(Reading time: 6 - 12 minutes)

அதை மறந்து விட்டு நடந்ததையே நினைத்து கொண்டு இருந்தாள் அது அவளுக்கு மேலும் துன்பத்தையே தரும். அவளே எனது மனைவி ஆக வேண்டும் என்று விரும்பினேன் அதுவும் நடந்தாகி விட்டது. இந்த திருமணத்தில் அவளுக்கும் முழு சம்மதமே. பிறகு, ஏன் நான் இப்படி இருக்கிறேன். நான் அல்லவா அவளுக்கு தைரியம் சொல்ல வேண்டும். இனி அவளை சந்தோஷமாக வைத்து கொள்வதே என் முதல் குறிக்கோளாக இருக்கும் என்று நினைத்து கொண்டே நிகழ்வுக்கு வந்தான். அப்போது அந்த கோவிலில் பிரசாதம் கொடுத்து கொண்டு இருந்தனர். எதோ நினைவு வந்தவனாக தன் இதழ்களை புன்முறுவலிதான். பின் தமிழ் இடம் திரும்பி,

தமிழ்....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ம்...

பிரசாதம் தராங்க வா போய் வாங்கலாம்

இல்ல எனக்கு வேணாம் நீங்க போய் வாங்கிக்கோங்க

ஒய்... நம்ம ஊர் கோவில்ல பிரசாதம் எப்போ குடுப்பாங்க னு லைன் ல நின்னு வாங்குவ இப்ப என்ன வேணாம் னு சொல்ற?

அது சின்ன வயசுல இப்போ ல அப்டி கிடையாது.

அப்படியா?

ம்...

“அப்போ போன வெள்ளி கிழம உன்ன மாதிரியே ஒரு பொண்ணு நம்ம ஊரு அம்மன் கோவில் ல புளியோதரையும் பொங்கலையும் ரெண்டு கைல வச்சு கிட்டு மாறி மாறி ரசிச்சி சாப்டுட்டு இருந்தாலே அது நீ இல்லையா? நா நீ னு தான நெனச்சேன்”, என்றான் கண்ணில் குறும்பு மின்ன.

அதை கேட்ட  தமிழ் வெட்கப்புன்னகையோடு, “போ மாமா” என்றாள்.

அவளின் வெட்கத்தை ரசித்த வாரே அவளின் கை பற்றி அழைத்து சென்று அவளோடு அந்த வரிசையில் நின்று கொண்டான்.

சூடான வெண்பொங்களோடு வந்து ஒரு மரத்திற்கு கீழ் அமர்ந்தனர்  இருவரும். என்ன தான் அவளை இவன் சகஜம் ஆக்க  முயற்சித்தாலும் அவள் முகத்தில் இன்னும் வாட்டம் இருக்க தான் செய்தது. அதை கண்ட அவன் ,

தமிழ்...

ம்...

இது வரைக்கும் நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும், இனிமே நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும். எப்பவும் நான் உன் கூட இருப்பேன். என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல?

என்ன மாமா இப்டி கேக்குற. நா உன்ன மட்டும் தான் நம்புறேன்.

நிச்சயம் உன் நம்பிக்கையை காப்பாத்துவேன். என் உயிரா உன்ன பாத்துப்பேன், என்று அவன் தனது கையை நீட்ட அவளும் அவனின் கையில் தன் கையை வைத்து காதலுடன் பார்த்தாள்.

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்க்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே...    

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1228}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.