(Reading time: 8 - 16 minutes)

ன்னடா சதீஷ் இன்னைக்கும் கிளாஸ்க்கு நீ வரலை....”

“நேத்து ஆரம்பிச்ச வயிறு வலி இன்னும் சரியா போகலைடா.... நிக்க கூட முடியலை....”

“லூசாடா நீ.... எனக்கு ஒரு போன் பண்ணி இருக்க மாட்ட.... நான் அப்பவே வந்திருப்பேனே....”

“இல்லைடா இன்னைக்கு எல்லாமே important கிளாஸ்.... அதுதான் உன்னை தொந்தரவு பண்ண வேணாமேன்னு விட்டுட்டேன்....”

“உன்னை அப்படியே அறைஞ்சேன்னா பாரு... லூசு லூசு... சரி மொதல்ல கிளம்பு... நாம டாக்டர் பார்த்துட்டு வரலாம்....”

“இல்லைடா வேணாம்.... வாட்ச்மேன்கிட்ட சொல்லி மாத்திரை வாங்கிட்டு வர சொல்லி போட்டிருக்கேன்... சரி ஆகிடும்.... அதுவும் இல்லாம hospital போனா செலவு வேற அதிகம் ஆகிடும்டா....”

“நீ இன்னும் டாக்டர் ஆக நாலு வருஷம் இருக்குடா... அதுக்குள்ள வைத்தியம் பார்க்க ஆரம்பிக்காத.... நம்ம காலேஜ்ல இருக்கற hospital போகலாம்... இங்க படிக்கற பசங்களுக்கு அங்க மருத்துவம் இலவசம்தான்... மருந்து கூட சலுகை விலைல கிடைக்கும்... அதுனால செலவாகிடுமோன்னு பார்த்துட்டு உடம்பை அதிகப்படுத்திக்காத....”, சதீஷ் மேலும் ஏதோ மறுத்துப் பேச அரை மணி நேரம் அவனுடன் வாதம் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் சுந்தர்....

இருவரும் மருத்துவமனையை அடைந்து அங்கிருந்த பொது மருத்துவரை காண சென்றனர்....

அங்கு படிக்கும் மாணவர்களாததால் உடனடியாக மருத்துவரை பார்க்க முடிந்தது....

“என்ன தம்பி ஆச்சு.... கிளாஸ் கட் பண்ணிட்டு வர்ற அளவுக்கு....”

“நேத்திலிருந்து பயங்கற வயித்து வலி டாக்டர்....”

“ஓ அந்த மெத்தை மேல ஏறிப் படுங்க... நான் உங்க வயிற்றை அமுக்கும்போது எந்த பக்கம் வலிக்குதுன்னு சொல்லுங்க... அப்பறம் நேத்து என்ன சாப்பிட்டீங்க....”, டாக்டர் பரிசோதனை மேற்கொண்டு சதீஷிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்....

“இது ஏதோ gas trouble மாதிரி தெரியுது....”, பரிசோதனை முடிந்து மருத்துவர் கூற, சதீஷ் தனக்கு பெரிதாக எதுவும் இல்லையென்று ஆசுவாச பெருமூச்சு விட்டான்....

“இவனுக்கு இப்படி வலி  வர்றது இது முதல் தடவை இல்லை டாக்டர்... இதுக்கு முன்னாடியும் ஒரு நாலைந்து முறை வந்திருக்கு...  அதுதான் உங்களை பார்க்க வந்தோம்....”

“என்னப்பா சொல்ற....”

“ஆமாம் டாக்டர்.... ஒரு ஒரு முறையும் இப்படித்தான் நிக்க முடியாம அவஸ்தைப்படுவான்... ரெண்டு வாட்டி வாந்தி கூட பண்ணி இருக்கான்....”

“ஓ அப்போ இது அல்சரா கூட இருக்கலாம்... டெஸ்ட் பண்ணாம எதுவும் சொல்ல முடியாது... நீங்க இங்க இருக்கற  இரைப்பை குடல்(gastroenterologist) சிறப்பு மருத்தவரை போய் பாருங்க... அவர் எல்லா டெஸ்டும் எடுத்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு சொல்லுவார்.... இன்னைக்கு ஏதானும் வாந்தி பண்ணினியாப்பா...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இல்லை டாக்டர்.... வலி மட்டும்தான் இருக்கு....”

“அவர் புதன் கிழமைதான் வருவாரு... அது வரைக்கும் வலி குறைய மட்டும் மாத்திரை தரேன்... மத்தது அவர் என்ன சொல்றாரோ அந்த மெடிகேஷன் எடுத்துக்கோங்க... நான் லெட்டர் தரேன்... அதை எடுத்துட்டு போய் அவரை பாருங்க....”, சதீஷும், சுந்தரும் மருத்துவரிடம் கடிதத்தையும், வலி நிவாரிணியையும் பெற்றுக்கொண்டு இருவரும் தங்கள் அறையை நோக்கி சென்றனர்....

“டேய் சுந்தர்... எதுக்குடா அவர்க்கிட்ட எனக்கு தொடர்ந்து வயித்து வலி வருதுன்னு சொன்ன... பாரு அவர் டெஸ்ட் அது இதுன்னு இழுத்து விட்டுட்டாரு.... எத்தனை செலவாகப்போகுதோ...”

“சும்மா இருடா... டெஸ்ட் பண்ணி பார்க்கிறது நல்லதுதான்... ஏன் இப்படி அடிக்கடி வருதுன்னு தெரிஞ்சுக்கலாம்...”, சதீஷை அடக்கிய சுந்தர் அவனை மருந்து சாப்பிட வைத்து தூங்க செய்தான்....

ணியை அழைத்து சென்ற காவல்துறையினர் அவனை செல்லில் அடைத்தனர்... அவர்களின் பின்னேயே வந்த அவனின் பெற்றோர்களை அவனை பார்க்க அவர்கள் அனுமதிக்கவில்லை...

“சார் என் மகன் என் கூடத்தான் சார் இருந்தான்... காலைல மாசாணி அம்மன் கோவிலுக்கு போயிட்டு நீங்க வர சொல்லத்தான் வீட்டுக்குள்ள வந்தோம் சார்... அவனுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...”

“இங்க பாருங்க... சும்மா இங்க நின்னுட்டு தொல்லை பண்ணாதீங்க... அடுத்து அவனோட சேர்த்து உங்களையும் உள்ள தள்ளிடுவேன்... என்ன குடும்பமே சேர்ந்து பொய் சொல்றீங்களா... பட்டப்பகல்ல ஒரு பொண்ணை உன் புள்ளை போட்டுத் தள்ளிருக்கான்... நீங்க ரெண்டு பேரும் அவனுக்கு பரிஞ்சுட்டு பொய் சொல்றீங்க....”

“ஐயோ இன்ஸ்பெக்டர் அய்யா... சாமி சத்தியமா நாங்க பொய் சொல்லலையா.... அவன் எங்க கூடத்தான் இருந்தான்...”

“மொதல்ல கூப்பாடு போடறதை நிறுத்தும்மா... யோவ் ஏட்டு என்ன பார்த்துட்டு இருக்க... இவங்களை வெளிய அனுப்பு....”, இன்ஸ்பெக்டர் கத்த ஏட்டு அவர்களை வெளியில் அனுப்பினார்...

“யோவ் அவன் எதுனா வாயைத் திறந்தானாய்யா....”

“நான் கொலை பண்ணலை.... காலைலேர்ந்து எங்கம்மா அப்பாக்கூடத்தான் இருந்தேன்னு திரும்ப திரும்ப சொல்றான் சார்....”

 “எந்த கொலைகாரன்ய்யா நான்தான் பண்ணினேன்னு ஒத்துட்டு இருக்கான்... விசாரிக்கற முறைல விசாரிச்சா உண்மையை சொல்லிட்டு போறான்....”

இன்ஸ்பெக்டர் லத்தியை சுழற்றியபடியே ஸ்பெஷல் செல்லினுள் நுழைந்தார்...

அங்கு ஏற்கனவே வாங்கிய அடியில் முகம், கை கால் என்று அங்கங்கு வீங்கிய நிலையில் மிகப் பரிதாபமாக நின்றிருந்தான் மணி.....  

தொடரும்

Episode # 04

Episode # 06

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.