q:.. Waiting for the next update....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 09 - சாகம்பரி குமார்SAJU 2018-10-30 19:17
ANTHE PAAMBUUUUU VAIBAV MULAMAA VANTHATHAAAAAAAA
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top