Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 11 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 11 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

சாரு அழுது கொண்டே ஓடவும் அனைவருக்கும் கவலை வந்தது. அதுவும் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்குமோ என்று கரணின் தந்தை யோசித்தார். இதுபற்றி அவனிடம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர்கள் பின்னேயே சென்ற புவனுக்கும் சதாவிற்கும் விஷயம் தெரிந்து விட்டது.

சாருவிற்கும் கரணிற்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. குழந்தை உருவாகவில்லை… மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து சிகிச்சை மேற்கொண்டும் குழந்தை இல்லை. சாருவிற்கு  நம்பிக்கை போய்விட்டது. பிரச்சினைக்கு அவளுடைய உடல்நிலைதான் காரணம் என்பதால் ரொம்பவும் மனம் நொந்து போனாள். அவளை தேற்றும் பொருட்டே இங்கு வந்ததாகவும் கரண் சொன்னான்.

“டோண்ட் வொரி… இது யங் கப்பிள் அனைவரிடமும் கேட்கும் கேள்விதான். மீன் பண்ண வேணாம். தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை கரண். ஒரு சிக்கலுக்கு நாம் சரியான விடையை தேட முடிவதில்லை. எல்லாம் சரியாகி விடும்” என்றான். அங்கிருந்த சதா,

“ஆமாம் அண்ணி, நீங்கள் வருத்தப்படாதீர்கள். நாம் சால்வ் செய்ய பார்ப்போம்” என்றாள்.

“என்னை சமாதானப்படுத்த முயற்சிக்காதீர்கள். எனக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது” என்று அழுதவாறே சாரு சொன்னாள்.

“இன்னும் ஏஜ் இருக்கிறது சிஸ்டர்.”

“அதைத்தான் நானும் சொல்கிறேன். கேட்கணுமே?” கரண் அலுத்துக் கொண்டான்.

“ஆமாம், ஒரு சில முறை தோல்வியடைந்த விசயம் முடிக்கவே முடியாது என்று சொல்ல முடியாது. சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்”

“அண்ணா, இந்த மாதிரி யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் உண்மை என்ற ஒன்று உள்ளது. அதை மாற்ற யாராலும் முடியாது.”

“எந்த உண்மை? உன்னுடைய கருப்பை கோளாறுதானே. அதைபற்றி  நாங்கள் பேசிக் கொள்கிறோம். நீ அமைதியாக இருக்க வேண்டும். இப்படி மேலும் மேலும் கவலைபடுவதால் உன்னுடைய உடல்நிலை மேலும் பாதிப்படையும்.” என்று கரண் கூற,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ம், நான் கொஞ்சம் பேசலாமா?” என்று குறுக்கிட்ட புவன் தொடர்ந்தான்,

“சிஸ்டர் இதுபோல நானும் நம்பிக்கை இழந்துதான் இருந்தேன். ஒரு வருடத்திற்கு முன் என்னால் படுக்கையைவிட்டு எழவே முடியாது.  முதுகுவடத்தில் ஒரு அடிபட்டு வலுவிழந்து போய்விட்டது.”

“எப்படி அடிபட்டது புவன்?” கரண் விசாரித்தான்.

“அது…  ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு கார் ஆக்ஸிடெண்ட்…  மும்பை ஹைவேயில்… அம்மா, அப்பா, தங்கை அனைவரும் இறந்து விட்டனர். நான் மட்டும் சாலையில் சரிவில் தூக்கி எறியப்பட்டு உயிர் பிழைத்தேன். எனக்கு ஒன்றும் சீரியஸாக அடிபடவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் முதுகில்பட்ட அடியின் விளைவு தெரிந்தது. திடீரென்று முதுகில் ஆரம்பித்த வலி ஜஸ்ட் ஒரே வாரத்தில் தீவிரமாகி எழுந்து நடக்க முடியாத அளவிற்கு சென்று விட்டது”

“ஓ அப்புறம் என்னாச்சு?” சதா ஆர்வமாகினாள்.

“என்னுடைய டாக்டர் இது க்யூர் செய்ய முடியாது என்று சொன்னார்.  அடிபட்ட உடன் கண்டுபிடித்திருந்தால் சரி செய்து இருக்கலாம். காலம் கடந்துவிட்டது என்றார்.”

“ஓ…”

“இப்படித்தான் நானும் நம்பிக்கை இழந்து இருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இங்கு ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் மூலிகை மருத்துவர் அப்படின்னு நினைக்கிறேன்…. இதற்கு சிகிச்சை செய்ய முடியும் என்றார்… சம்திங் லைக் தைலம் செஞ்சு அதுலேயே படுக்க வச்சாங்க. ஒரு வாரம் கழித்து கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. எனக்கும் நம்பிக்கை வந்தது. அந்த சிகிச்சைக்கு கோ-அப் பண்ண ஆரம்பித்தேன்”

“ஆமாம் தைலத்தில் ஊறப்போட்டு எலும்பை பலப்படுத்துவார்கள். கேரள வைத்திய முறையாக்கும். “ என்று கரண் எடுத்து கூறினான்.

“ஒரளவிற்கு சரியானபின், சீக்கிரம் குணப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் ஆப்ரேஷன் செய்து சரியாகி விட்டேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் உங்களுக்கும் அதுபோல் செய்து பார்க்கலாமா என்று தோன்றியது”

“சாரு… புவன் சொன்னவரை போய் பார்க்கலாமா?”

“எதற்கு வீண் முயற்சி…   நீங்கள் வேறு திருமணம்….” சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்ட,

“லூசா நீ…. இப்போது நான் சொல்வதை கேள். இந்த ட்ரீட்மெண்ட்தான் கடைசி. இதிலும் முடியவில்லை என்றால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக்கலாம்” என்று முடித்து விட்டான்.  சாரு தலையசைத்து,

“நான் என்ன….”

“ஜஸ்ட் ஷட்-அப். இதுதான் ஃபைனல்” என்று கண்டிப்புடன் கூறினான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த சாருவிற்கு கண்கள் கலங்க, உதட்டை கடித்து அழுகையை அடக்க முயற்சித்தாள். அவளை பார்த்த உடன் நொடியில் மனம் கரைய “சாரு டியர்…” என்று கரண் பேச் ஆரம்பிக்க, சதாவும் புவனும் அந்த அறையைவிட்டு வெளியேறினார்கள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 11 - சாகம்பரி குமார்saaru 2018-11-14 11:29
Super dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 11 - சாகம்பரி குமார்SAJU 2018-11-13 20:38
nice ud sis
all ready veeteell oru psycolgy stdentpaaaaaaaaaaa
ha ha yen ponnnuuuuuuu BSC 2ND YEAR
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-11-13 19:23
:thnkx: for the cute epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 11 - சாகம்பரி குமார்AdharvJo 2018-11-13 19:07
No problem Ms sagampari indha update-k mikka nandri...it was interesting :clap: :clap: I totally agree its not worth to ruin our life by yearning for things which is never gonna happen...believe me I was thinking about dis in the evening....maybe idhu than reality-n alert kodukudho enamo :-) POSITIVE thinking :yes: look forward for next update. Keep rocking (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 11 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-11-13 17:33
சூப்பர்... :clap: :clap:
என்ன மேம் ஜாம்மின்ரி பாக்ஸ் பத்தி சொல்லவேயில்லையே... :sad:
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top