(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்

Gayathri manthirathai

Hi Friends,

உங்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்... நவராத்திரி ஓட்டத்துடன் ஓட்டமாக அவசர அவசரமாக அடித்த அப்டேட்.... பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.....

வாய்யா மாமா.... எப்போ வரேன்னு சொல்லிட்டு இத்தனை லேட்டா வர்ற...”

“லேட்டா வந்தாலும் உன் மாமன் லேட்டஸ்ட்டா வருவேன் செல்லாக்குட்டி.... புது பைக் எப்படி இருக்கு பாரு....”

“அடப்பாவி மாமா... யாருக்கிட்ட ஆட்டைய போட்ட....”

“ச்சே யாரை பார்த்து என்ன பேச்சு பேசற.... ஆட்டைய போடறதா... அப்படின்னா என்னன்னே எனக்குத் தெரியாதே....”

“அப்போ இது நீயா சொந்தமா காசு கொடுத்து வாங்கின.....”

“சொந்தமா வாங்குறதா... இதென்ன கெட்ட வார்த்தை பேசற.... அப்பறம் நம்ம பசங்க மனசொடிஞ்சு போய்ட மாட்டாங்க.... பாரு இன்னைக்கு நம்ம ராமு புது பைக் வாங்கி அண்ணே நீங்கதாண்ணே பூஜை போடணும்ன்னு கதறி கதறி அழுதான்... அதுதான் நான் எடுத்துட்டு வந்தேன்....”

“அவரு எதுக்கு கதறி இருப்பாருன்னு எனக்குத் தெரியும்... அண்ணே புது வண்டிண்ணே.... கோடு  போட்டுறாதீங்கன்னு கதறி இருப்பாரு....”

“சரி சரி என்னைய டேமேஜ் பண்ணினது போதும்.... மாம்ஸ் என்ன பண்றாரு....”

“வழக்கம்போலத்தான் அம்மா அப்பாக்கு பூப்போட்டு அர்ச்சனை பண்ணிட்டு இருக்காங்க... அப்பா அந்தக் கடவுளை விட அமைதியா அடக்க ஒடுக்கமா உட்கார்ந்துட்டு இருக்காரு....”,சந்தியா சொல்ல சிரித்தபடியே இருவரும் வீட்டினுள் நுழைந்தார்கள்....

“வா வா மாப்பிள... எப்படி இருக்க... அஞ்சு மணிக்கே வருவேன்னு பார்த்தேன்...”

“ராமு இன்னைக்கு புது வண்டி எடுக்கணும் வாங்கண்ணேன்னு கூப்பிட்டு போய்ட்டான் மாமா....”

“இங்க பார்றா.... ஹ்ம்ம் கொடுத்து வச்ச மவராசன்... மாமனார் அவனுக்காக தண்ணியா பணத்தை செலவழிக்கறாரு... வீட்டோட உக்கார வச்சு சோறு போட்டு வண்டிலாம் வாங்கிக் கொடுக்கறாரு... ஹ்ம்ம்....”

“என்ன பெருமூச்சு எல்லாம் பலமா வருது.... உங்களுக்கும் வேணும்ன்னா உங்க மாமனாரை விட்டு பாயசம் போட சொல்லுறேன்... சரிங்களா....”

“அச்சோ சும்மா சொன்னேம்மா... நீயேன் மாமாவை கஷ்டப்படுத்துற....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது அப்படியே மெயின்டைன் பண்ணுங்க... சக்தி நான் போய் சப்பாத்தி போடுறேன்... சாப்பிட்டுத்தான் போற... அண்ணனும், அண்ணியும் என்னிக்கு  வர்றாங்க....”

“இன்னும் ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லி இருக்காங்க அத்தை...”

சந்தியாவும், அவள் அன்னையும் சமயலறைக்கு போக சக்தியின் மாமா சண்முகம் அவனை அவரின் அலுவல் அறைக்கு அழைத்து சென்றார்...

“மாப்ள அந்த மனோஜ் பையன் போக்கு கொஞ்சம் சரியில்லை.... ஏதோ தப்பு பண்றா மாதிரி தோணுது....”

“என்ன மாமா சொல்றீங்க....”

“இல்லை மாப்ள கொஞ்ச நாளா ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்கான்...”

“இருவத்து நாலு மணி நேரமும் போதைலையே இருக்கவன் வேற எப்படி இருப்பான் மாமா... அவங்க அப்பா ஏகப்பட்ட வேலை பண்ணி தேத்துற காசை எல்லாம் புட்டிலையும், குட்டிலையுமே அழிக்கறான்....”

“இல்லை மாப்ள... இந்த ஒரு மாசமா திருந்தி ரொம்ப நல்லவனா திரியறான்...”

“நம்பறா மாதிரி இல்லையே... அதுவும் முப்பத்தைஞ்சு வயசுக்குள்ள அவன் ஆடின ஆட்டம் என்ன... அவன்லாம் திருந்திட்டான்னு சொன்னா உங்க வீட்டி டாமி கூட நம்பாது....”

“இல்லை மாப்ள... நிஜமாத்தான் சொல்றேன்... கொஞ்ச நாளா ஒழுங்கா அவங்க அப்பாக்கூட போய் காலேஜ் வேலையெல்லாம் கூட பார்க்கிறான்.... நான் விசாரிச்ச வரைக்கும் ஒரு மாசமா எந்த பார் பக்கமும் போகலை... பொண்ணுங்க சகவாசம் அடியோட இல்லை....”

“ஒரு வேளை அவனுக்கு கல்யாணம் பண்ணப் போறாங்களோ....”

“எம்புட்டு வாட்டித்தான் பண்ணுவாங்க ஷக்தி... ஏற்கனவே ரெண்டு வாட்டி நடந்து, இவன் தொல்லை தாங்காம ஒண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சு... இன்னொண்ணு வீட்டை விட்டே ஓடி போச்சு.... இன்னை வரைக்கும் அந்தப்பொண்ணு  எங்க இருக்குன்னே தெரியலை....”

“ஹ்ம்ம் அதுவும் சரிதான்... எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணு வச்சுக்குங்க... எலெக்ஷன் வேற வரப்போகுது... அதுக்கான ஸ்டன்ட்டாக் கூட இருக்கலாம்...”

“நீ சொல்றது கூட சரியா இருக்கலாம் ஷக்தி.... போன முறை அவங்கப்பா நின்னு தோத்துட்டாரு.... அதுனால இந்த முறை பையனை நிக்க வைப்பாறா இருக்கும்....”

“அப்பறம் மாமா அந்த மேலத்தெரு சிங்காரம் விஷயம் என்னாச்சுன்னு அப்பா கேக்க சொன்னாங்க...”

“ஒரு முன்னேற்றமும் இல்லை ஷக்தி... நேத்து கூட போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்தேன்... கேஸ் அதே இடத்துலதான் நிக்குது....”

“என்ன மாமா இது,,,, இன்னும் எத்தனை நாள்தான் இழுத்தடிப்பாங்க.... நீங்க நம்ம சந்திரன் சார் பார்த்து கேஸ் ஏதானும் போட முடியுமான்னு கேளுங்களேன்....”

“ரெண்டு நாள் முன்னாடி சாரங்கனை பார்த்தேன் ஷக்தி.... அவர்கிட்ட சிங்காரம் விஷயமா பேசினேன்... அவர் சந்திரன் சார்க்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காரு...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.