(Reading time: 9 - 18 minutes)

“இல்லை சக்தி... காலேஜ் ஆரம்பிச்ச புதுசுங்கறதால கொஞ்சம் அடக்கி வாசிக்கறேன்... இன்னும் ஒரு ரெண்டு மாசம் போகட்டும்... அதுக்கு பிறகு என்னோட ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறேன்....”

“ஏற்கனவே ரொம்ப லேட் சந்தியா... உன்னால எத்தனை சீக்கிரம் முடியுமா அவ்ளோ சீக்கிரம் ஆரம்பிச்சுடு....”, சக்தியிடம் பேசிவிட்டு அலைபேசியை வைக்க மாலுவும், காயத்ரியும் அவளை நோக்கி வந்தார்கள்....

அதே நேரம் லேப் அறையிலிருந்து சிலர் அலறும் சத்தம் பயங்கரமாகக் கேட்டது.....

டேய் சதீஷ்.... குழந்தை மாதிரி பண்ணாதடா.... டாக்டர் அப்பாயின்ட்மென்ட்டுக்கு டைம் ஆகிடுச்சுடா... சீக்கிரம் கிளம்புடா...”

“சுந்தர் எனக்குதான் சரியா போச்சே.... பாரு அந்த டாக்டர் கொடுத்த மாத்திரை சாப்பிட்ட பிறகு வலிக்கூட வரவே இல்லை....”

“போன முறையும் இப்படித்தான் மாத்திரை போட்ட உடனே குணமாச்சு... அடுத்த ஒரு வாரத்துல திரும்ப வயித்து வலி வந்துடுச்சு.... அதனால இன்னைக்கு நாம டெஸ்ட் பண்ணியே ஆகறோம்....”

“டேய் நிலைமை தெரியாம பேசாதடா.... என்கிட்டே சுத்தமா பணம் இல்லை... டெஸ்ட் அது இதுன்னா கண்டிப்பா நம்மக்கிட்ட பணம் கேப்பாங்க...”

“தெரியும்டா நீ இப்படி சொல்லுவேன்னு... அதுனாலதான் நான் அப்பாக்கிட்ட பணம் அனுப்ப சொல்லிட்டேன்.... அவரும் அக்கௌன்ட்ல போட்டுட்டாரு.....”

“டேய் ஏண்டா இப்படி பண்ணின.... நீங்களும் நடுத்தர வர்க்கம்தானேடா.... உங்கப்பாக்கும் கஷ்டம்தானே.....”

“உன் அளவுக்கு இல்லைடா.... அதுவும் இல்லாம அப்பாக்கு இந்த மாசம் ஏதோ அரியர் பணம் வந்துதாம்... அதனால கவலைப்படாத....”

இருவரும் கிளம்பி ஸ்பெஷலிஸ்டை பார்க்க சென்றார்கள்....

சிறிது நேர காத்திருப்பிற்கு பின் இருவரும் உள் சென்றனர்...

“வாங்க உக்காருங்க... யாருக்கு என்ன ப்ரோப்ளம்....”

“எனக்குத்தான் டாக்டர்... அடிக்கடி வயித்து வலி வருது... இங்க சகாயம் டாக்டர் பார்த்தோம்... அவர்தான் உங்களை பார்க்க சொல்லி அனுப்பினாரு....”, சகாயம் கொடுத்த லெட்டர் மற்றும் ரிப்போர்ட்டை அவரிடம் நீட்டியபடியே கூறினான் சதீஷ்.... 

ரிப்போர்ட்டை படித்த டாக்டர் சதீஷை மேஜையில் ஏறி படுக்க சொன்னார்... அவனை சோதித்து எந்த இடத்தில் வலி இருந்தது என்று கேட்டு ஸ்கேன் செய்து பார்க்க ஆரம்பித்தார்...

“கிட்டத்தட்ட மூணு மாசமா இந்த வலி இருக்கா... அல்சர் அறிகுறி லேசா இருக்கு... ஆனா இந்தளவு வலி வர அது மட்டுமே காரணமா இருக்காது.... அதனால  நீங்க இன்னொரு முறை ultra sound scan பண்ணிடுங்க....அதுல ஓரளவு  என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுடும்.... அப்படியும் தெரியலைன்னா அடுத்து CT ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்....”

“இதுக்கெல்லாம் ரொம்ப செலவாகுமா டாக்டர்... எங்கப்பா கடன் வாங்கித்தான் இங்க படிக்கவே அனுப்பி இருக்கார்.... திரும்பவும் அவர்க்கிட்ட பணம் கேக்க முடியாது....”

“நீ இங்க படிக்கற இல்லை... உனக்கு டெஸ்ட்க்கு குறைவாத்தான் சார்ஜ் பண்ணுவாங்க... ஸ்கேன் வரைக்கும் இரண்டாயிரத்தில இருந்து மூவாயிரம் ஆகும்...”

டாக்டர் சொல்ல சதீஷ் என்ன சொல்வது என்று யோசித்தான்....

“டேய் ரொம்ப யோசிக்காதடா... மூவாயிரம் ரூபாய் என்கிட்டே இருக்கு... அதனால first நாம டெஸ்ட் எடுத்திடலாம்.... அட்லீஸ்ட் எதுனால இப்படி வருது அப்படின்னாச்சும் தெரிஞ்சுக்கலாம்....”

“இந்த மூவாயிரம் ஓகேடா.... அதுல பிரச்சனையை கண்டுபிடிச்சுட்டா அதுக்கப்பறம் ட்ரீட்மெண்ட்டுக்கு எவ்வளவு ஆகுமோ....”

“இப்போவே எதுக்கு தம்பி அந்தளவு யோசிக்கறீங்க... இங்க நம்ம ஹாஸ்பிட்டல்ல நிறைய இலவச சிகிச்சை இருக்கு... அதல்லாம் அப்பறம் பேசிக்கலாம்... நீங்க மொதல்ல normal ஸ்கேன் எடுங்க... அது கம்மிதான்... அதுலயும் கண்டுபிடிக்க முடியலைன்னா அடுத்து CT ஸ்கேன் போகலாம்... அப்படியே blood, urine ரெண்டு டெஸ்ட்டுக்கும் எழுதி கொடுக்கறேன்..... அதையும் எதுத்துடுங்க.. எல்லா டெஸ்ட் ரிசல்ட்டும் எடுத்துட்டு என்னை வந்து பாருங்க....”,டாக்டர் சொல்ல இருவரும் பரிசோதனை நிலையம் நோக்கி சென்றார்கள்.....

“என்னடா மணி.... உடம்பை இப்படி புண்ணாக்கி வச்சிருக்க... ஒழுங்கா உண்மையை சொல்லிட்டு போய்டுடா....”

“சார் சத்தியமா நான் கொலை பண்ணலை சார்... காலைல இருந்து அம்மா அப்பா கூடத்தான் இருந்தேன்....”

“ஐயா சாமி முடியலை.... மொதலேர்ந்து ஆரம்பிக்கறானே... ஏண்டா டேய் நீ அந்த பொண்ணு பின்னாடி சுத்தி டார்ச்சர் பண்ணினது உண்மைதானே....”

“பின்னாடி சுத்தினதெல்லாம் உண்மைதான் சார்... ஆனா டார்ச்சர் எல்லாம் பண்ணலை.... நான் மெய்யாலுமே அந்த பொண்ணை லவ் பண்ணினேன் சார்....”

“இங்க பார்றா தெய்வீக காதலை.... அந்தப்பொண்ணு படிப்பென்ன உன் படிப்பென்ன.... அமைதியா போயிட்டு இருந்த புள்ளைய டார்ச்சர் பண்ணி இருக்க....”

“சார் நானும் டிகிரி படிச்சவன்தான் சார்... படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை... அதுதான் மெக்கானிக் ஷெட்ல வேலை செய்யுறேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.