Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Share your feedback and Suggestions</strong></h3>

Share your feedback and Suggestions

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினி

Madiyil pootha malare

சுசிலா எழுதி தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்பி வந்த ஆதி, பாரதி அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்....

“ஒரு வேளை நான் பண்ணின டார்ச்சர்ல இனிமேல் தாங்க முடியாது என்று  எஷ்கேப் ஆகிட்டாளா ??? அப்ப என் குழந்தை??  “

“சே!! அப்படி எல்லாம் இருக்காது.. அப்படி போறவளா இருந்தா ஷ்கேன் பண்றப்ப குழந்தை எப்படி இருக்கும்னு அப்படி ஏன் பயந்தாள்.. “ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்...  ஒரு சில விநாடிகள் அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது..

அவன் முழித்துக்கொண்டு நாலாபக்கம் தேடியபின் மீண்டும் யோசித்துக்கொண்டு நிற்பதைக் கண்ட ஒரு நர்ஷ் அவன் அருகில் வந்து

“சார்.. உங்க வொய்ப்பை தேடறீங்களா?? “ என்றாள்

“வொய்ப்பா ?? “ என்று முழித்தவன் அவள் பாரதியைத்தான் சொல்றாங்கனு நினைத்து ஆமாம் என்று தலையாட்டினான்..

“ஓ.. உங்க வொய்ப் அந்த பேசன்ட் ரூம்ல இருக்காங்க.. Your wife is so sweet… அந்த பையன் கிட்ட  மாத்திரை சாப்பிட வைக்க  மதியத்தில்  இருந்து போராடறேன் நான்.. வாயில்ல போட்ட எப்படியாவது துப்பிடறான்.. ஊசியும் போட்டுக்க மாட்டேங்கறான்.. அவன் போட்ட சத்தத்தை கேட்டு  உங்க வொய்ப் அங்க வந்தாங்க.. வந்ததும் அவன் கிட்ட பேசியே ஈஷியா அந்த மாத்திரையை சாப்பிட வச்சுட்டாங்க.. சி ஈஷ் ரியலி கிரேட் சார்.. அங்க இருக்காங்க.. போய் பாருங்க” என்று புன்னகைத்து ஒரு அறையை காட்டி நகர்ந்தாள்..

“அப்பாடா.. “என்று அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இந்த கேடி...  ஒரு நிமிடத்துல என்னையே பயமுறுத்திட்டாளே “என்று திட்டியவாறு அந்த நர்ஷ் காட்டிய அறைக்கு சென்று எட்டிப்பார்த்தான்..

பாரதி ஒரு ஏழு வயது சிறுவனிடம் அழகாக கொஞ்சி கொண்டிருந்தாள்... அவள் சிரிக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கு என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.. அதற்குள் அந்த சிறுவன் இவனை பார்த்துவிட்டான்.. பின் அவனை சுட்டிக்காட்டி

“அக்கா... இவர் தான் மாமாவா... சூப்பரா இருக்கார் கா .. ஹீரோ மாதிரி.. உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கார்  “ என்று சிரித்தான்..

பாரதியும் திரும்பி அவனை பார்த்தாள்.. அந்த பையன் சொன்ன உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கார்  என்பதில்  கன்னங்கள் சிவந்தன அவளுக்கு.. அதற்குள் சுதாரித்துக் கொண்டவள்

“ஐயோ!!. இந்த சிடுமூஞ்சி என்ன திட்ட போவுதோ.. இவன் வேற மாமானு சொல்லிட்டானே!! “ என்று மனதிற்குள் புலம்பியவாறு மெல்ல ஆதியை பார்த்தாள்..

அவனோ கேசுவலாக சிரித்துக்கொண்டு அந்த சிறுவன் அருகில் வந்தான்..

“Thanks for your compliment mr…. “  என்று அவன் பெயர் தெரியாததால் நிறுத்தினான்..

“My name is Siva.. Siva Balan “ என்று சிரித்தான் அந்த சிறுவன்..

“நைஷ் நேம்”

“தேங்க்ஷ் மாமா “என்றான் உரிமையாக...

“மாமா... பாரதி அக்கா ஈஷ் சோ ஷ்வீட்... அந்த சிஷ்டர் ரொம்ப மோசம்.. அவங்களுக்கு எப்படி மாத்திரை கொடுக்கறதுன்னே தெரியல...தினமும் அக்காவை இங்க கூட்டிட்டு வர்ரீங்களா??? “ என்றான் ஏக்கத்துடன்...

அதைக்கேட்ட பாரதிக்கு எங்க வர்ரோம்னு  சொல்லி பொய்யான நம்பிக்கையை கொடுத்துடுவானோ என்று இருந்தது... அதற்குள்

“ஹ்ம்ம்ம் தினமும் வர்ரதுன்னா கஷ்டம் சிவா... ஆனால் இவங்க இங்க வர்ரப்போ உன்னை வந்து பார்ப்பாங்க சரியா.. “ என்றான் ஆதி சிரித்தவாறு..

அதை  கேட்டதும் சிவாவின் முகம் வாடியது..  அதைக் கண்ட பாரதிக்கே கஷ்டமாக இருந்தது..ஆதியும் அதை உணர்ந்து

“But Siva.. I have an Idea.. இந்த அக்கா தினமும்  போன் பண்ணி உன்கிட்ட பேசுவாங்களாம்... அவங்க எப்படி மாத்திரை சாப்பிடறதுனு சொல்லுவாங்களாம்.. நீயும் அதே மாதிரி சமத்தா சாப்பிடுவியாம்... உனக்கு எப்ப எல்லாம் இந்த அக்காவை பார்க்கணுமுன்னு தோணினாலும் அவங்களுக்கு போன் பண்ணு.. இந்த அக்காவும் வெட்டியாதான் இருக்காங்க... உன்கிட்ட பேசுவாங்க “ என்று சிரித்தான்..

அதை கேட்டதும் சிவாவின் முகம் மலர்ந்தது..

“ஹ்ம்ம் குட் ஐடியா மாமா .. தேங்க்ஷ் “என்று சிரித்தான்...

அவன் சொன்ன வெட்டியாதான் இருக்கா வில் அவனை திரும்பி முறைத்தாலும் மனதுக்குள்

“பரவாயில்லையே... இந்த சிடுமூஞ்சிக்கு கூட ஏதொ யோசிக்க தெரிஞ்சிருக்கு... இந்த பிரச்சனையை ஈஷியா தீர்த்து வச்சூட்டானே” என்று பாராட்டினாள்...

சிவாவின் நன்றியை ஏற்றுக்கொண்டவன்

“ஓகே.. சிவா... நாங்க கிளம்பறோம்.. நீ சமத்தா இருக்கனும்.. அப்பதான் சீக்கிரம் குணம் ஆகி வீட்டுக்கு போக முடியும்... இந்த அக்கா நாளைக்கு போன் பண்ணுவாங்க.. டேக் கேர்.. பை..” என்று விடைபெற்றான்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிMythi 2018-11-15 00:33
Very nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிPadmini 2018-11-15 00:57
:thnkx: Mythi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிSAJU 2018-11-14 19:31
SUPERRRRRRRR
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிPadmini 2018-11-14 22:36
Thanks Saju!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிAdharvJo 2018-11-14 19:02
:dance: ethukku attam-n kandupidinga parkalam :P

Boss avaroda princess-k kiss koduthutanga :dance: (thairiyam irundha unga rathi mulichittu irukurapa try panunga boss :D ) Oats-k uppuma evalovo thevalai facepalm Enjoyed reading dis happy update Padmini ma'am, sema interesting and lively flow ji :clap: :clap: ..Adhi oda changes nala irukku but avarai rombha sindhika vidamal irundhal I don't think there would much problem ;-) Ningalum velan-um appadi irukka vittuta ungal desposit ena aguradhu...as always ellam scenes-um super (y) Look forward to read next update. Thank you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிPadmini 2018-11-14 22:35
Your dance is cute Adharv!! i can imagine :P :lol:
Thanks for your comments!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிsaaru 2018-11-14 17:49
Ha ha engaluku bulb kuduthutar vels enga Kanpu thavaragiduchi
Athi changes very nice.. Thodaruma pakalam
Thanks Fr big epi paddu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிPadmini 2018-11-14 22:34
Thanks saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிmahinagaraj 2018-11-14 12:36
வாவ் சூப்பரோ... சூப்பர்... :clap: :clap:
ரொம்ப நல்லாயிருக்கு இவங்க ஒன்னாயிருந்தா.. :yes: :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 21 - பத்மினிPadmini 2018-11-14 22:33
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# EMPM by PadminiSahithyaraj 2018-11-14 12:13
Haa orutharkooda Sariya assume pannala. Idhula Velan Thiruvilayadal oda Padmini sisoda sathiyum kalanthirukumnu oru dbt :-) EPI simply superb aavaloda adutha ud Ku waiting. :cool:
Reply | Reply with quote | Quote
# RE: EMPM by PadminiPadmini 2018-11-14 22:32
:lol: ithula en sathi ethuvum illappa... ellam antha velanin aattam :grin: :thnkx: for your comments Sahithya!!
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-11-14 12:00
Hi

Very jovial update.

Satisfied very much while reading the story.

Because Bhrathi's status needs some emotional touching care from either Janaki or from Adhi

Anyhow Adthi's role now turns towards little and new one also towards Bharathi.

Nice story line and story move.


Waiting to read more updates.
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-11-14 22:30
Thanks Akila!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
04
EVUT

-

NiNi
05
MMSV

ILU

MAMN
06
GM

EMPM

KIEN
07
ISAK

KK

KaKa
08
EU

Ame

EYPI
09
UNV

NKU

Tha
10
KI

VTKS

EK

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top