(Reading time: 10 - 19 minutes)

வந்து இருக்கும் கொஞ்ச நேரத்தில் அல்மோஸ்ட் வெளியில் நமக்குத் தெரியாமல் இருக்கும் சிறு குறைகளைக் கூட கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து விடுவார். அவரின் பதில்கள் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், கனிவாகவும், பதில்கள் மழுப்பலாகவோ, அல்லது உண்மை இல்லாமலோ இருக்கும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுத்து விடுவார்.

ஷ்யாமும் கிட்டத்தட்ட அப்படிதான். என்ன ராம் எப்போது செய்வதை ஷ்யாம் மாதம் ஒருதடவையாவது வந்து விட்டு செல்வான். அவன் வருகை பற்றி முன்னதாகவே தெரிந்து விடும். அதனால் ஸ்டாப்ஸ் அலெர்ட்டாக இருப்பார்கள்.

இன்றைக்குத் தான் முன்னறிவிப்பு இல்லாமல் வந்தது. எனவே ஸ்டாப்ஸ் அவரவர் சீட்டிற்குப் போக,

ஷ்யாம் ரிசெப்ஷனிஸ்ட்டிடம்,

“என்ன மேடம்? என்ன பிரச்சினை?” என்று வினவினான்.

“சார், இவர் மித்ரா மேடம பார்க்கனும்னு சொல்றார். நேற்றைக்குத் தான் மைதிலி மேம், அவங்களை தனிப்பட்ட முறையில் யாரும் பார்க்கனும்னு சொன்னால், முதலில் அவங்களிடம் அனுப்பச் சொன்னங்க. மைதிலி மேடம் இல்லாததால் போய்விட்டு பிறகு வாங்க என்று சொன்னால், கேட்க மாட்டிங்குறார். நான் யார் தெரியுமா? மேடம்க்கு என்னை பர்சனலாத் தெரியும். அப்படி இப்படின்னு சொல்லிட்டு , உள்ளே விடச் சொல்றார்.”

“ஏன் மிஸ்டர் சரவணன்? நீங்களும் கம்பெனி ரன் பண்றவர் தானே.? அவங்க வேலை என்னவோ அவங்க அதத் தான் செய்வாங்க? நீங்க ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க?

நேரடியாக சரவணனைக் கேட்டான் ஷ்யாம். அதற்குப் பதில் சொல்லத் திணறினான் சரவணன்.

“சரி என்னோடு வாங்க. “ என்று கூறி மித்ரா காபினிற்கு அழைத்துச் சென்றான்.

சரவணன் தப்பிக்க முடியாமல், ஷ்யாமோடு சென்றான். எப்படியாவது மித்ராவிற்கும், ஷ்யாமிற்கும் நடுவில் குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, ஏற்கனவே மித்ரா பிடிக் கொடுத்து பேசவில்லை. இப்போது நேரடியாக அவனிடம் மாட்டி விடக் கூடாது என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டான்.

மித்ரா அறைக் கதவைத் தட்டி உள்ளே சென்ற ஷ்யாமைப் பார்த்து , மிகுந்த ஆச்சர்யம் அடைந்தாள்.

“ஹாய் அத்து. ஆபீஸ் வரதைச் சொல்லவேயில்லை”

“நாந்தான் அம்மாவ ட்ரோப் பண்ணிட வருவேன்னு சொன்னேனேடா” என்றுக் கூறிக் கொண்டே அவள் அருகில் மேஜையில் சாய்ந்து நின்று கொண்டான்.

சரவனனனுக்கு எரிச்சலாக வந்தது. கிட்டத்தட்ட ஐந்து , ஆறு நாட்களாக வந்து விதம் விதமாக பேசி அவளுக்கு ஷ்யாம் மேல் சந்தேகம் வரச் செய்ய முடியுமா என்று பார்த்தான்.

ஆனால் இங்கே பார்த்தால், இந்த மகாராணி, அதைப் பற்றி சட்டை செய்ததாகக் கூடத் தெரியவில்லையே. எத்தனை விதமாகப் பேசிய போதும் பர்சனல் டாக்ஸ் வேண்டாம் என்று மட்டும் தானே சொன்னாள்.

இவளுக்கு இந்த அளவு தைரியமும், சமாளிக்கும் திறனும் இருக்கா? இதை எல்லாம் அறியாமல் அவசரப் பட்டு அவளுடனான திருமணத்தை நிறுத்தி விட்டோமே? ச்சே? என்று எண்ணிக் கொண்டான்.

அதோடு இல்லாமல், மித்ரா அக்கறையாக ஏதோ கேட்க, ஷ்யாம் மென்மையாகப் பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். அவள் இன்றைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்து இருக்க, படியாத ஒன்றிரண்டு குழல்கள் அவளின் கண்ணை மறைக்கப் பார்த்தது.

அவளை நோட்டமிட்டபடியே பேசிக் கொண்டிருந்த, ஷ்யாம், அந்த முடிகளை ஒதுக்கி விட்டான். பார்க்கவே கவித்துவமான அந்தக் காட்சியைக் கண்ட சரவணனோ பல்லைக் கடித்தான்.

சற்று நேரம் அதை ஓரக் கண்ணால் பார்த்து ரசித்த ஷ்யாம், பிறகு மித்ராவிடம் திரும்பி

“மித்தும்மா, இவர் உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாரம். அம்மா , ஏதோ இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து இருக்காங்களாம் ரிசெப்ஷனிஸ்ட் கிட்ட. அதான் என்ன செய்யறதுன்னு பார்த்துக்கிட்டு இருந்ததால் நானே உள்ளே அழைசுகிட்டு வந்துட்டேன்.”

மித்ரா சரவணனை எரிச்சலோடு பார்த்து விட்டு “என்ன சொல்லணும்? என்று கேட்டாள்.

“நான் பெர்சொனலா பேசணும்?

“கணவன் மனைவிக்கு நடுவில் என்ன ஒளிவு மறைவு? உங்களுக்கு என்ன கேட்கணுமோ, அதைக் கேட்டுட்டுக்  கிளம்புங்க?

“அதான் அன்னைக்கே சொன்னேனே? “ என்றான்

“அது உங்களுக்குத் தேவை இல்லாததுன்னு ஏற்கனவே சொல்-லிட்டேன். ஆபீசியல் எதுவும் இருந்தாப் பாருங்க. இல்லையா கிளம்பிட்டே இருங்க” என்று சொல்லவும், மூஞ்சி  சுருங்கிக் கிளம்பினான்.

“ஹலோ மிஸ்டர்” என்று ஷ்யாம் அவனைத் தடுக்க, அவன் திரும்பிப் பார்க்கவும்,

“இனிமேல் என் மனைவியை நீங்க பெர்சொனலா சந்திக்க வேண்டிய அவசியம் எங்கியும் இருக்காது. இருக்கவும் கூடாது. அப்படி உங்களுக்கு எதுவும் சொன்னலனும்னு தேவைப் பட்டா,  எனக்கே சொல்லுங்க. புரியுதா? என, சரவணன் தலையாட்டிவிட்டு வேகமாக வெளியேறிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.