Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 18 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: SriJayanthi

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 06 - ஜெய்

Gayathri manthirathai

ஹே காயு என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல....”

“ஆமாம் சந்தியா... பஸ் சீக்கிரம் வந்துடுத்து... வழிலயும் ரொம்ப டிராபிக் இல்லை அதான்....”

“இங்க பார்றா... சென்னையில டிராபிக் கம்மியா ஒரு நாளா... வரலாற்றுல பொறிச்சு வைக்க வேண்டிய பொன்னாள்தான் இன்னைக்கு... ஹே என்னடி மாலு இன்னைக்கு ஜகஜோதியா வந்திருக்க.... ஒரே டாலடிக்கற....”

“இன்னைக்கு நமக்கு bio-chemistry சார் வர்றாருடி.... மறந்துட்டியா....”

“ஓ அதுதான் மேட்டரா....”

“சந்தியா சார் வர்றாரு... ஒழுங்கா பெஞ்ச்ல இறங்கி உக்காரு...”, டேபிள் மேல் காலாட்டியபடியே அமர்ந்து புத்தகத்தை தூக்கி போட்டு விளையாடிக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்து காயத்திரி சொல்ல, யார் அது என்று பார்த்தபடியே கீழே இறங்கினாள் சந்தியா....

“மாலு உங்கண்ணன் சும்மா டக்கரா இருக்காருடி.... என்னா கலரு.... என்னா பிகரு.....”, சந்தியா சொல்ல மாலு அவளை கொலைவெறியுடன் பார்த்தாள்....

“நான் எப்படி அவரை என் அண்ணன்னு சொன்னேன்....”

“என்ன மாலும்மா இதுக்கூட தெரியாம இருக்க.... என்னோட ஆத்துக்காரர் உனக்கு அண்ணாதானே....”

“என்னாது ஆத்துக்காரரா.... இது எப்போலேர்ந்து....”

“Just now.... நான் fix பண்ணிட்டேன்....

“மச்சி அது நீ fix பண்ணினா மட்டும் போதாது... அதுக்கு மச்சானும் ஒத்துக்கணும்....”

“அதல்லாம் ஒரு மேட்டரே இல்லைடி.... கவுத்து மடக்கி எப்படியானும் ஓகே சொல்ல வச்சுடலாம்...”,இவர்கள் இங்கே வழக்காடிக்கொண்டிருக்க, அவர்கள் நிறுத்துவார்களா என்பது போல் காயத்ரி பரிதாபப் பார்வை பார்க்க, professor முறைத்தபடியே நின்றிருந்தார்.....

காயத்ரி சந்தியாவின் கையை சுரண்டி அவள் பேசுவதை நிறுத்துமாறு சைகை செய்தாள்.... அவள் சுரண்டிய சுரண்டலில் நிமிர்ந்த சந்தியா தங்கள் ஆசிரியர் தங்களை முறைப்பதை பார்த்து அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டாள்...

“பேசி முடிச்சாச்சா.... நான் கிளாஸ் ஆரம்பிக்கலாமா...”

“சார் எங்களுக்காகவா இவ்ளோ நேரம் வெயிட் பண்ணினீங்க... எங்ககிட்ட அனுமதிலாம் நீங்க கேக்க வேண்டாம் சார்.... நீங்க பாட்டுக்கு கிளாஸ் எடுங்க...”,சந்தியா சொல்ல, ஆசிரியரின் கோபம் இன்னும் அதிகரித்தது...

“என்ன நக்கலா.... (இல்லை விக்கலு ... சந்தியா mind voice)”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஒழுங்கா உக்கார்ந்து கிளாஸ் கவனிக்க முடிஞ்சா இருங்க... இல்லை வெளிய போய்டுங்க.... எனக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம்....”, சந்தியாவை காய்ச்சிவிட்டு போர்டை பார்த்து எழுத ஆரம்பித்து விட்டார்....

“என்னாடி ஓவர்  டீச்சரா இருக்காரு இவரு.... மாலு இவரை நான் என் ஆத்துக்காரர் பதவிலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டேண்டி... நீயே வச்சுக்கோ...”

“அய் அவரு எனக்கு அண்ணன்டி... இப்படிலாம் தப்பா பேசக்கூடாது...”

“Hey you.... பேசாம இருக்கனும்ன்னு ஒரு தரம் சொன்னா புரியாது... Get out of my class....”, ஆசிரியர் கத்த, அவரை லுக் விட்டபடியே வெளியில் சென்றாள் சந்தியா....

சிறிது நேரம் மரத்தடியில் அமர்ந்தவள் போரடிக்க தன் செல்லை எடுத்து சக்திக்கு மெசேஜ் செய்ய... சக்தி அவளுக்கு கால் செய்தான்....

“ஹலோ மாம்ஸ் என்ன பண்ற.... உன்னையும் கிளாசை விட்டு துரத்திட்டாங்களா...”

“உன்னையும்ன்னா... நீயும் வெளியதான் நிக்கறியா....”

“yah yah.... same pinch.... அடுத்த தபா பாக்கும்போது எனக்கு சாக்கி கொடுக்கணும்....”

“ஏய் ச்சீ ச்சீ... உன்னை மாதிரி bad girl கூட என்னை சேர்க்காத,,,,, இது எனக்கு free period.... அதுதான் கான்டீன்லஸ் இருக்கேன்...”

“சரி உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்....”, என்று ஆரம்பித்து நேற்று காயத்ரியை கூப்பிட்டு டீன் பேசியதை சொன்னாள்....

“இங்க பார்றா.... இந்தாள் இந்த மாதிரி நல்ல விஷயம்லாம் கூட பண்றாரா.... முடிஞ்சவரை அடுத்தவங்க கிட்ட இருந்து பிடுங்கத்தானே பார்ப்பாரு.... எப்போலேர்ந்து மத்தவங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சாரு....”

“ஹே இல்லைப்பா... இது அவர் வருஷா வருஷம் பண்றதாம்....”

“வருஷா வருஷமா நான் கேள்விப்பட்டதில்லையே.... சரி இதை எதுக்கு என்கிட்டே சொல்ற....”

“இல்லை சக்தி... அவர் பேசி முடிக்கறவரை அந்தாளோட பையன் எங்க ரெண்டு பேரையுமே முறைச்சு பார்த்துட்டு இருந்தான்.... அதுவும் காயத்ரியை அவ திரும்ப கிளாஸ்க்குள்ள நுழையற வரை பார்க்கறதை நிறுத்தலை...”

“ஓ அவன் வேற இருந்தானா....”

“ஆமாம் அதுனால நீ என்ன பண்ற நிஜமாவே இப்படி ஒரு ப்ரோக்ராம் நடக்கப்போகுதான்னு விசாரிச்சு சொல்லு... காயு அவங்கம்மா கூட தனியாதான் அங்க போகப்போறா.... அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு...”

“ஓ எனக்கு அஞ்சு மணிக்கு மேல போன் பண்ணு... அதுக்குள்ள விஷயத்தை தேத்தி வைக்கிறேன்.... அப்பறம் நாங்க உன்கிட்ட சொன்ன விஷயத்தை ஆராய ஆரம்பிச்சுட்டியா....”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Jay

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Check out Jay's interviewhttps://www.chillzee.in/chillzee/chillzee-featured/11800-independence-day-special-chillzee-writer-jay-discussion 
Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 06 - ஜெய்mahinagaraj 2018-11-14 10:31
ரொம்ப சூப்பர் மேம்... :clap: :clap:
மூன்று கதை களமும் நல்லாயிருக்கு மேம்... :clap:
முக்கோண கதையா இல்லை ஒன்னுக்கு ஒன்னு தொடர்பு இருக்கா... :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 06 - ஜெய்SriJayanthi 2018-11-27 20:29
Thanks for your comments Mahinagaraj... ondrukondru thodarbillaathathu... aanaal orey pulliyai nokki nagarvathu maathiryaana kathai
Reply | Reply with quote | Quote
+1 # GM by JaiSahithyaraj 2018-11-14 10:29
Enakku kooda andha function pathi dbt irukku. Santhiya playful irundhalum sema shrewd :clap: Mani paavam. Niraiya nigalkala nigazhvugalai kanmun nirurhiyirukku indha epi :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: GM by JaiSriJayanthi 2018-11-27 20:28
Thanks for the comments Sahithyaraj.... Function unmaiyaa illai trap for gayathriyaa paarkalaam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 06 - ஜெய்AdharvJo 2018-11-14 10:27
Ayyayo :eek: dei Mani sethuiya facepalm natamai, Mani good or bad?? Yen indha vibradhimana mudivu :sad: pora pokka partha nanga gayu oda patient agiduvom pole irukke ma :o enakku Sandhya mathiri-a ore doubt aga irukku but annatha irukumbodhu looks like things would be fine der...but sathish?? So sad of him every minute he thinks abt d expense pavama irukku madam ji however dis so very true ippadi thane hoslpital la panam plucking :angry: very realistic flow :clap: :clap: starting jolly ya irundhadhu with Sandy's galatta but rest of it Ore dag dag-n irukunga ji :P thank you and look forward for next update. Fingers crossed save satish :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 06 - ஜெய்SriJayanthi 2018-11-27 20:27
Thanks for your Comments AdharvJo... yeththanaiyo nallathu nadakkum medical field-il niraya niraya oozhalgalum nadanthu konduthaan irukkindrathu... athai patri thaan kathai... so initial sila updates ippadithaan irukkum... Mani yes paavamthaan
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 06 - ஜெய்Srivi 2018-11-14 07:55
Aaha..ethana scam indha madhiri ooduthu.. deivame enniki nijamave vandhu thappu pannravangalukku thandanai kudukkudho appo than idhellam ozhiyum..feeling very bad for Mani
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 06 - ஜெய்SriJayanthi 2018-11-27 20:25
Thanks for your comments Srivi... Deivam nindru kollum... Paarkalaam kollumaa illaiyaa endru
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top