(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 01 - மஹா

enathuyire

திருச்சி பேருந்து நிறுத்தத்தில் வந்து அந்த பேருந்து நிற்கும் போது சரியாக நேரம் காலை 5.20. பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி இன்றைய கலெக்ஷனை ஒப்படைக்க சென்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டு இருந்தனர். அதே நேரம் அந்த பேருந்தில் அமர்ந்து இருந்த அன்பு அவன் தோளில் சோர்வுடன் சாய்ந்து உறங்கி கொண்டு இருந்த தமிழை காதலுடன் பார்த்து கொண்டு இருந்தான். மெல்ல அவளை அழைத்தான்,

தமிழ்... தமிழ்...

சிறு அசைவுடன் மெல்ல எழுந்தவள் அவனை பார்த்தாள், 

“தமிழ் நாம எறங்குற இடம் வந்துடுச்சு வா”, என அழைத்தான்.

சரி என்று தலை அசைத்தவள் அவன் பின்னே எழுந்து நடந்து சென்றாள்.

 பேருந்தில் இருந்து இறங்கியவன் எங்கு செல்வது என்று தெரியாமல் அவளின் கையை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவனின் ஸ்பரிசம், அருகாமை அவளுக்கு பெரும் தைரியத்தையும் மன நிம்மதியையும் அளித்தது.

சற்று தொலைவிலே ஒரு தள்ளு வண்டி கடை அருகே சிறிய கோவில் ஒன்று இருந்தது. அதனருகே நின்றவன் அவளை ஒரு முறை தீர்க்கமாக பார்த்து விட்டு அவளின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினான்.  ஏற்கனவே அழுது அழுது சோர்ந்து போன அவளின் கண்களில் வரலாமா வேண்டாமா என்று எட்டி பார்த்த கண்ணீர் அவளின் கன்னங்கள் வழியே வழிய தொடங்கியது. இடம் வலமாக மெல்ல தலை அசைத்தவன் அவளின் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்து அவளின் கை பற்றி மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். 

என்ன தான் இது பெரியோர்கள் முன்னிலையில் அவர்கள் ஆசிர்வாதத்தோடு சகல சம்ரதாயங்களோடு இந்த திருமணம் நடக்க வில்லையே என்று சிறு ஏக்கம், கவலை இருந்தாலும் மாமன் கையால் கிடைத்த தாலி அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் தந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இதை பார்த்து கொண்டு இருந்த  தள்ளு வண்டி கடையை வைத்து இருக்கும் கணவன் மனைவி இருவரும் ஒன்றும் புரியாது அதிர்ச்சியுடன் அங்கே நடந்ததை பார்த்து கொண்டு இருந்தனர்.

“என்னடி இது எதோ சினிமா ல பாக்குற மாதிரி இருக்கு” , கணவன்.

“ஆமாங்க... என்னனு தெரிலையே”, மனைவி.

இவர்கள் பேசி கொண்டு இருந்த சமையம் அன்பு பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்து இருந்தான். அங்கே ஊருக்குள் செல்லும் ஒரு சிறிய பேருந்து நின்று கொண்டு இருந்தது. என்ன தோன்றியது என்று தெரிய வில்லை , உடனே தமிழுடன் அந்த பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டான்.

அது விடியற்காலை நேரம் என்பதால் கூட்டம் ஒன்றும் இல்லை, அந்த பேருந்தில் அங்கங்கே பயணிகள் அமர்ந்து இருந்தனர். பேருந்தில் ஒலித்து கொண்டுஇருந்த, “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு... பூத்துருச்சு வெட்கத்தை விட்டு”... என்ற இசைஞானி இளையராஜாவின் பாட்டும் பயணிகள் தங்களுக்குள் பேசி கொண்டு வந்ததும் கலகலப்பு சேர்த்தாலும் தமிழும் ,அன்பும் மௌனமாகவே இருந்தனர் நடத்துனர் அவர்கள் முன்பு வந்து நிற்கும் வரை,

டிக்கெட்... டிக்கெட்... எங்க போனும்

சற்று யோசித்தவன், “கடைசி ஸ்டாப்க்கு ரெண்டு டிக்கெட்” என்றான்.

அவர்கள் இருவரையும் மீண்டும் ஒருமுறை ஒருவாறு பார்த்த நடத்துனர், தனது வேலையை முடித்து கொண்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்துவிட்டார்.

அந்த பேருந்தின் கடைசி நிறுத்தத்தில் இருவரும் இறங்கி கொண்டனர். பச்சை பசேல் என்று காற்றில் ஆடி கொண்டிருக்கும் வயல் வேலிகளை கொண்ட அழகான கிராமத்தை பார்த்த இருவருக்கும் மனம் அமைதியானது போல் தோன்றியது. நிச்சயம் இந்த மாற்றம் தங்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்று இருவருக்குமே தோன்றியது.

அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் இருவரும் சென்று வழிபட்டுவிட்டு ஓர் இடத்தில் அமர்ந்தனர். அப்போது அவர்கள் பின்னாலிருந்து ஒரு அறுவது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா அவர்களிடம் வந்து,

“புதுசா கல்யாணம் ஆனவங்களா... ??? இந்த மா இந்த பூவை தலைல வச்சிக்கோ என்று தமிழின் கையில் பூவை கொடுத்தார். புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியா தலைல பூ இல்லாம இருப்ப இத முதல வச்சிக்கோ”, என்று கூறி விட்டு சென்று விட்டார்.

பெரியவர்கள் யாரும் இன்றி நடந்த இந்த திருமணத்தை நினைத்து இருவரும் வருத்தி கொண்டு இருந்த நேரம் அந்த பாட்டியின் கிராமத்து வெகுளி பேச்சும் கண்டிப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையே தந்தது. தமிழ் அவர் கொடுத்த பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டு இருந்தாள். அதே நேரம் அன்புக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது, இவள் தன்னையே நம்பி தன்னுடன் வந்து இருக்கிறாள். இவளை நன்றாக பார்த்து கொள்ளும் பொறுப்பு இவனுடையதே என்று. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.