(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 05 - ஜெய்

Gayathri manthirathai

ல்லூரி திறந்து ஒருவாறாக காயத்ரி தன் பயத்தையும் மீறி அவள் வகுப்பு மாணவர்களுடன் ஓரளவு சந்தியாவின் முயற்ச்சியால் பழக ஆரம்பித்திருந்தாள்.... மாநில அளவில் தேர்ச்சி பெற்றிருந்த மாணவியாதலால் ஆசிரியர்கள் அவளை மிக நல்ல முறையிலேயே நடத்தினார்கள்...

சந்தியாவும், காயத்ரியும் வகுப்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க.... “ஹே சந்து அண்ட் காயு விஷயம் தெரியுமா.... இன்னிலேர்ந்து நமக்கு bio-chemistry எடுக்க புதுசா ஒரு professor வர்றாருடி... இப்போதான் நம்ம anatomy சார் சொன்னாரு.... ஆளு சும்மா டக்கரா இருக்காரு....”, அவர்களின் தோழி வந்து சொல்ல....

“ஹே மாலி என்னை சந்து பொந்துன்னு கூப்பிடாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது.... ஒழுங்கா முழுப்பேர சொல்லி கூப்பிடு....”

“மாலினி நமக்கு பாடம் நடத்தறவங்க நமக்கு குரு... கிட்டத்தட்ட கடவுள் மாதிரி.... அவங்களைப் பார்த்து இப்படிலாம் பேசக்கூடாது....”, வழக்கம் போல் காயத்ரி அறிவுரையை ஆரம்பிக்க....

“காயும்மா அப்படிலாம் சொல்லாத.... நம்ம கிளாஸ் முழுக்க எல்லாம் வத்தலும் தொத்தலுமா இருக்கு.... அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியா பசுமையா இருந்தாலும் அவங்க கழுத்துல occupied போர்டு தொங்குது... So அட்லீஸ்ட் வர்ற சாரானும் to-let போர்டு வசிருந்தாருன்னா நம்ம போய் குடியிருக்கலாமே....”, சந்த்யா சொல்ல மாலினி அவளுக்கு hi-fi கொடுத்தாள்.... அவர்களின் பேச்சை கேட்ட காயத்ரிதான் திருந்தாத ஜென்மங்கள் என்று தலையில் அடித்துக் கொண்டாள்....

இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரியின் பியூன் காயத்ரியை கல்லூரி முதல்வர் அழைப்பதாக கூறி சென்றான்.... தனியாக செல்ல பயமாக இருப்பதால் துணைக்கு சந்தியாவையும் அழைத்துக்கொண்டு முதல்வர் அறைக்கு சென்றாள் காயத்ரி....

முதல்வரின் அறைக்கதவை தட்டி அனுமதி கேட்டு இருவரும் உள்சென்றனர்....  அவரின் அறையில் முதல்வரையும் சேர்த்து இன்னும் மூன்று பேர் அமர்ந்திருந்தனர்....

“Good morning Sir….”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“வாம்மா காயத்ரி... உன்னைத்தானே கூப்பிட்டேன்... கூட இது யாரு....”

முதல்வர் கேட்க காயத்ரி பயந்தபடியே கையைப் பிசைந்தாள்.... “அது சாரி சார்... எனக்கு தனியா வர பயமா இருந்ததால சந்தியாவையும் கூட கூட்டிட்டு வந்தேன்....”

“ஏம்மா நீ என்ன LKG படிக்கற பொண்ணா.... பயந்து நடுங்க... என்னைய பார்க்கவே இப்படி பயந்தேன்னா நாளைக்கு பேஷண்ட்ஸ் எப்படி பார்ப்ப....”, முதல்வர் கேட்க... ‘இதுக்குத்தான் இந்த படிப்பு வேணாம்ன்னு எங்கம்மாக்கிட்ட சொன்னேன்... கேட்டாத்தானே....’, மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டாள் காயத்ரி....

காயத்ரியிடமிருந்து எந்த பதிலும் வராததால் முதல்வரே தொடர்ந்தார்...

“இனி கொஞ்சம் தைரியமா இருக்கப் பழகு.... சார் இந்த பொண்ணுதான் காயத்ரி.... ஸ்டேட் ரேங்க் ஹோல்டர்....”

“வாழ்த்துக்கள்மா.... இது வரை படிச்சா மாதிரியே இனியும் நல்லபடியா படிச்சு நம்ம காலேஜ்க்கு பேர் வாங்கிக் கொடுக்கணும்...”, முதல்வர் அருகில் அமர்ந்திருந்தவர் சொல்ல, காயத்ரி நல்ல முறையில் படிப்பதாக கூறி தலையை ஆட்டினாள்...

“காயத்ரி நாங்க எங்க கல்விக் குழுமத்தோட சார்பா ஒரு ஒரு வருஷமும் நல்லா படிக்கற பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புல நல்ல முறையில் தேர்ச்சி பெற்று முதல் பத்து இடங்களைப் பிடிக்கிற  மாணவர்களுக்கு பரிசும், உதவித்தொகையும்  கொடுப்போம்... இந்த வருஷம் அதை வாங்கறதுல நீயும் ஒருத்தர்... அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு RVM கல்யாண மண்டபத்துல விழா நடக்குது... கண்டிப்பா உங்க parents கூட்டிட்டு வந்துடு....”

“ரொம்ப நன்றி சார்... கண்டிப்பா எங்கம்மாவோட வந்துடறேன்....”

“உங்கப்பா என்னம்மா பண்றாரு...

“அப்பா தவறிட்டார் சார்... அம்மா மட்டும்தான்... ஒரு அண்ணா.... அவர் டெல்லில வேலை பண்ணிட்டு இருக்கார்....”

“சரிம்மா விழால பார்க்கலாம்.....”, முதல்வர் அருகிலிருந்தவர் கூற காயத்ரி அவர்களுக்கு நன்றி கூறி அறையிலிருந்து வெளியேறினாள்....

“ஹே சூப்பர்டி காயத்ரி... கலக்கற போ.... வாழ்த்துக்கள்...”

“தேங்க்ஸ் சந்த்யா... ஆமாம் சந்தியா டீன் பக்கத்துல உட்கார்ந்து இருந்தாரே யாரு அவர்....”

“அவர் யாரா.... இந்தக் காலேஜே அவரோடதுதாண்டி... இதைத் தவிர இன்னும் ரெண்டு இன்ஜினியரிங் காலேஜ் அப்பறம் மூணு ஸ்கூல் அவருக்கு இருக்கு... இதே மெடிக்கல் காலேஜ் இன்னும் ரெண்டு இடத்துலயும் இருக்கு....”

“ஓ மத்த ரெண்டு பேர்....”

“அவர் பக்கத்துல உட்கார்ந்து இருந்தது அவர் பையன்... இன்னொருத்தர் யாருன்னு தெரியலை....”

“ஓ சரி சந்தியா... நான் மொதல்ல அம்மாக்கு போன் பண்ணி இந்த பரிசு விஷயத்தை சொல்றேன்.....”,காயத்ரி அவள் அன்னைக்கு அழைத்து பேச ஆரம்பித்தாள்.... 

காயத்ரி அறைக்குள் நுழைந்ததிலிருந்து அவள் விடைபெற்று வெளியேறும் வரை அங்கிருந்த ஒருவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன், அவள் வெளியேறியவுடன் தானும் வெளியில் வந்து அவனின் பார்வையை தொடர்ந்தான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.